facebook



ராகுல் காந்தியை மத்திய அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவன்
‪#‎ நல்ல‬ காரியங்கள் நடக்கும்போது பேசாம விட்டுவிட வேண்டும்.
- வாசு முருகவேல்

அண்ணே! ஒரு ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா? - அன்று
சார்! ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா? - இன்று
# காலம் மாறிப் போச்சு!
- எழிலன் டென்டல் சர்ஜன்

மனிதர்களில்
பலதரப்பட்டவர்கள் இருப்பதைப்
போலவே அரசுப்
பேருந்துகளிலும்
அவலப் பேருந்து, அபாயப் பேருந்து,
 அசுத்தப் பேருந்து... இப்படிப் பல
வகைகள் உண்டு!
- தமிழ்ச்செல்வி
நிக்கோலஸ்

கோடையில் குடிதண்ணீருக்கு நிச்சயம் பஞ்சம் வரும். ஆனால் டாஸ்மாக் தண்ணீருக்கோ, அதில் மிக்ஸ் பண்ணத் தேவைப்படும் கோக் மற்றும் பெப்ஸி தண்ணீருக்கோ எந்தப்  பஞ்சமும் வராது என்பதை யம்மா குடியகம் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.
- செல்வ குமார்

பொண்ணுங்களுக்கு
‘டெடி பியர்’ன்னா பிடிக்குது.
பசங்களுக்கு ‘கூலிங் பீர்’தான் பிடிக்குது.
- வெ பூபதி ருத்ரன்

ஃபீலிங் என்பது ஒரு லிங்க் அல்ல...
சீலிங் என்பது கடல்களை இணைப்பதல்ல...
டீலிங் என்பது டீயில் கலப்பது அல்ல...
ஹீலிங் என்பது ஆண்களின் லிங்க் அல்ல...
வீலிங் என்பது நம்முடைய இணைப்பில்ல...
- வெங்கடேஷ் ஆறுமுகம்

வாழ்க்கைல நான் பார்க்காத கஷ்டமான்னு சொல்ற நாம, நான் பாக்காத சந்தோஷமான்னு என்னிக்கும் சொல்றதில்லையே...
- போட்டோக் கார்

இந்த தடவைதான்பார்த்தேன்! மோடி பிரான்ஸிலும், ஜெர்மனியிலும் அதிபர்களை சந்திக்கும்போது கோட்டுடனும், இந்தியர்களை சந்திக்கும்போது பைஜாமா, குர்தாவுடனும்  இருக்கிறார்! திரும்பி வந்த பின், அவர் இது நாள் வரை அணிந்தவற்றை ஏலம் விட்டாலே இந்தியாவின் பாதி கடனை அடைச்சிடலாம் போலிருக்கே!
- ரமேஷ் பட்

ஆச்சர்யங்களை கண்களிலேயே
சுமந்து திரிகின்றன குழந்தைகள்...
- சுந்தரி விஸ்வநாதன்

பேசத்தான் வந்தோம்
பேசினோம்
பிரிந்து போனோம்
மீதி இருக்கும்
இந்த சொற்களில்தான்
உண்மையான உரையாடல்
இருந்தது என்பதை
ஒருவரும்
உணராமல் போனோம்...
- ராஜா சந்திரசேகர்

எல்லாப் பக்கமும் பசை தடவி அழுத்தி ஒட்டினாள் தீப்பெட்டியோடு
அவள் ஆசைகளையும்!
- மன்னை முத்துக்குமார்

தொட்டியோ
கடலோ
மீன்கள் நீந்துவது
அதே தூரம்தான்
- கலாப்ரியா

twitter

@writernaayon   
அவங்க கங்கைய சுத்தப்படுத்த இப்பதான் ஆரம்பிக்கிறாங்க, நாம காவிரிய 15 வருஷமா சுத்தப்படுத்திட்டு இருக்கோம்!
# மணல்கொள்ளை...

@ranilisa   
கடலில் முகம் பார்த்து சலிக்கும்போதுதான் வானம் மழை பொழிகிறதோ என்னவோ, ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீரில்
தன்னைப் பார்த்துக்கொள்ள!

@su_boss2   
ஷங்கர் படத்தில் நடிக்க மாட்டேன் - விஷால்.
# நான்கூடதான் ஷங்கர் படத்துல நடிக்க மாட்டேன்... நான்லாம் சொல்லிட்டா திரியுறேன்??

@ashoker_UHKH   
அக்ரி விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியது
மட்டுமே வழக்காவது போலத் தெரிகிறது. அரசு வேலைக்குப் பணம்
வாங்குவதெல்லாம் குற்றமே இல்லை போல!

@roflkanth 
கடைசில ‘மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்’னு நியூஸ் வரும் போலயே...

@thivakaran_ 
‘மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்’ என்கிற மிகப் பெரிய சிறைச்
சாலையில்தான் எல்லா மனிதர்களும் வாழ்ந்து கொண்டிருக்
கிறார்கள்...

@kaviintamizh 
அந்தக் காலப் படங்களை பார்க்கும்போதெல்லாம் ஒரு விஷயம் நல்லா
தெரியுது... அப்ப எல்லாம் பவுடர் விலை ரொம்ப கம்மியாதான் இருந்திருக்கு! 

@naatupurathan
  எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியாத மரியாதை உண்டு;   எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும்
ஒரே இடம்!

@Senthilbds 
  ‘சூப்பர் ஃபிகர்’ என்றவனின் வன்மம் வெளிப்பட்டு விடுகிறது; ‘அழகாருக்கீங்க சிஸ்டர்’ என்றவனின் வன்மம்தான் உள் தவித்துக் கொண்டிருக்கிறது.

@yugarajesh2
ஆசிரியைக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய 3 பட்டதாரி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்# மன்மத ஆண்ட தப்பா புரிஞ்சுக்கிட்டானுங்க போல!

@VenkysTwitts 
  நெருக்கடி நிலை என்பது மாலை 6 மணிக்கு சில மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்வது.

@itzraga  
வாழ்வதைவிட,யோசித்துப் பார்க்கும் போதுதான் கடினமாயிருக்கிறது வாழ்க்கை.

@iamSithar  
தெருமுக்கு வரைக்கும் புடவை, நகைய பத்தி பேசிட்டு, சாவு வீடு வந்ததும் ‘‘என்ன பெத்த ஐயா’’ன்னு அழும் பெண்கள் தேசியவிருதுக்குத் தகுதியானவர்கள்!

 @kalasal 
எந்த நாட்டில் இருக்கிறார் என்றே தெரியாத ஒரு பிரதமர், இருக்கிறாரா என்றே தெரியாத ஒரு முதல்வர்... இதில் நாம் அடுத்தவர்களைக் குறைசொல்லி என்ன பயன்?

 @2amtughluq 
 இனி ஒரு விவசாயி மற்றொரு விவசாயிக்கு இப்படி கடிதம் எழுதுவார், ‘‘இங்கு நான் நிலத்துடன் இருக்கிறேன், அங்கு நீ நிலத்துடன்
இருக்கிறாயா என அறிய ஆவல்!’’

@Senthilbds   
பச்சோந்திகளின் வாழ்க்கை வண்ணமயமாக இருக்கிறது;பாவம், ஓணான்கள்தான் கல்லடி
படுகின்றன.