ஜூஸ்



‘‘நேத்து கீழ் வீட்டுக்காரம்மாவுக்கு சாக்லெட் கொடுக்கப் போய் செமையா வாங்கிக் கட்டிக்கொண்டேன்...’’என்றாள் மாலா, தன் கணவன் பாலனிடம்.‘‘ஏன்... என்ன சொன்னாங்க?’’‘‘அடிக்காத குறையா பேசினாங்க. ‘இதெல்லாம் கெட்ட பழக்கம். எங்களைக் கேட்காமல் இப்படி சாக்லெட், ஸ்வீட் எல்லாம் கொண்டு வருகிற வேலையை நிறுத்திக்க’ன்னு அடிச்சுச் சொல்லி விரட்டிட்டாங்க...’’ என்றாள்.

‘‘பார்த்தா அப்படி ஒன்றும் பொல்லாதவங்களா தெரியலையே’’ என்று பாலன் சொல்லிக் கொண்டிருந்தபோதே கீழ் வீட்டுக்காரம்மாவின் கணவர் கோபி வந்து வாசலில் நின்றார். ‘‘தம்பி... ஒரு ஹெல்ப்’’ என்றார்.‘‘என்ன?’’ என்று வேண்டாவெறுப்பாக வரவேற்றான் பாலன்.‘‘எங்க வீட்டு மிக்சி திடீர்னு ஓடல. அவளுக்கு ஏகத்துக்கும் ஷுகர். பாகற்காய் ஜூஸ் குடிச்சாகணும். முடிஞ்சா உங்க மிக்சியில் இதை அரைச்சுத் தர முடியுமா?

அவளே வந்து உங்களிடம் கேட்கத்தான் நினச்சா. ஆனா நேத்து, அவ தின்ன முடியாத அந்த சாக்லெட்டைப் பார்த்ததும் எரிச்சலில் தப்பா பேசி அனுப்பிட்டாளாம். அதான் நான் வந்திருக்கேன்’’ என்றார் பரிதாபமாக!அவர் கையில் இருந்த பாகற்காய் எங்கள் மிக்சியில் ஓடத் தொடங்கியது.

பர்வதவர்த்தினி