கிச்சன் to கிளினிக்



அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்

உணவு விழிப்புணர்வுத் தொடர்

நம்முடைய தினசரி வாழ்வில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? நாம் நேரடியாகக் கற்றுக்கொண்ட உண்மைகளின் அடிப்படையில் இதையெல்லாம் செய்வதில்லை. எப்போதும் பிறர் சொல்வதையே பின்பற்றி வருகிறோம். அறிவுரைகள் வழியாக நாம் அடைவதைப் பற்றி யோசித்துப் பார்க்காமல், அது உண்மையா என ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே பின்பற்றி விடுகிறோம்.

இதில் இரண்டு விதமான சிக்கல்கள் உருவாகின்றன. ஒன்று... மரபுரீதியாக முன்வைக்கப்படும் மருந்துகளை, அவை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் பயன்படுத்துவது. உதாரணமாக வாழைத்தண்டு பற்றிய புரிதலின்றி அதனை மருந்தாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று விரிவாகப் பார்த்தோம்.

இன்னொன்று... ‘நவீன வாழ்வில் இருக்கின்ற எல்லா அறிவியல் அம்சங்களுமே இயற்கைக்கு எதிரானவை’ என்கிற அச்சம். இந்த இரண்டிற்கும் இடையில் ஏற்படும் குழப்பங்களோடுதான் நம் ஒவ்வொரு நிமிடமும் நகர்கிறது.அப்படி முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டிய கருவியாக ஃபிரிட்ஜ் சொல்லப்படுகிறது. ஆனால், அதனுள் வைக்கப்படும் பொருட்களின் வளர்சிதை மாற்றங்கள் கட்டுப்படுத்தப்படுவதையும், அவற்றின் ஆயுள் கூடுவதையும் பார்த்தோம்.

ஆனால் இதை மட்டும் வைத்தே ‘ஃப்ரிட்ஜ் முழுமையாக நன்மை செய்யும் கருவி’ என்று முடிவு செய்துவிட வேண்டாம். எல்லா உணவுப் பொருட்களையும் ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதில்லை.

தோசை மாவு, இன்றைய சமையலில் மீந்துபோன பழைய உணவுகள்... இப்படிக் கையில் கிடைக்கிற பொருட்களை எல்லாம் ஃப்ரிட்ஜிற்குள் திணித்து விடாதீர்கள். காய்கறி, பழங்கள், முட்டை போன்ற உயிருள்ள பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

ஆனால், அவை உணவாக சமைக்கப்பட்ட பிறகு - அதாவது சமையலுக்குப் பின்பு ஃப்ரிட்ஜில் வைக்கப்படுவது நல்லதல்ல. கோடைக் காலத்தில் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக் குடிக்கலாம். ஆனால் உச்சகட்ட குளிர்ச்சியில் தண்ணீர் குடிப்பது உடலைப் பாதிக்கும். மிகக் குளிர்ந்த நீரை உங்களால் வாயில் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும்?

பற்கள் கூச்சம் ஏற்பட்டு, நாக்கு குளிர்ச்சியால் நடுங்க ஆரம்பிக்கும். நம் உடலின் மிகக் கடினமான உறுப்பு என பற்களின் மீதுள்ள கவசத்தைத்தான் சொல்வார்கள். அப்படி பாதுகாப்பான பற்களே நடுங்கும் அளவிற்கு குளிர்ச்சியாக இருக்கும் தண்ணீரை, மென்திசுக்களால் ஆன குடலிற்குள் அனுப்பினால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்!

நம் செரிமான உறுப்புகள் எல்லாமே இயல்பாக ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்க வேண்டும். குளிர்ந்த தண்ணீரால் அது பாதிக்கப்பட்டு, இயல்புநிலை குலைந்துவிடும். எனவே, வாய் தாங்குகிற மிதமான குளிர்ச்சியில் தண்ணீர் குடிக்கலாம். அதே போலத்தான் சூடான உணவுகளைச் சாப்பிடுவதும்! ‘‘வாணலியிலிருந்து அப்படியே எடுத்து வச்சாகூட ‘சூடா இல்லை’ன்னு குறை சொல்வாரு என் கணவர்’’ என அங்கலாய்க்கும் பெண்களைப் பார்த்திருக்கலாம்.

அப்படி சூடாக சாப்பிடுவது பெருமை அல்ல, ஆபத்து! நாம் சாப்பிடும் உணவினுடைய வெப்பத்தின் அளவை வாய்தான் தீர்மானிக்கிறது. வழக்கமாக நாம் சாப்பிடும்போது வாய் பொறுக்காத சூட்டிலோ, குளிர்ச்சியிலோ எந்த உணவையும் உண்பதில்லை. வாய்தான் குடலுக்குள் செல்ல வேண்டியதை அளவெடுக்கும் கருவி.

உடலும் குடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் வாய் சொல்வதைக் கேளுங்கள்; பிறர் வாய் சொல்வதை அப்படியே கேட்காதீர்கள். பரிசீலனை செய்து முடிவெடுங்கள்... நான் சொல்வதையும் சேர்த்து!எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. நம்மால் தீமையைத் தவிர்க்க முடியும் என்றால், அதில் கிடைக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.

நாம் ஏற்கனவே மருந்துப் பட்டியலில் வாழைத்தண்டு குறித்துப் பார்த்தோம். அதைவிட சாதாரணமான விளக்கெண்ணெய் பற்றிப் பார்க்கலாம். ஒரு மருந்துப் பொருளை மட்டும் பார்த்து விட்டு, எல்லா மருந்துப் பொருட்களும் இப்படித்தான் என்று சொல்லக் கூடாதல்லவா?விளக்கெண்ணெயை எதற்குப் பயன்படுத்துவோம்? ‘‘விளக்கு எரிக்க’’ என்று சொன்னால், நீங்கள் ஆண்ட்ராய்டு காலத்து ஆள் என்று கண்டுபிடித்து விடலாம். விளக்கெண்ணெயை சமையலில் பயன்படுத்துவார்கள்.

மலச்சிக்கல் ஏற்பட்டால், வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிக்குமாறு சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அப்படி விளக்கெண்ணெய் சாப்பிடும்போது மலக்குடலில் நீர்ச்சத்து வற்றி, தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேற உதவியாக இருக்கும். அது மட்டுமல்ல, மலக்குடலுக்குத் தேவையான குளிர்ச்சியை அளித்து, அது மறுபடியும் இயல்பிற்குத் திரும்ப விளக்கெண்ணெய் உதவுகிறது.

விளக்கெண்ணெய் சாதாரணப் பயன்பாட்டில் உள்ள ஒரு உணவுப்பொருள்தான். ஆனால், மலச்சிக்கல் ஏற்பட்ட நபருக்கு அவருடைய உடலின் தன்மை பற்றி அறியாமல் பொத்தாம் பொதுவாக இதைப் பரிந்துரைத்தால் அது தீமை செய்யவும் கூடும். சாதாரண விளக்கெண்ணெய் அப்படி என்னதான் தீமை செய்து விடும்?

உடல்நிலையின் அடிப்படையில் வெப்பம் மிகுந்த உடல், குளிர்ச்சி மிகுந்த உடல் என்று இரு வகைகளாக மனிதர்கள் இருக்கிறார்கள். அதே போல உடலில் தோன்றும் நோய்களிலும் வெப்பம் மிகுந்து ஏற்படும் நோய்கள், குளிர்ச்சி மிகுந்து ஏற்படும் நோய்கள் என இருக்கின்றன. இது இரண்டையும் புரிந்து கொண்டு, நோயாளியின் உடலில் சமநிலை ஏற்படுத்துவதற்காக சித்த மருத்துவர்கள் விளக்கெண்ணெயைப் பரிந்துரைப்பார்கள்.

ஆனால் உடலின் பஞ்சபூதங்கள் பற்றியோ, அவற்றின் சமநிலை பற்றியோ நமக்குத் தெரியாது. நோயாளியின் உடல்நிலையில் குளிர்ச்சி கூடுதலா, வெப்பம் கூடுதலா என்று எதைப் பற்றியும் கவலை இல்லாமல் ஒரு மருத்துவர் போல நாம் விளக்கெண்ணெயைப் பரிந்துரைத்தால் என்ன ஆகும்?உதாரணமாக, மூச்சிரைப்பு உள்ள ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட மலச்சிக்கலைப் போக்குவதற்காக விளக்கெண்ணெயைப் பரிந்துரைத்தால்  அவர் உடலின் குளிர்ச்சித்தன்மை கூடுதலாகி, மூச்சிரைப்பு அதிகமாகி விடலாம்.

திடீர் வலிப்பு ஏற்படலாம். விளக்கெண்ணெயைப் பற்றி பயமுறுத்துவதற்காக நாம் இங்கு இதைப் பேசவில்லை. மாறாக, ஒரு சாதாரணப் பொருளை நம் உணவின் தேவை அடிப்படையில் பயன்படுத்தினால், அது உணவு. பிறரின் பரிந்துரை அடிப்படையில் பசி இல்லாமல் நோய்க்காகப் பயன்படுத்தினால் அது, மருந்து.

ஒரு பொருளை மருந்தாகப் பயன்படுத்தும்போது அப்பொருளைப் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் முழுமையான புரிதல் இல்லாமல் பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேலும் சிக்கலாக்கும். மருந்து பற்றியும், உடல் பற்றியும் அறிந்த ஒரு சித்த மருத்துவர் ஒவ்வொரு நோயாளியின் தனித்தனியான உடல்நிலையைப் பொறுத்து மருந்துகளைப் பரிந்துரைப்பதற்கும், நாம் சும்மா போகிற போக்கில் ஒரு ஐடியாவில் பரிந்துரைப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

இயற்கையான எந்த ஒரு மருந்தையும் முறையாகப் பயன்படுத்தினால் ஆபத்து ஒன்றுமில்லை. முறையற்றுப் பயன்படுத்தும்போது அது ஆபத்து மிகுந்ததாக மாறுகிறது.இப்போது இரண்டாவது விஷயத்திற்கு வரலாம். உணவில் சிறந்த உணவு எது? சைவமா? அசைவமா? எது உடலிற்கும், அதன் ஆரோக்கியத்திற்கும் உகந்தது?
ஒரு மருத்துவர்போல நாம் விளக்கெண்ணெயைப் பரிந்துரைத்தால் என்ன ஆகும்?

ஏப்ரீல்

*கூகுள் மேப் ட்ரெஷர் மோட்

ஏப்ரல் ஜாலிக்கு பெயர் போன கூகுள், சென்ற வருடம் கொடுத்த லந்து மேப் இது. உலக வரைபடத்தில் எங்கெல்லாம் புதையல், பொக்கிஷம் எல்லாம் இருக்கிறதோ அதைக் காட்டிவிடுமாம் இந்த மேப். ‘அடியாத்தி’ என நாடியைப் பிடித்து இதை நம்பியவர்களுக்கு அடுத்த நாளே வழிந்தது அசடு!

*கண்ணாடி விமானம்

2013ம் வருடம் வர்ஜின் நிறுவனம் வெளியிட்ட ‘சான்ஸே இல்ல’ தகவல் இது. ‘தரையெல்லாம் ஸீ த்ரூ கண்ணாடியிட்ட விமானம்... சீட்டில் உட்கார்ந்தே குனிந்து உங்கள் நகரைப் பார்க்கலாம். சும்மா அந்தரத்தில் பறப்பது போன்ற அனுபவம்’ என்றெல்லாம் பெருமையுடன் அவர்கள் அறிவிக்க... உலகமே ஒரு நிமிடம் ‘வாவ்’ சொல்லி, பின்பு ‘சே’ சொன்னது!

(தொடர்ந்து பேசுவோம்...)