கொம்பனின் பர்சனல்!




இட்லியில் ஆயிரம் வகைகள் செய்த இனியவனின் பேட்டி அசத்தல். வெயிலுக்கு ‘இளநீர் இட்லி’, ஆரோக்கியத்துக்கு ‘பேரீச்சை இட்லி’, குழந்தைகளுக்கு ‘சாக்லெட் இட்லி’ எனக் கலக்கிட்டார் போங்க!
- எஸ்.சுப்பையன், மதுரை.

அரசுத்துறையில் நேர்மைக்குப் பரிசு மரணம் என்றால், நிர்வாக இயந்திரமே பாழ்பட்டுப் போகும் என்பதை கட்டுரை தெளிவுபடுத்தியது. அதிகாரிகள் சிலரின் சமீபத்திய மரணங்கள் நாட்டிற்கே பெரும் களங்கம்!
- எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்-2.

கார்த்தியோடு பர்சனலாகப் பேசிப் பழகிய அனுபவத்தைத் தந்தது ‘கொம்பன்’ பேட்டி. அவர் மகள் உமையாள், பெயரைப் போலவே இனிதாக வளர்ந்து புகழ் சேர்க்க வேண்டும்!
- ராஜன்பால், சென்னை-41

கோட்டோவியங்களில் பிரமாண்டங்கள் தரும் ஜே.பி., சத்தமில்லாமல் இப்படியொரு சமூகத் தொண்டை ஆற்றிக் கொண்டிருக்கிறாரா? படித்ததும் நெகிழ்ந்து போனோம்!
- தணிகை மணியன், சென்னை-99.

எழுபருவப் பெண்கள், தன்னூக்கம், தணுத்த காற்று, கனகக் கதிர்கள், நவ இந்தியாவின் யுவ மாந்தர் என வாக்கியங்களின் ஊடே நல்ல தமிழ் விதைத்திட்ட நாஞ்சில் நாடனுக்கு நன்றிகள் பல!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

‘காவிரியை மொத்தமாக இழக்கிறோமோ’ எனும் கட்டுரை கண்ணீரை வரவழைத்தது. இனியும் நாம் விழிப்புணர்வு அற்றிருந்தால் காவிரி மீதான நம் உரிமையை ஒட்டுமொத்தமாக இழந்து விடுவோம் என்பதற்கு எச்சரிக்கை மணி அது!
- கு.ராம்குமார், வாடமங்கலம்.

தான் நடிப்பதற்காக அப்பா அர்ஜுனை இயக்குநராக மாற வைத்திருக்கும் ஐஸ்வர்யா நிச்சயம் நல்லா வருவார்.
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

தமிழ் சினிமாவின் திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜைப் பற்றி ஆச்சரியமிக்க பல தகவல்களை ‘அழியாத கோலங்கள்’ பகுதியில் சாருஹாசன் வெளிப்படுத்தியது அள்ளக் குறையாத சுவாரஸ்யம்!
- ப.இசக்கி, நெல்லை.

சிரிப்பு, பயம், த்ரில், திகில், ரொமான்ஸ் கலந்த ‘காஞ்சனா-2’ படத்துக்கு ஒரு டிரெய்லரையே பேட்டியாகக் கொடுத்துவிட்டார் ராகவா லாரன்ஸ். படம் பார்க்கும் ஆவலை குழந்தைகளிடம் தூண்டி விட்டுவிட்டீர்களே!
- எஸ்.சுகுணா ராஜன், தேனி.

இங்கிலாந்தில் 34 வயது வாலிபருக்கும், 60 வயது ‘இளைஞி’க்கும் காதல் பற்றிக்கொண்ட செய்தி அருமை. நடுப்பக்கத்தில் போட உங்களுக்கு மட்டும் எங்கிருந்தய்யா இப்படியெல்லாம் மேட்டர் கிடைக்கிறது!?
- இரா.சார்லஸ், நாகை.