ஜோக்ஸ்




‘‘என்னாச்சு சிஸ்டர்..?’’

‘‘நீங்க மருந்தை ஃபாலோ பண்ணச் சொன்னதை இந்த பேஷன்ட் தப்பா புரிஞ்சிக்கிட்டு என்னை ஃபாலோ பண்றார்!’’
- அ.ரியாஸ், சேலம்.

ஸ்பீக்கரு...

‘‘அன்புத் தொண்டர்களே... இன்றைக்கு என் பேச்சை கேட்க நீங்க வராவிட்டால், இனி வாரந்தோறும் நேரடியாக உங்கள் வீடு தேடி வந்து பேசுவேன் என எச்சரிக்கிறேன்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

தத்துவம் மச்சி தத்துவம்

யோகா படிச்சா யோகாசனம் பண்ணலாம்; சிரசாசனம்
பண்ணலாம். சிம்மாசனம்
பண்ண முடியுமா?
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

‘‘தலைவருக்கு கண்ணு சரியா
தெரியலைன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘யாருமில்லாத மைதானத்தைப் பார்த்து
சந்தோஷமா கையசைக்கிறாரே!’’
- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

‘‘தலைவரை ஜெயில்ல ஏன் முட்டி போடச் சொல்றாங்க..?’’
‘‘கம்பி தப்பு தப்பா எண்ணினாராம்...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது அமைச்சரே!’’
‘‘நீங்கள் எதிரிகளுக்கு அடிமையாவதையே பழக்கமாக வைத்துள்ளீர்களே மன்னா!’’
- கி.ரவிக்குமார்,
நெய்வேலி.

‘‘இப்ப தலை சுற்று எப்படி இருக்கு..?’’
‘‘நர்ஸைப் பார்த்ததும் மனசு அவங்க பக்கமா சுற்றுது டாக்டர்!’’
- அம்பை தேவா, சென்னை-116.