ஜோக்ஸ்



‘‘நடிகை தீபிகா படுகோனை கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதால், தொண்டர்கள் யாரும் அவசரப்பட்டு கட்சி தாவிட வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘நீங்க ஆபரேஷனுக்கு அப்புறம் நிறைய
நடக்கணும்...’’
‘‘நான் ஆபரேஷனுக்காக என் காரை வித்த விஷயம் உங்களுக்கு எப்படி டாக்டர்
தெரியும்..?’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘படம் ரிலீஸ் ஆகி ரெண்டு நாள்தானே ஆச்சு! ஆனா ‘வெற்றி
கரமான பத்தாவது நாள்’னு போஸ்டர் ஒட்டி இருக்காங்களே?’’
‘‘அது திருட்டு டிவிடிகாரங்க ஒட்டினது!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

தார்ல ரோடு போடலாம், ‘ஆதார்’ல
எல்லாம் ரோடு போட முடியாது!
- ஆதார் கார்டு கிடைக்காத எரிச்சலில் தாறுமாறாய் யோசிப்போர் சங்கம்
- ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

‘‘என்னது... தனக்கு வந்த குற்றப்பத்திரிகையை தலைவர் கோயில்ல வச்சு பூஜை பண்ணிட்டு வாங்கறார்?’’
‘‘இதான் அவரோட முதல்
குற்றப்பத்திரிகையாம்!’’
- கே.ஆனந்தன், பே.தாதம்பட்டி.

‘‘என்னை ஸ்பெஷல் வார்டுக்கு மாத்தச் சொல்றீங்களே... அங்க அப்படி என்ன ஸ்பெஷல் டாக்டர்?’’
‘‘ஊசி போட ஒரு  நர்ஸ், வலிக்காம தேய்ச்சுவிட ஒரு நர்ஸ்னு ஜமாய்ப்பாங்க!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘தலைவர் திடீர்னு தண்ணி லாரி ஓட்டிக்கிட்டு வர்றாரே... ஏன்?’’
‘‘தன் பின்னாடி பெண்கள் வரணும்ங்கறதுக்காக தலைவர் எதை வேணும்னாலும் செய்வார்னு சொன்னேன்ல... அதான்!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.