facebook




குளிரையும் பனியையும் சில கனவுகளையும்
போர்த்திக்கொண்டு சொகுசாகத் தூங்குகிறது, பரணில் பத்
திரமாக மடித்து வைக்கப் பட்ட கனமான போர்வை
# கோடை
- லதா அருணாச்சலம்

‘வாழ்த்த வயதில்லை’ என்று ஏன் பெனாத்துகிறீர்கள்?
வாழ்த்த வாய்தான் தேவை.
- ராம் ராமச்சந்திரன்

தொலைத்ததை கண்டுபிடிக்கலாம். ஆனால், இழந்ததை மீட்க முடியாது!
- விமலா
சஞ்சீவ்குமார்

முன்னால் போகும் வாகன ஓட்டிகளின் உடல்மொழியை கவனித்து அவர் திருப்பங்களை அவதானிக்கும் திறன், உலகில் இந்தியர்களைத் தவிர வேறு யாருக்கேனும் உள்ளதா?
- விக்னேஸ்வரி சுரேஷ்

விவசாய நிலங்களுக்கு
4 மடங்கு இழப்பீடு வழங்கப் படும்: மோடி
# ஒருத்தரை ஏமாத்தணும்னா முதல்ல அவ
ரோட ஆசையைத் தூண்டி விடணும் * சதுரங்கவேட்டை.
- முத்து ராஜ்

மணல் லாரியில் சொட்டிக்கொண்டு இருப்பது தண்ணீர் அல்ல... ஆற்றின் கண்ணீர்!
- சண்முக வடிவு

பன்னிரெண்டு ரூபாய் போக ஐந்நூறுக்கு சிரித்துக் கொண்டே சில்லறை தரும் நடத்துனரை உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கு யார் மூலம் சிபாரிசு செய்ய வேண்டும்?
- இந்திரா கிறுக்கல்கள்

நிறைய மனிதர்களின் வாழ்க்கை சவுத் ஆப்ரிக்காகாரங்க போலவே இருக்கிறது; எப்போதுமே அதிர்ஷ்டம் இல்லாமலே!
- ஷங்கர் கார்த்தி

சவுத் ஆப்ரிக்கா விளையாடுற செமி ஃபைனலை சவுதியில் வச்சாலும் மழை பெய்யுமாம்!
- வெங்கடேஷ் ஆறுமுகம்

என்னதான் நாம பரீட்சைல கேள்விக்கு சரியான பதில் எழுதி இருந்தாலும், வாத்தியாருக்கு பதில் தெரியலனா நாம ஃபெயிலுதான்...
- பானுரேகா டிஆர்

ஊர்களைத் தொலைத்த
விரைவுச் சாலைகள்
உறவுகள் தொலைத்த
நகரம் நோக்கி...
- சண்முக வடிவு

‘‘மாண்புமிகு ‘அம்மா’ அரசின் வழிகாட்டுதலின்படி...’’ - இந்த வாக்கியத்தை பட்ஜெட்ல எத்தனை தடவை ஓபிஎஸ் சொல்லியிருக்கார்னு கவுன்ட் செஞ்சு சொல்றவங்களுக்கு, நூறு ஈக்கள் ஒண்ணா சேர்ந்து காதுக்குள்ள ரீங்காரமிடற மாதிரியான கைதட்டல்கள், அன்புப்பரிசு. மன்னிக்கவும், ‘அம்மா பரிசு’!
- ரமணி பிரபா தேவி

கல்யாணத்துல ஆயிரம் பொண்ணுங்க இருந்தாலும், ஒரே டிசைன்ல ரெண்டு சாரி பாக்க முடியல; நம்மாளுங்க ஒரே கலர் சட்டைல 50 பேர் திரியறான்... இதுக்குதான் அவங்க நாள் ஃபுல்லா உக்காந்து செலக்ட் பண்றாங்க போல!
- ரிட்டயர்டு ரவுடி

பேங்க்ல லோன் வாங்குறதைவிட கஷ்டமானது, மாசக் கடைசியில மனைவிகிட்ட செலவுக்கு பணம் வாங்கறது தான்!
- வெ பூபதி ருத்ரன்

twitter

@thunder__fb 
நம்மளுக்கு புடிச்ச மாதிரி ஒரு சீன் நடக்கும்போதுதான், கடவுள் யார் கையிலயோ ரிமோட்ட குடுத்து மாத்த சொல்லுவார் :)

@iyyanars   
‘மனசு’ லேசாக இருக்க... ‘பர்ஸ்’ கனமாக இருப்பது அவசியம்!

@ammuthalib 
வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவு களையும் சுமந்து
செல்கின்றன!

@manipmp 
‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ படங்கள் வெளிவந்த பின்னர் ‘விஸ்வரூபம் 2’ வரும்.
# அதற்கு அப்புறம்தான் ‘வாலு’ படம் வரும்.

@kannan0420 
மொபைலில் 1% சார்ஜ் இருக்கும் நிலையில் வரும் அழைப்பு, க்ளைமேக்ஸில் உயிர்போகும் நிலையில் உண்மையை சொல்லத் துடிக்
கும் சைட் ஆக்டரை நினைவு
படுத்துகிறது!

@japan_raghu   
கைக்குழந்தை ஒன்று அறுவை சிகிச்சை மையத்தின் வாயிலை நுழையும்போது அக்குழந்தையின் அம்மா இடும் அந்த நீண்ட முத்தத்தில் எவ்வளவு வலி இருக்கும்!

@ansari_masthan 
அறிமுகமில்லாத ஒரு குழந்தையை சிரிக்க வைக்க நம்மால் முடியுமெனில், நாம் வாழ்வதில் அர்த்தமுண்டு!

@GOVINDA RAJEN
கார் கண்ணாடிகளில் உள்ள கருப்புக் கண்ணாடிகள்தான் தீவிரவாதத்திற்கு காரணம் என்று உறுதியாக நம்புகிறது இந்த அரசு.

@barathi_   
ஆத்திகனாய் இருப்பதில் ஒரு லாபம். நாம் என்ன தவறு செய்தாலும் அந்தப் பழியை ஏற்றுக் கொள்ள ஒன்பது பேர் கொண்ட குழு (நவக்கிரகங்கள்) தயாராக இருக்கும்.

@udanpirappe 
டிரெயின் டிக்கெட் எவ்ளோ?
6 ரூபா!
பிளாட்பார்ம் டிக்கெட் எவ்ளோ?
10 ரூபா!
# அப்போ டிரெயின் டிக்கெட்டையே கொடு, பிளாட்பார்ம்ல நின்னுக்கறேன்

@manipmp 
பதினேழு வயசில் கல்விக்கடன், முப்பது வயசில் கல்யாணக்கடன், நாற்பது வயசில் வீட்டுக்கடன், ஐம்பது வயசுக்கு மேல் பெத்தகடன்...
# ஆணின் வாழ்க்கை!

@ponkulanthai
ஒரு கிராம் வெயிட் கூட இல்லாத பாலித்தீன் பேக், கிலோ கணக்கான வெயிட்டை சுமக்கிறது. அது போல்தான் நம் இதயமும்!

@thoatta   
கோவில் உண்டியல்ல காசு போட்டாலும், டாஸ்மாக் உண்டியல்ல காசு போட்டாலும், அது கவர்மென்ட் உண்டியலுக்குத்தானேய்யா போகுது?

@kasaayam 
என் பால்யம் மெமரி யில் மட்டுமே இருக்கிறது. ஆனால் என் குழந்தையின் பால்யம் மெமரி கார்டிலும் இருக்கும்.

@gajelan   
மோடிக்கு உலக நாடுகள் அழைப்பு...
# பிரதமர் வேலையை எப்படா செய்ய வுடுவீங்க. பேக்கரிய தொறந்ததுல இருந்து ‘பன்னை கொடு’, ‘வெண்ணைய குடு’ன்னு!!!

@RavikumarMGR   
ஒரு நாள் பிரியாணி கிடைக்கலேன்னா நாம சாம்பார் சாப்பிடுறோம். ஆனா சைவம் சாப்புடுறவங்க என்னிக்காவது அட்ஜஸ்ட் பண்ணி பிரியாணி சாப்பிட்டுருக்காங்களா?