உயிர் காக்கும் எஸ்.எம்.எஸ்!



யானை தாக்கி சமீப மாதங்களில் வால்பாறை தேயிலைத் தோட்ட கிராமங்களில் உயிரிழந்தவர்கள் 41 பேர். ‘நேச்சர் கன்சர்வேஷன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு இவர்களின் மரணம் பற்றி ஆய்வு செய்ததில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிந்தது. யானை நடமாட்டம் பற்றி சில நிமிடங்களுக்கு முன்னதாக தகவல் கொடுத்திருந்தால், இவர்களில் 36 பேரைக் காப்பாற்றி இருக்க முடியும்.

இப்போது அதைத்தான் செய்கிறது அந்த அமைப்பு. யானைகளைக் கண்காணித்து, ஏதாவது ஊருக்குள்ளோ, தோட்டத்திலோ அவை நுழைந்தால், உடனே அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு எஸ்.எம்.எஸ் போய்விடும். அத்தனை பேரின் செல்போன் நம்பர்களையும் சேகரித்து, ஒரே க்ளிக்கில் 1500 பேருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட முடியும். மெஸேஜ் வந்ததும் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.வாட்ஸ் அப் வந்ததும் எஸ்.எம்.எஸ் மதிப்பிழந்துவிட்டது என யார் சொன்னது?