ஜோக்ஸ்




ஆளே இல்லாத இடத்துக்குப் போய் அமைதியா கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கணுமே... எங்கய்யா போகலாம்?’’
‘‘நம்ம கட்சி ஆபீசுக்குப் போகலாம் தலைவரே!’’
- மு.மதிவாணன், அரூர்.

நீங்க நியூட்ரினோவை ஆதரிக்கிறீங்களா தலைவரே..?’’
‘‘ஏன்யா... கூடாதா? அது நல்ல சாக்லெட்தானே!’’
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.

என்ன புலவரே இது... ஒரு பாடலுக்கு இரண்டு பேர் சன்மானம்
கேட்கிறீர்கள்?’’
‘‘அவரோட பாடலைத்தான் நான் ரீமேக் பண்ணி பாடினேன் மன்னா..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

உங்க பெண்ணுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை பெரிய குடிகாரன்னு
எப்படிச் சொல்றீங்க?’’
‘‘கல்யாணத்துல சீர் வரிசைக்குப்
பதிலாக 10 கேஸ் பீர் வச்சு, ‘பீர்
வரிசை’ செய்யணும்னு சொல்றாரு!’’
- ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.

தத்துவம் மச்சி தத்துவம்

வீட்டுக்கு வேணும்னா ‘அலிகார் பூட்டு’ வாங்கலாம். கேட்டுக்கு வேணும்னா ‘திண்டுக்கல் பூட்டு’ வாங்கலாம். ஆனா வாய்க்குப் போட ‘வாய்ப்பூட்டு’ எங்காவது கிடைக்குமா?
- ஓய்வின்றிப் பேசும் ‘வாயுள்ளோர்’ சங்கம்.
- அ.ராசப்பன்,
கருமத்தம்பட்டி.

‘‘தலைவரது மீட்டிங் நடக்கும் மைதானத்துக்குப் பக்கத்தில் வேண்டு மென்றே நடைபாதை செருப்புக்
கடைகளைத் திறந்திருக்கும்
எதிர்க்கட்சியினரை வன்மையாகக் கண்டிக்கிறோம்...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

திரும்பவும் ஏதாவது குற்றம் பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடலாம்னு இருக்குய்யா!’’
‘‘ஏன் தலைவரே..?’’
‘‘இடம் மாறினா தூக்கம் வர மாட்டேங்குது!’’
- அ.ரியாஸ், சேலம்.