சிம்ரன் ரீ என்ட்ரி



தயாரிப்பு ஃபர்ஸ்ட்... டைரக்க்ஷன் நெக்ஸ்ட்!

ஸ்லிம்ரன்... பேரழகு சைரன்... என்றெல்லாம் ரைமிங் யோசிக்கக் கூடத் தோன்றவில்லை. பார்த்ததும் ஸ்தம்பிக்கும்படி அப்படியொரு அழகு இன்னும் சிம்ரனிடம். அதற்குள் 20 வருஷம் ஓடியதை நம்ப முடியவில்லை. ‘‘யெஸ்! நான் சினிமாவுக்கு வந்து 20 வருஷமாச்சு’’ என கொண்டாடுகிறார் அவர். ஏற்கனவே டி.வி நிகழ்ச்சி தயாரிப்பில் பிஸி என்றாலும், ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தின் மூலம் சினிமா ரீ என்ட்ரிக்கும் சிம்ரன் ரெடி!‘

‘வெல்கம் சிம்ரன்...’’

‘‘தேங்க் யூ. 20 வருஷமா தமிழ் இண்டஸ்ட்ரீயோட ட்ராவல் பண்றதில் ரியலி ஹேப்பி. தமிழ் சினிமா எனக்கு ரொம்பப் பிடிக்கும். இங்க எல்லாருமே என் மேல பாசம் காட்டியிருக்காங்க. நிறைய விஷயங்கள் ஒவ்வொரு நாளும் கத்துக்கிட்டேன். புரொடக்ஷன் கம்பெனி தொடங்கி, அதோட வேலைகள்ல முழுசா கவனம் செலுத்த ஆரம்பிச்சதும் மும்பையில இருந்து சென்னைக்கு வீட்டை ஷிஃப்ட் பண்ணிட்டேன். டி.வியில் என் சக்ஸஸுக்கு ஃபுல் கிரெடிட் என் கணவர் தீபக்குக்குத்தான் கொடுக்கணும்.

திடீர்னு ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’வில் நடிக்க கேட்டாங்க. ஸ்கிரிப்ட்ல இம்ப்ரஸ் ஆகிட்டேன். நான் பண்ணப்போற ரோல் எனக்குப் பிடிச்சிருந்தது. நல்ல டீம் அமைஞ்சிருக்கு. ஜி.வி.பிரகாஷ் நடிச்ச ‘டார்லிங்’ சின்ன பட்ஜெட் படம்னாலும், நல்லா இருந்தது. புது இயக்குநர்கள்னாலே கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா சிந்திப்பாங்க. கடைசியா பண்ணின படம் ‘ஆஹா கல்யாணம்’. அதுல சின்ன கேமியோ ரோல்தான் பண்ணியிருந்தேன். இதுல வித்தியாசமான கேரக்டர்!’’‘‘நீங்க எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க?’’

‘‘அதுக்கு இன்னும் டைம் இருக்கு. எங்க ப்ரொடக்ஷன் கம்பெனியிலயே படம் தயாரிக்கப் போறோம். நிறைய ஸ்கிரிப்ட்கள் கேட்க ஆரம்பிச்சிட்டோம். விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு சின்ன பட்ஜெட்லதான் ஸ்டார்ட் பண்றோம். நேரம் அமையும்போது பெரிய ஹீரோவ வச்சு படங்கள் பண்ற ஐடியாவும் இருக்கு. நானும் கண்டிப்பா படம் டைரக்ட் பண்ணுவேன். அதையும் எதிர்பார்க்கலாம்!’’‘‘எப்படிப் போகுது லைஃப்?’’

‘‘சூப்பரா..! ஜி.வி.பிரகாஷ் படத்துல என்னோட போர்ஷன் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகப் போகுது. மாசத்துல பாதி நாள் மும்பை வீட்டிற்கும் போக வேண்டியிருக்கு. மகன்களோட நேரம் செலவழிக்கறது சந்தோஷமா இருக்கு. அதிப் இப்போ ஃபோர்த் படிக்கிறார். ஆதித், நர்ஸரி ஸ்கூல் போறார். ரெண்டு பேருமே செம நாட்டி கிட்ஸ்!’’‘‘தமிழ்ப் படங்கள் பார்க்கறீங்களா... நிறைய மாறிடுச்சு இல்ல?’’

‘‘ரிலீஸ் ஆகிற எல்லா படங்களையும் பார்த்துட்டுதான் இருக்கேன். ‘அனேகன்’ வரை பார்த்தாச்சு. ‘ஐ’ ரொம்பப் பிடிச்சிருக்கு. விக்ரம் கலக்கியிருக்கார். ‘டார்லிங்’ மாதிரி ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் உள்ள லோ பட்ஜெட் படங்களும் ஹிட் ஆகுறது ஒரு ப்ரொடியூஸர்ங்கற முறையில எனக்கு நம்பிக்கையா இருக்கு. மாற்றம் நல்ல மாற்றம்தான்!’’

‘‘இப்ப உள்ள ஹீரோயின்கள்ல யார் உங்க அளவுக்கு நல்லா டான்ஸ் ஆடுறாங்க?’’‘‘அனுஷ்கா, ஹன்சிகா, தமன்னா, ப்ரியா ஆனந்த்னு நிறைய பேர் நல்லாவும் நடிக்கிறாங்க. ஆனாலும் இப்போ போட்டி ரொம்ப பயங்கரம். சீக்கிரமே டாப்புக்குப் போயிடுறாங்க; அப்புறம் டக்குன்னு காணாமலும் போயிடுறாங்க. ஸ்லோ அண்ட் ஸ்டெடி ரேஸ் இப்போ இல்லை!’’

- மை.பாரதிராஜா