Like and and Share



அப்பா‘டெக்’க office.porn, office.adult.... ‘‘என்னங்க, பிட்டு பட வெப்சைட் மாதிரி இருக்கு’’ என்கிறீர்களா? இந்த இரு வலைத்தள முகவரி களை உலகப் புகழ் மைக்ரோசாஃப்ட் நிறுவனமே வாங்கியிருக்கிறது. அப்படி வாங்காவிட்டால் பிட்டுப்பட பில்லாக்கள் இந்தப் பெயரில் தளம் தொடங்கி நாறடித்து விடுவார்கள் என்பதுதான் காரணம்.

வழக்கமான .com; .orgகளைத் தாண்டி புதுப்புது வலைத்தள டொமைன்களை உருவாக்கித்தரும் மிசிகிழிழி எனும் அமைப்பு, டாட் porn, டாட் adult ஆகிய டொமைன்களை ஜூன் 1 முதல் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது.

அதற்கு முன்பே துண்டைப் போட்டு இந்த முகவரி களை வாங்கிவிட்டது மைக்ரோசாஃப்ட். இதே மாதிரி அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்டும் தன் பெயரிலான டாட் porn, டாட் adult முகவரிகளை வாங்கிவிட்ட தகவலையும் லே அவுட்டில் போட்டோ வைப்பதற்காக சேர்த்துக்கொள்ளலாம்!

அண்ணே ஒரு விளம்பரம்...பொதுவாக வாஷிங் மெஷின் விளம்பரம் என்றால், சேற்றில் உருண்டு புரண்டு சட்டையை அழுக்காக்கிக்கொள்வது என இறங்குவார்கள். ஆனால், வீடியோகான் வாஷிங் மெஷின் விளம்பரத்தில் கொஞ்சம் மாத்தி யோசித்திருக்கிறார்கள்.

அம்மா துப்பட்டாவில் பையன் வாய் துடைப்பது, குர்தாவில் குழந்தை ஈரம் பண்ணுவது, புது மாப்பிள்ளையின் சட்டையில் பெண்ணின் லிப்ஸ்டிக் தடம்... என துணிகளில் கறை படும் தருணங்களையே கவிதையாக்கி இருக்கிறார்கள். வீடியோகான் எப்பவுமே விளம்பரத்தை நல்லாத்தான் போடுறாங்க. ஆனா...