நியூஸ் வே



லேட்டஸ்ட்டாக ஆங்கில இதழ் ஒன்றிற்கு கொடுத்த படு கவர்ச்சியான டூ பீஸ் போஸி லிருந்து ஒன்றை தனது வாட்ஸ் அப் புரொஃபைல் பிக்சராக வைத்திருக்கிறார் எமி ஜாக்சன். ‘‘16 வயசில மாடலிங்கை தொடங்கினேன். உலக நாடுகள் அத்தனையையும் சுத்தி வரணும்னு அப்போ ஆசைப்பட்டேன். இப்போ நடிகையானதால அந்த கனவு ஈஸியா நனவாகுது’’ என சமீபத்தில் ஹேப்பி ஃபீலாகியிருக்கிறார் எமி.

‘ரோமியோ ஜூலியட்’, டி.ஆர். பற்றிய பாடலால் சிக்கலில் விழுந்திருக்கிறது. ‘‘டி.ஆருக்கு படத்தைப் போட்டுக் காட்டிவிட்டு, அவருக்கு எந்த ஆட்சேபணையும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம்’’ என்கிறார் தயாரிப்பாளர் நந்தகுமார். சிங்கத்தின் கோபம் தணியுமா?

தனுஷ் - பிரபு சாலமன் காம்பினேஷனில் உருவாகும் படம், முழுக்க முழுக்க ரயிலில் படமாக்கப்படுகிறது. டெல்லியிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் தனுஷுக்கு நேர்கிற அனுபவங்கள்தான் படம்.

செல்வராகவனின் புதுப்படத்தில் ஒரு துப்பறியும் ஏஜென்டாக நடிக்கிறார் சிம்பு. பழைய ஜெய்சங்கர் பட பாணியில் படம் இருக்குமாம். வருண்மணியனே தயாரிப்பதால், ஹீரோயின்
த்ரிஷாதான்.

‘‘ஒருதலைக் காதலை நான் அனுபவித்திருக்கிறேன். நட்பாகப் பழகுபவர்கள் திடீரென காதலைச் சொல்லும்போது தவித்துப் போய், ‘நான் அப்படி உங்களோடு பழகவில்லை’ எனச் சொல்லும்போது வலிக்கும்!’’- ப்ரியங்கா சோப்ரா

‘‘வதந்திகள் இல்லாவிட்டால் நமக்கு வாழ்க்கை அலுத்துப் போய்விடும்!’’- பத்து நாட்கள் வெளியில் தலைகாட்டாமல் ஏகப்பட்ட வதந்திகளுக்குக் காரணமான ரஷ்ய அதிபர் புடின்

‘‘நாம் டெல்லியில் ஜெயித்துவிட்டோம். இதேபோல மற்ற மாநிலங்களிலும் ஜெயிப்போம் என எல்லோரும் சொல்கிறார்கள். செல்லும் இடமெல்லாம் வெற்றியைக் குவிக்க நெப்போலியனின் படைகளா நாம்?’’- அரவிந்த் கெஜ்ரிவால்

டாப்ஸிக்கு அழகான ஒரு தங்கை இருக்கிறார். அவரது வெரி ஸ்வீட் நேம், ஷாகன். ‘‘அவ டெல்லியில இருக்கா. என்னை விட நாலு வயசு இளையவ. என்னோட பெஸ்ட்
ஃப்ரெண்டும் அவதான். ரொம்ப பொறுப்பான பொண்ணு. ஷூட்டிங்குக்காக சென்னை, மும்பை, ஐதராபாத்னு பறக்கறதால ஷாகனை ரொம்ப மிஸ் பண்றேன்’’ என ஃபீல் ஆகிறார் டாப்ஸி.

இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கும் ‘ஆல் இஸ் வெல்’ படம் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் அசின். அந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக நாசிக் சென்றவர், அப்படியே கிடைத்த ஓய்வில் கேரளா வந்துவிட்டு மும்பை திரும்பியிருக்கிறார். ‘மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஜோதிகா, க்யூட்டாக இருக்கிறார். வெல்கம் பேக் ஜோ!’ என ட்விட்டரில் ஜோதிகாவிற்கு வெல்கம்  பொக்கே கொடுத்திருக்கிறார் அசின்.

அல்லு அர்ஜுனை தமிழுக்கு இறக்குகிறார் டைரக்டர் லிங்குசாமி. இதற்கு ‘சண்டக்கோழி’ மாதிரி தமிழ், தெலுங்கு இரண்டிற்கும் சேர்த்து ஸ்கிரிப்ட் வேலை நடக்கிறது.

கமல் தனது பட வரிசையை உறுதிப்படுத்திவிட்டார். முதலில் ‘உத்தமவில்லன்’, அடுத்து ‘பாபநாசம்’; ‘‘அதுவரைக்கும் ‘விஸ்வரூபம் 2’ வரவில்லை என்றால் இன்னொரு படத்தையும் எடுத்து இடையில் வெளியிட்டு விடுவேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.

‘மாஸ்’ படத்தின் கடைசிப் பாடலைத் தர யுவன்ஷங்கர் ராஜா மிகவும் தாமதிக்க, யூனிட் எரிச்சலாகி அந்தப்பாடலை தமனை வைத்து ஒலிப்பதிவு செய்து விட்டது. அந்தப் பாடலைத்தான் இப்போது படமாக்குகிறார்கள்.

‘தேசிய விருது’ பட்டியலில் தன் பெயர், படம் இல்லாதது கண்டு பார்த்திபனுக்கு வருத்தம். ‘திறமை உடையவர்களுக்கு தேசிய விருதில் இடம் கிடையாதா’ என கேள்வி கேட்டு ட்விட்டியிருக்கிறார். ‘மக்கள் புகழ்ந்து பேசிய விருது கிடைத்துவிட்டது, தேசிய விருதுதான் இல்லை’ என வருந்தியிருக்கிறார்.

‘ருத்ரமாதேவி’, ‘காஞ்சனா 2’, ‘ஓ காதல் கண்மணி’ என பெரிய புராஜெக்ட்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நித்யா மேனன், கோலிவுட்டில் நம்பர் ஒன் ரூட்டை நோக்கி சத்தமே இல்லாமல் அடியெடுத்து வைக்கிறார்.

‘ரஜினிமுருகன்’ படம், ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் காய்ச்சலில் அவதிப்பட்டதால் நின்று போயிருந்தது. அவருக்கு தயாரிப்பு நிறுவனமே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, குணப்படுத்தி அப்படியே அவரை தேனிக்குக் கூட்டிப் போய்விட்டார்கள். அங்கேதான் கடைசிகட்டப் படப்பிடிப்பு. திடீரென்று கிடைத்த ப்ரேக்கில் சிவகார்த்தி கேயனுக்கு மகளோடு விளையாட ஒரு வாய்ப்பு.

பிந்துமாதவியின் ஃபேவரிட் காஸ்ட்யூம் டிசைனர் சுந்தரி திவ்யா. ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தில் பிந்துமாதவிக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணியதுடன் சின்ன கேரக்டரிலும் நடித்த சுந்தரி, ‘சவாலே சமாளி’யில் மறுபடியும் பிந்துமாதவிக்கு காஸ்ட்யூம் கவனிக்கிறார். இவர் அருண்பாண்டியனின் ரிலேட்டிவ் என்பது கூடுதல் தகவல்.

பிந்துமாதவியின் ஃபேவரிட் காஸ்ட்யூம் டிசைனர் சுந்தரி திவ்யா. ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தில் பிந்துமாதவிக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணியதுடன் சின்ன கேரக்டரிலும் நடித்த சுந்தரி, ‘சவாலே சமாளி’யில் மறுபடியும் பிந்துமாதவிக்கு காஸ்ட்யூம் கவனிக்கிறார். இவர் அருண்பாண்டியனின் ரிலேட்டிவ் என்பது கூடுதல் தகவல்.

நாகார்ஜுனா உடற்பயிற்சி செய்யும் ஃபிட்னஸ் க்ளப்பில் சேர்ந்திருக்கிறார் சமந்தா. நாகார்ஜுனாவின் ஃபிட்னஸ் டிரெய்னர் டேனியல்தான் சமந்தாவுக்கும் இப்போது மாஸ்டர். அந்த ஜிம்மில் வெயிட் லிஃப்டிங்கில் 42.5 கிலோ தூக்கி செம கலக்கு கலக்கி விட்டிருக்கிறார் சமந்தா.