facebook




காலைல எழுந்ததும் தொப்பைய குறைக்க ஓடுனா பணக்காரன்; பால் வாங்க ஓடுனா மிடில் க்ளாஸ்; தண்ணி பிடிக்க ஓடுனா அவன் ஏழை!
- சுரேஷ் ஆதித்யா

பெருக்குவது, கூட்டுவது கணக்குல வேணா வேற வேற; ஆனா வீட்டை சுத்தம் செய்யும்போது ரெண்டும்
ஒண்ணுதான்... அவ்வ்வ்வ்
- செல்லி சீனிவாசன்

ஏன் லேட்டு?
லேட்டாயிடுச்சு!
இந்தக் கேள்வியையும், பதிலையும் அடிச்சுக்க வேற கேள்வி பதிலே கண்டுபிடிக்க முடியாது...
- ஷர்மிளா ராஜசேகர்

ஆக்சுவலி டிராபிக் ராமசாமியை குண்டர் சட்டத்தில் கைது பண்ணத்தான் போனாங்களாம். அவர் ஒல்லியா இருந்ததால் கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி என அரஸ்ட் பண்ணாங்களாம்!
- எழிலன் பல்மருத்துவர்

இன்னமும் ஏரோப்ளேன் சத்தம் கேட்டால் மேலே அண்ணாந்து பார்க்கத்தான் தோணுது...
அண்ட்ராயர் கால பழக்கமாச்சே!
- மன்னை முத்துக்குமார்

முதுமையில் பேசிக்கொள்ள கதைகள் சேமிக்கின்றோம். அவ்வளவே இவ்வாழ்வு.
- வடிவழகன் மார்க்

மோடி அடுத்த மாதம் ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குப் பயணம். இந்தியா தவிர எல்லா நாட்டுக்கும் போறாரு... ஆமா, அவரு எந்த நாட்டுக்கு பிரதமர்?
- தளபதி பரணி

நம்ம வீட்டுக்காரர் என்னவோ நம்மள ‘சூரியவம்சம்’ தேவயானி மாதிரி கலெக்டர் ஆக்கிடணும்னு பார்க்குறாரு. நமக்கு ‘இட்லி உப்புமா’ மட்டும்தான் செய்ய வருது!
- ஸ்ரீதேவி செல்வராஜன்

நம்மள தேடுற ஒருத்தர்கிட்ட, ‘நான் பிசியா இருக்கேன்’னு சொல்லுறது ஈசி... அதுவே நாம தேடுற ஒருத்தர் நம்மகிட்ட ‘பிசி’ன்னு சொல்லும்போதுதான் அதோட வலி தெரியும்!
- மோனிக்கா நாஸ்த்தென்கா

உலக ஹாக்கி லீக், இந்தியப் பெண்கள் அணி புதிய ரெக்கார்ட் செய்தது: செய்தி
என்னாச்சு இந்தியப் பெண்களுக்கு?
விளையாடப் போனாலும் ரெக்கார்ட் செய்றாங்க, விளையாட்டா போன்
பேசுனாலும் ரெக்கார்ட் செய்றாங்க.
இப்படிப் பண்றீங்களேம்மா!
- பூபதி முருகேஷ்

தீவிரவாதிக நம்பரை டிரேஸ் பண்ண சொன்னா உக்காந்து எந்த நம்பரை டிரேஸ்
பண்ணிட்டு இருக்கீங்க?
- பூபதி முருகேஷ்

டிராபிக் போலீஸ் பைக்கை நிறுத்தி டாக்குமென்ட்ஸ்
கேட்டாரு.
‘‘எனக்கு ஏசிய நல்லா
தெரியும்’’னு சொன்னேன்.
போகச் சொல்லிட்டாரு.
வாட்ஸ் அப் ராக்ஸ்!
- பூபதி முருகேஷ்

twitter

@thalabathe   
அப்பா கையால அடிவாங்கணும், அம்மா கையால சாப்பிடணும், காதலி கையால முடி கோதணும், மனைவி கையால கண்ணீர் துடைச்சிக்கணும்.
# அவ்ளோதான் வாழ்க்கை... உடனே சாகலாம்.

@jebz4 
‘அவைக்கு வராதது ஏன்?’ எம்.பி.க்களிடம் மோடி கேள்வி
# ஆமா ஜி, சிலர் நாடு நாடா சுத்துறாங்க. அவங்களையும் என்னன்னு கேளுங்கஜி :))

@npgeetha
துக்க நிகழ்வுகளில் சிந்தப்படும் கண்ணீர் அந்த துக்கத்துக்கானது மட்டுமே இல்லை.

@SvmSrinivas   
சிலர் நம்ம கிட்ட சொல்ற வேலையெல்லாம் பார்த்தீங்கன்னா... ‘‘தம்பி,
போறதுதான் போற. அந்த நாயை ‘உஸ்’சுன்னுட்டு போ’ங்கற
டைப்லதான் இருக்கு!

@ÿnesh89 
எரிமலை, பூகம்பத்தைப் பார்க்க ஜப்பான், இந்தோனேசியாவெல்லாம் போக வேண்டாம்... ஒரு பொண்ணுகிட்ட அவளோட தோழியைப் பத்தி நாலு வார்த்தை பேசினாலே போதும்!

@ Baashhu 
இதுகூடத் தெரியாதா என்ற ரெண்டு வார்த்தை மட்டும் தெரிந்தவர்கள் எல்லா அலுவலகத்திலும் ஒருவராவது இருக்கிறார்கள்.

@kalasal   
எந்தத் தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இன்றி யாரிடம் உங்களால் உதவி கேட்க முடிகிறதோ, அவர் மட்டுமே உங்கள் நண்பர்!

@ ThePayon
சமைக்கக் கற்றுக்கொள்வது ஆண் விடுதலையின் முதல் படி.

@navi_n   
மாமியார் வீட்டில் மட்டும் கிடைக்கும் விஷயங்களில் ஒன்று, மனைவி நம்மை மரியாதையுடன் நடத்துவது...

@AandeaDA   
மேனேஜர்கிட்ட நான் லீவு கேட்டு அவர் மறுக்கும்போதுதான் ‘என்னாலதான் இந்தக் கம்பெனி இயங்குறதே’ எனக்குப் புரியுது.

@iamVINISH
பசி வந்தா பத்தும் பறக்கும்தான்... ஆனா சில ஹோட்டல்களில் மெனு கார்டை பார்த்தா பசியே பறந்திடுது ;))

@Kathirru   
10 வயசுல மொட்டை மாடில நின்னு வானத்த பாத்தா ‘நட்சத்திரம் எண்ணுறியா’ன்னு கேட்ட அதே சமூகம்தான், 20 வயசுல வானத்த பாத்தா ‘லவ் பண்றியா’ன்னு கேக்குது ://

@SnegaChellam   
எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்; இதயம் தாங்கும் எதையும் கொடு!