நியூஸ் வே



*‘ஆல் இன் ஆல்’ ஹீரோயின் ராதிகா ஆப்தேயின் சாயலில் ஆபாச செல்ஃபி படங்கள் வாட்ஸ் அப்பில் ஒரு பக்கம் உலவினாலும், இதைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் நாடகம் ஒன்றிற்காக லண்டன் சென்றிருக்கிறார் ஆப்தே. அங்கே பிரிட்டிஷ் நாடகம் ஒன்றில் இந்தியப் பெண்ணாக நடிக்கிறார். ‘‘இதற்கான ஆடிஷன் ஸ்கைப் மூலம் நடத்தினாங்க. என் பர்ஃபாமென்ஸ் பார்த்து கிடைச்ச வாய்ப்பு இது’’ என மகிழ்கிறார். 


*காத்திருந்து காத்திருந்து சிவகார்த்திகேயன் கால்ஷீட்டை வாங்கி விட்டார் சுந்தர்.சி. அந்தப் படத்தையும் குஷ்புவே தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் நண்பராக சதீஷ் ‘ஜோடி’ சேர்கிறார். சந்தானத்தை ஆட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா பாஸ்!

*‘உத்தம வில்லன்’ ரிலீஸ் இன்னும் தாமதமாகலாம் என்கிறார்கள். காரணம், வில்லனை ஈராஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அவர்களின் முன்பு இப்போது ‘லிங்கா’ பஞ்சாயத்து நடந்துகொண்டு இருக்கிறது. அதை முடித்த பின்பே இந்த ரிலீஸ் வேலையைப் பார்க்க முடியும் என்கிறார்கள். வில்லனுக்கே ‘லிங்கா’ வில்லனா?

*நீண்ட நாட்களுக்குப் பிறகு வஸந்த் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்தை சத்தம் காட்டாமல் இயக்குகிறார். அதில் பத்மப்ரியா மெயின் கேரக்டரில் வருகிறார். கல்யாணக் களை அப்படியே இருக்கா?

*ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து உலக சாதனை படைத்திருக்கிறார் இளையராஜா. தமிழ் திரையுலகம் அவருக்கு பாராட்டு விழா எடுக்கும் முன்பே, பாலிவுட்டில் பால்கி முந்திக்கொண்டுவிட்டார். மும்பையில் ‘ஷமிதாப்’ இசை வெளியீட்டில் அமிதாப், ரஜினி, கமல், ஸ்ரீதேவி முன்னிலையில் ராஜாவை கௌரவித்தனர். விழாவில் அக்ஷராவுக்கு ரஜினி ‘கங்கிராட்ஸ்’ சொன்னது இன்னும் அழகு.

*கௌதம் மேனன் மற்றும் ஷங்கரின் அடுத்த படங்களில் வழக்கம்போல் இசை ஹாரிஸ், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் அல்ல. இரண்டுக்கும் இசையமைப்பவர் அனிருத். ஷங்கர் ஒருபடி மேலே போய் அட்வான்ஸைக் கூட அனிருத்துக்குக் கொடுத்துவிட்டார். காட்டுல மழை!

*படங்களை உடனுக்குடன் முடித்துவிட்டு அடுத்த படத்திற்குப் போய் விடுகிறார் விஜய் ஆண்டனி. படங்களுக்கான விளம்பரம், வெளியீட்டு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் அவரது மனைவி ஃபாத்திமா ஆண்டனியே திறமையாக செய்து முடித்து விடுகிறார்.

*‘கப்பல்’ ஹீரோயின் சோனம் பஜ்வாவின் பூர்வீகம் பஞ்சாப் என்றாலும், சென்னையில் அவருக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்களாம். அதில் பலபேருக்கு ‘டமிள்’ நல்லா தெரியுமாம்.

*உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான ஹாரி வின்ஸ்டன் ஜுவல்லர்ஸின் உருவாக்கமான அரிய வகை வைர மோதிரத்தை த்ரிஷாவுக்கு பரிசளிக்கிறார் வருண் மணியன். திருமணம் முடித்தபிறகு ஹனிமூனுக்கு குறிப்பிட்ட நாடு என்றில்லாமல் உலக சுற்றுப்பயணம் போகப் போகி றார்களாம்.

*மறுபடியும் 80களின் ஹீரோ, ஹீரோயின்கள் கூடுகிறார்கள். இதுவரைக்கும் தனியான சந்திப்பாக நடந்து போட்டோ எடுத்துக்கொண்டவர்கள், இப்போது அதை வீடியோ தொகுப்பாக்கி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதில் பிரபலமான ரஜினி, கமல் படங்களின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஆடுகிறார் சிம்பு.

*‘பிசாசு’ ஹீரோயின் பிரயகா, மலையாளத்தில் ஃபஹத் பாசில் ஜோடியாக படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். ‘‘ரொம்ப லக்கியா ஃபீல் பண்றேன். படத்துக்கு ‘கார்ட்டூன்’னு டைட்டில் வச்சிருக்காங்க. இது குழந்தைகள் படமல்ல. த்ரில்லர் மூவி’’ என்கிறார் பிரயகா.

*‘கணிதன்’ படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறார் அதர்வா. ‘மெட்ராஸ்’ கேத்ரின் தெரஸா ஹீரோயின். இன்னும் ஒரு பாடல் மட்டும் ஷூட் செய்ய வேண்டியிருக்கிறதாம். பிப்ரவரி இறுதியில் படம் ரிலீஸ். ஏகப்பட்ட லொகேஷன்களில் ஷூட் செய்ய வேண்டியிருந்ததால்தான் படம் வெளியாக தாமதம் ஆகியதாம்!

*‘ஆடாம ஜெயிச்சோமடா’விற்கு டயலாக் எழுதிய சிவா, அடுத்து ஒரு படம் டைரக்ட் பண்ணும் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே சி.வி.குமாரின் தயாரிப்பில் ‘144’ படத்தில் நடிக்கிறார். இதன் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் மதுரையில் தொடங்குகிறது.

*எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ‘சகாப்தம்’ படத்தை முடித்துவிட்டார் கேப்டன். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் கேப்டனே பார்த்துப் பார்த்து உருவாக்குகிறார். ‘‘வந்தது வரட்டும் விடு, பார்த்துக்கொள்ளலாம், இது உனக்கு டிரையல்தான்!’’ என மகன் சண்முகப்பாண்டியனுக்கு தைரியம் கொடுத்துவிட்டார். சந்தேகமேயில்லை, ஃபைட் பின்னும்!

*விஜய்யின் ‘புலி’யை ஏப்ரலில் வெளியிட்டு விட வேண்டும் என்ற டார்கெட்டோடு விறுவிறுவென ஷூட்டிங் நடந்துவருகிறது. யூனிட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் பொங்கலுக்கு முன்னதாக தங்கக்காசு பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார் விஜய். வழக்கமாக தனது படங்களின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்த பிறகே யூனிட்டிற்கு கிஃப்ட் கொடுப்பது அவரது வழக்கம். இந்த முறை அட்வான்ஸாகவே கிஃப்ட் கிடைத்திருப்பதில் யூனிட்டே மகிழ்ந்திருக்கிறது.

*கமலுடன் அடுத்தடுத்து 2 படங்களில் நடித்து வரும் பூஜா குமார் பெரும்பாலும் இருப்பது அமெரிக்காவில். அங்கு நியூயார்க்கில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக அவர் இருக்கிறார். இதற்கான நிதி சேகரிப்புக்கு அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுக்கிறார்.

*‘நானும் ரவுடிதான்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் காதல் காட்சிகளில் அதிகமாக வெட்கப்படுவது நயன்தாரா இல்லை; விஜய் சேதுபதிதான். இதை யூனிட்டில் பெரிதாக கிண்டல் பண்ணி சிரிக்கிறார்களாம். ‘‘ரொம்ப வித்தியாசமாக இருக்கிறார் இந்த மனிதர்’’ என நயனே ஆச்சரியப்படுகிற ஒரே நடிகர் சேதுபதிதான். நிஜமாகவே நடிப்பா பாஸ்?