facebook



சாப்பிட்டுவிட்டு கழுவாமல் கொண்டு வரப்பட்ட லஞ்ச் பாக்ஸை அடுத்த நாள் காலையில் திறந்து கோபமோ சலிப்போ இல்லாமல் கழுவும் கைகள் கடவுளுடையவை!
- வெ பூபதி ருத்ரன்

சில சோகமான சம்பவங்களே பின்னர் காமெடியாக உருமாற்றம் அடைந்து விடுகின்றன.
# திருமணத்தோடு இதை ஒப்பிட வேண்டாம்.
- கார்ட்டூனிஸ்ட் முருகு

எனக்கே தெரியாத நான் உங்களுக்கெப்படிதெரிந்திருக்க முடியும்!
- ராஜா சந்திரசேகர்

ஹோட்டல்ல நல்லா மொரட்டு மீச வெச்ச ஆள சப்ளைக்கு போட்டுருக்காங்க... மறு சோறு கேக்கவே டர்ராவுது!
- ரிட்டயர்டு ரவுடி

சூடா குடிக்குற டீக்கு கைப்பிடி இல்லாத கிளாஸ்; கூலா குடிக்கிற ஜூஸ்க்கு கைப்பிடியோட க்ளாஸ்!
# இதான் வாழ்க்கை!
- சுந்தர சிபி

நம்மைத் தலைகுனிய வைத்து, தலை நிமிரச் செய்வது புத்தகம். அதேபோல் நம்மைத் தலைகுனிய வைத்து, தலை குப்புற விழச் செய்வது செல்போன்!
- இளையராஜா டென்டிஸ்ட்

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம்: நீதிமன்றம் அரசாங்கமே வெடி மருந்து சப்ளை பண்ணுது, அவுங்க மேல ஏதாவது நட
வடிக்கை எடுங்க ‘கனம் கோர்ட்டார் அவர்களே!’
- இளையராஜா டென்டிஸ்ட்

சைக்கிளில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
- கல்யாண்ஜி

கூலித் தொழிலாளிகள் மீது துப்பாக்கிச் சூடு.
# ஆனால் இதுவரை செம்மரம் கடத்தும் முதலாளிகள் மீது காபி கூட சூடாகக் கொட்டியதில்லை.
- செல்வ குமார்

தமிழ்நாட்டில் தள்ளாடாமல் ஓடும் தொழில்கள்...
1. டாஸ்மாக்
2. மெடிக்கல்
3. பைனான்ஸ்
- ஷர்மிளா ராஜசேகர்

பவானிசிங்கின் பெயரை பவானிஸ்விங் என்று மாற்றிவிடலாம். அவர் எந்தப் பக்கம் என்பது இந்த வினாடி வரை மர்மம்தான்.
- செல்வ குமார்

twitter

@thiru_Tamizh   
தமிழன், தெலுங்கன் என்பதையெல்லாம் தாண்டி, எளியோர் மீது மட்டும் கொடிய சட்டம் தயக்கமின்றிப் பாயும் உளவியலை உணர வேண்டியிருக்கிறது!

@maamallan 
கட்டையைக் கடத்துகிறவன் புள்ளியாகிறான். கட்டையை வைத்து தொழில் நடத்துகிறவன் பெரும்புள்ளி ஆகிறான்!

@GOVINDARAJEN 
மனுஷனை சுட்டுத் தள்ளுன கசாப் மாதிரி ஆள உட்கார வச்சி பிரியாணி வாங்கித் தருவானுங்க. மரத்தை வெட்டுன மனுஷன சுட்டுத் தள்ளுவானுங்க. இந்தியாடா... நேர்மைடா..!

@mekalapugazh   
லிஃப்ட்டுக்கு காத்திருக்கும் வேளையில் மேல்/கீழ் பட்டன்கள் என்பவை ஃபேன் ரெகுலேட்டர் போன்றே என நினைப்போரும் உண்டல்லோ...

@arattaigirl 
கையாளத் தெரியாத எதுவுமே சுமைதான்... அன்பு, காதல், புகழ், கோபம், நட்பு, பொறாமை, இணையம்!

@mekalapugazh 
பொய்யைக் காப்பாற்ற வேண்டிய தேவையும் உண்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும்...

 @real_kadavul 
நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை விட, யாரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதே உங்கள் முன்னேற்றத்தை நிர்ணயிக்கிறது!

@minimeens 
மனைவி சொல்ற, ‘ஒண்ணுமில்ல’க்கு பின்னாலதான் எத்தனை ஆயிரம் இருக்கிறது!

@Phoenixvaishu 
ஒரு நாயை நாய்னு சொன்னதுக்கு ஒருத்தர் என்கிட்ட இன்னிக்கு சண்டைக்கு வந்துட்டார். அது அவர் பையன் மாதிரியாம்.
# எகொசாஇ

@narsimp
குரூரம் என்பது கத்தியின் முனையில் இருப்பது அல்ல, கைப்பிடியில் இருப்பது!

@MissLoochu   
இப்பொழுது யாரும் கண்ணாடி பார்ப்பதில்லை. செல்ஃபி எடுத்தே பார்க்கிறார்கள்.

 @8tttuu   
வாக்காளர்களின் கூடுதல் விபரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்: சந்தீப் சக்சேனா தகவல்
# போன எலக்ஷன்லயும் இந்த எலக்ஷன்லயும் ஓட்டுக்கு வாங்கிய பண விவரங்களா?

@jaypee2004 
திங்களன்று பள்ளி செல்ல விரும்பாத குழந்தையின் நடிப்பிற்கு இணையானது, சனிக்கிழமை காலை மனைவி சொல்லும் வேலைகளை தவிர்க்க முயலும் கணவனின் நடிப்பு :)

@sundartsp   
வெங்கட்பிரபு படத்தில் ஹீரோவா நடிப்பதில் பெரிய பிரச்னை, பிரேம்ஜியின் ஃபிரண்டாய் நடிப்பதுதான்!

@paidkiller   
பள்ளிக்குழந்தைகள் இருக்கும் வாகனமும், கலர் கோழிக்குஞ்சுகள் இருக்கும் கூண்டும் ஒன்றே!
# கீச்மூச் கிய்யா முய்யா

@kalasal   
இந்த வாழ்க்கையை விடவா மரணம் கொடூரமாய் இருந்துவிடப் போகிறது?!