ஐந்தும் மூன்றும் ஒன்பது



*ஔவையாரை 108 என்கிற எண்ணோடு தொடர்புபடுத்திய என் நண்பர், 108 ஒரு புனித எண். ஒருபடி மேலே போய் சற்று மேஜிக்கலான எண்ணும் கூட என்றார்.  ராமாயணத்தில் தொடங்கிய பேச்சு, ஔவையைத் தொட்டு எண்களிடம் சென்றுவிட்டது. நண்பர் எண்களைத் தொட்டு பல அரிய செய்திகளைக் கூறத் தொடங்கினார்.

108 என்ற எண்ணைக் கூர்ந்து கவனிக்கச் சொன்னார். ‘இதில் கவனிக்க என்ன இருக்கிறது?’ என்று கேட்டேன். `இதில்தான் எல்லாம் உள்ளது. நம் சான்றோர்கள் காலத்தால்  மட்டுமின்றி, ஞானத்தாலும் எவ்வளவு மூத்தவர்கள் என்பதை இந்த எண்ணே சொல்கிறது. நூற்றி எட்டின் நடுவில் உள்ள பூஜ்ஜியத்துக்கு மதிப்பில்லை.

அதன் இரு பக்கமும் எண்கள் உள்ளன. ஒரு எண் பூஜ்ஜியத்துக்கு முன் வரும்போது அது பத்து மடங்கு பெருகுகிறது. பூஜ்ஜியத்துக்கு அடுத்து வரும்போது பத்து மடங்கு  ஒடுங்குகிறது. இந்தக் கணக்கு சரிதானே?’ என்று கேட்டார். `ஆம்... இதுதான் கணித நடைமுறை’என்றேன் நான். `இப்போது இந்தக் கணிதத் தெளிவோடு எண் நூற்றி எட்டைப்  பாருங்கள்’ என்றார்.

நானும் பார்த்தேன். அவரும் கூடவே விவரிக்கத் தொடங்கினார்... `ஒன்று என்பது இங்கே கடவுளைக் குறிக்கும். அதைப் பரம்பொருள், பிரம்மம், சிவன், விஷ்ணு, அல்லா,  இயேசு என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். பூஜ்ஜியத்தின் முன் அது இருந்து பெருகிக் கிடக்கிறது. எட்டு என்பது நம் வாழ்வைக் குறிக்கும். நாம் எப்படி  வாழ்ந்தாலும் ஒருநாள் அது முடிவுக்கு வந்தே தீரும். அரச யோகத்தோடு வாழ்ந்திருந்தாலும் சரி, ஆண்டியாக வாழ்ந்திருந்தாலும் சரி, நம் வாழ்வு ஒவ்வொரு நாளும் முடிவை  நோக்கி நகர்ந்து ஒருநாள் பூஜ்ஜியமாகி விடுகிறது.

அப்படி பூஜ்ஜியமாகும் நிலையில் இறைவன் ஒருவனே என்று சரண்புகும்போது நாம் அந்த ஒன்றாகிய இறைவனை அடைகிறோம். நூற்றி எட்டைக் கூட்டினால் ஒன்பது வரும்.  ஐந்து பூதங்களால் ஆன நாம், ஆறாவது அறிவால், ஏழாகிய பிறப்பைக் கடந்து எட்டுவது ஒன்பதாகிய நிலையை... இந்த  ஒன்பதை எதனால் பெருக்கினாலும் தன்னிலை மாறாது.  இப்படி இந்த எண் பல செய்திகளைத் தந்துகொண்டே போகிறது’ என்றார்.

*சரி... இதை ஔவைக் கிழவியோடு எப்படி தொடர்புபடுத்தினீர்கள்?’ என்று கேட்டேன்...’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...அனந்தகிருஷ்ணன்  சொன்னதைக் கேட்டு வள்ளுவர் பெருமூச்சு விட்டார். கணபதி சுப்ரமணியனோ ஸ்தம்பித்து விட்டார். வள்ளுவரே அதைக் கலைத்தார்...
எனக்கு முந்தி அவர் போயிடுவார்... அது உறுதி! இனி யார் ஜாதகத்தையும் நான் பார்க்கலை...’’- என்று அந்த ஜாதக நோட்டை அப்படியே மூடினார்.
அய்யா...’’ என்று மெல்லிய குரலில் அவரை அழைத்தான் வர்ஷன்.

*என்னப்பா...’’
உங்கள பாக்க பிரமிப்பா இருக்கு எனக்கு. எவ்வளவு பெரிய மேதை நீங்க...’’ என்றான் மிக உணர்வுபூர்வமாக...
யாரா இருந்தா என்னப்பா... நேரம் வந்தா போய்க்கிட்டேதானே இருக்கணும்...’’
அது... அது உண்மைதான்! ஆனா, அதுக்கொரு வயசு இருக்குல்ல?’’
அதுக்கென்ன பண்ண... நம்ம விதியை நாமதானே எழுதிக்கிறோம்..?’’

நாம எழுதிக்கிறோமா... அப்ப கடவுள்..?’’
அவருக்கு நம்ம விதியை எழுதறதா வேலை..?’’
அப்ப என் தலைல கடவுள் இப்படி எழுதிட்டான்னு சொல்றோமே...’’
எல்லாம் அறியாமைல சொல்றதுதான்...’’

என்ன சொல்றீங்க நீங்க... `எதுவும் நம்ம கைல இல்லை. எல்லாம் விதி’ன்னும் சொல்றீங்க. மறுபுறம் நேர் எதிரா நாமதான் நம் தலையெழுத்தை எழுதிக்கறதாவும்  சொல்றீங்களே?’’
ஆமாம்... நான் சொன்ன இரண்டுமே உண்மை. இந்த உண்மையை சும்மா இப்படி கேள்வி கேட்டுல்லாம் புரிஞ்சிக்க முடியாது... ஒரு நெடிய அனுபவமும் பார்வையும் இதுக்கு  வேணும். ஒரு விஷயத்தைத் தெளிவா புரிஞ்சுக்கோ... உலகத்திலேயே பெரிய கேள்வி எது தெரியுமா?’’
எது?’’
``நான் யாருங்கறதுதான்!’’

அதனால...’’
நான் யார்’ங்கற இந்தக் கேள்விக்கான விடை ஒவ்வொருத்தருக்கும் அவங்க தேடலுக்கும் தவிப்புக்கும் ஏற்ப யாரும் சொல்லாமலே ஒருநாள் புரியும். இதுக்கு மட்டும் வார்த்தைல  விடை கிடையாது. வார்த்தைல சொல்றது விடையாவும் ஆகாது! அதனாலதான் சித்தர்கள் இதுக்கு பதிலை இரண்டு வரில சொன்னாங்க. ‘கண்டவர் விண்டிலர் - விண்டவர்  கண்டிலர்’ அவ்வளவுதான்!’’``எங்கேயோ போய்ட்டீங்களேய்யா!’’``கேள்வியைப் பொறுத்துத்தானே பதில்...’’

உண்மைதான்...’’ என்று அடுத்து ஒரு கேள்வி கேட்க வாயெடுத்தவனை தடுத்த வள்ளுவர், ``இனி எதுவும்  பேசாதே... நானும் மௌனத்துல ஆழ்ந்திடத்தான் விரும்பறேன். இப்ப  மணி என்ன?’’ என்று கடிகாரத்தைப் பார்த்தார். ஐந்தரை ஆகியிருந்தது. (உண்மையில் நாலரை மணிதான்)``மணி இப்ப ஐந்தரை... இன்னிக்கு ஏழு மணிக்கு மேலே நட்சத்திரம்  மாறுது. அதுக்குப் பிறகு நான் மௌனமா இருக்கத்தான் விரும்பறேன். உங்க வரைல நான் இன்னும் ஒண்ணரை மணிநேரம்தான் பேசுவேன். அதுக்குள்ள காலப்பலகணி  தொடர்பா என்கிட்ட எதைக் கேட்கணும்னாலும் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. அது சம்மந்தமா எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் நான் சொல்றேன். உங்க தேடலுக்கும் உதவியா  இருக்கும்...’’ என்றவரை ப்ரியா படபடப்போடு பார்த்தாள்.

அய்யா நீங்க ஏன் மௌனமாக விரும்பறீங்க... கலகலன்னு பேசிக்கிட்டிருக்கலாமே?’’``நான் கொஞ்சம் மௌனமா தியானத்துல மூழ்க விரும்பறேன்மா. எனக்கு ஒரு உண்மை  நல்லா தெரியும். உயிர் பிரியறதுக்கு முன்னால நினைக்கற நினைப்புக்கும் அடுத்த பிறப்புக்கும் நெருங்கின தொடர்பு இருக்கும்மா...’’
நீங்க ‘நான் சாகப்போறவன்’ங்கற அந்தக் கருத்துல இருந்து வெளிய வரவே மாட்டீங்களா?’’
உனக்காக நான் எப்படிம்மா என் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை உதற முடியும்?’’

அதைப் பொய் நம்பிக்கைன்னு நினைச்சா முடியும்!’’``இல்லம்மா... என் சாவு - காலப்பலகணி - அதோட வெளிப்பாடு - அது சொல்லப்போற விஷயங்கள் - அதனால  ஏற்படப்போற தாக்கம்னு ஒரு பெரிய வட்டச்சுற்று இருக்கும்மா. இதுல நீ, இவர், அவர் எல்லாம் பார்வையாளர்கள்... அப்பப்ப பங்கெடுத்துக்கறவங்களும்கூட!’’
- வள்ளுவரின் பதில், `அடுத்து எதைக் கேட்பது’ என்ற குழப்பத்தைத்தான் அவர்களிடம் ஏற்படுத்தியது. வர்ஷனிடம் மட்டும் கேள்விகள் முண்டி
யடித்தன.

அய்யா... இந்தப் பெட்டி, சோழி, ஏடு இதெல்லாம் எவ்வளவு காலமாக உங்ககிட்டஇருக்கு?’’என்று ஆரம்பித்தான்.``அதான் சொன்னேனே... என் தாத்தா காலத்துல
இருந்தே!’’``அவர் காலப்பலகணியைத் தேடிக் கண்டுபிடிச்சவரா?’’``ஆமாம். அப்படி கண்டுபிடிச்ச நிலைல அவர் எழுதி எடுத்துக்கிட்டு வந்த குறிப்புப்படிதான் எல்லாம்  நடந்துடுச்சே..!’’``அது சரி... நீங்க ஏன் முந்தியே இதைத் தேடிப் போகல?’’``எனக்கு இந்தப் பெட்டி பத்தியும் பலகணி பத்தியும் சமீபமாதான் தெரிய வந்தது. தாத்தாவோட  டைரியை படிச்சுத்தான் நான் ஒரு தெளிவுக்கும் வந்தேன். பலகணியை நெருங்கறவங்க, அதை நெருங்கினதுல இருந்து சொற்ப நாட்கள்ல இறந்து போயிடுவாங்கங்கற விதிப்படி  என் தாத்தா அப்பவே இறந்துட்டாரு. இதை எல்லாம் நான் இவங்களுக்கு முன்பே சொல்லிட்டேன்பா!’’

நீங்க என்ன சொல்றீங்க... அப்ப இதை இவர் தேடிப்போய் கண்டுபிடிச்சுட்டா இவரும் சீக்கிரமா செத்துப்போயிடுவாரா?’``ஆமாம்’’- வள்ளுவர் துளியும் பதற்றமின்றி  ஆமோதித்தது கணபதி சுப்ரமணியனை நெருடியது.``வள்ளுவரே... நீங்க என்ன சொல்றீங்க? நான் செத்துடுவேன்னு தெரிஞ்சும் என்கிட்ட ஒப்படைக்க உங்களால எப்படி  முடிஞ்சது?’’- கணபதி சுப்ரமணியன் கணிசமாய் கோபப்பட்டார்.
அய்யா... இது ஒரு அதிசயம்! இந்த அதிசயத்தை நான் எப்ப தொட்டேனோ, அப்பவே என் முடிவு ஊர்ஜிதமாகி இது ஒரு உண்மைங்கறதுக்கான சாட்சியங்களையும் நான்  வரிசையா பாத்துட்டேன். குறிப்பா நான் இந்தப் பலகணிக் குறிப்புப்படி வந்த சில ரகசியங்களை வெளிய சொன்னது ஒரு பெரிய அதிர்வையே ஏற்படுத்திடுச்சி. முதல்ல  நான்கூட கொஞ்சம் சந்தேகத்தோடதான் இருந்தேன். அப்புறம் எல்லாமே தெளிவாகிடுச்சு. பொம்மலாட்டம்னு ஒரு ஆட்டம் உண்டு... அதைப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?’’
அதுக்கென்ன வள்ளுவரே...’’

பொம்மலாட்டத்தைப் பாக்கறவங்களுக்கு பொம்மைங்க தானா ஆடற மாதிரி தெரியும். ஆனா, உண்மைல ஆட்டி வைக்கறவன் பின்னாடி இருக்கான். நாமெல்லாம்கூட  பொம்மைங்கதான். இதெல்லாமே எனக்கு தெளிவா புரிஞ்சு போச்சு!’’``அப்ப ஆட்டி வைக்கறது யார் வள்ளுவரே..?’’``காலம்தான்... வேற யார்?’’
இது என்ன பதில்..? போகட்டும்... இந்த நிமிஷம் இந்த காலப்பலகணி பத்தி வேற யாருக்குத் தெரியும்?’’
இப்பத்தான் கேட்க வேண்டிய கேள்விய கேட்டிருக்கே...’’

முதல்ல இதுக்கு பதிலைச் சொல்லுங்க!’’``டெல்லில ஜனார்த்தனன் சதுர்வேதினு ஒரு சாமியார் இருக்கார். அவருக்குக் கொஞ்சம் சித்து வேலைகளும் தெரியும். இப்ப நீங்க ஒரு  பரீட்சை எழுதியிருக்கீங்கன்னு வையுங்க. பரீட்சை பேப்பரைத் திருத்தி மார்க்கும் போட்டிருந்தா போதும். இவர் தன்கிட்ட ஏவல் செய்யற கெட்ட சக்தியோட துணையால அந்த  மார்க்கை முன்னாடியே சொல்லிடுவாரு. இப்ப வேலைக்காக எவ்வளவோ பேர் பரீட்சை எழுதறாங்க... அவங்க பாஸா, ஃபெயிலான்னும் சரியா சொல்லிடுவாரு!’’
இதெல்லாம் சாத்தியமா..?’’

சாத்தியமில்லாமதான் நாத்திகத்துக்கு ஒரு கட்சியே இருக்கும்போதும் இவங்க நடமாடறாங்களாக்கும்?’’``சரி... சாத்தியம்னே வச்சுப்போம்... இவரைப் பத்தி இப்ப எதுக்கு  சொன்னீங்க?’’``இவருக்கு இப்ப காலப்பலகணி பத்தித் தெரியும்!’’``எப்படி?’’

டெல்லில யார் ஆட்சியைப் பிடிப்பாங்கனு எல்லோரும் ஜோசியம் பார்த்தப்ப பலகணி சொன்னதை வச்சு நான் சொன்னது அப்படியே நடந்ததே..! அடுத்து விஞ்ஞானி  காணாம போவார்னு சொன்னது. அவ்வளவு ஏன்... அந்த சதுர்வேதி ஒரு கிட்னி ஃபெயிலியர் கேஸை பிழைக்க வைக்கறேன்னு சொல்லி பணம் கறந்தப்ப, அவங்க என்கிட்ட  வந்தாங்க. நான் `அந்த கேஸ் பிழைக்காது’ன்னு சொல்லி சாகற நேரத்தையும் சொன்னேன்... நான் சொன்னபடிதான் நடந்தது. சதுர்வேதி பார்வையும் என் பக்கம் திரும்பிடிச்சு!’’
அப்ப சதுர்வேதி உங்கள சந்திச்சாரா?’’

அவர் சார்பா சிலர் வந்து சந்திச்சாங்க. பலகணி பத்தியும் கேட்டாங்க. நானும் `பலகணிங்கறது எங்க தமிழ்நாட்டு சொத்து... கால ஞானம் கொண்ட சித்தர்கள் கண்டு
பிடிப்பு அது. மயில்பொறி, அமுதசுரபி, சந்திரகாந்தக்கல், ரசமணி மாதிரி அது ஒரு அதிசயம் - ஆனா அறிவுப் புதையல்’னு சொன்னேன்!
அது எங்க இருக்குன்னு கேட்டாங்க... `எனக்கே தெரியாது... அதைக் கண்டுபிடிக்க ஒரு சாமர்த்தியம் வேணும். புதையலாச்சே! மறைவாதான் இருக்கும்’னும் சொன்னேன்.  அப்படியே அதைக் கண்டுபிடிக்கறவர் யாரா இருந்தாலும் 27 நாள்ல செத்துப்போறதும் சத்தியம்’னு சொன்னேன்!’’

உடனே பின்வாங்கிட்டாங்களா?’’

கொஞ்சம் தயங்கினாங்க... எனக்கு நல்லா தெரியும்! அந்த சதுர்வேதி தன் ஏவல் சக்திகிட்ட கேட்டிருப்பான். அதுங்க நான் சொன்னது உண்மையா, பொய்யான்னு  சொல்லியிருக்கும். அதனாலதான் நேரடியா ஈடுபடாம யாரையாவது களத்துல இறக்கி விட்ருப்பான். இதுல இறங்கியிருக்கறவங்களுக்கு இந்த 27 நாள்ல சாவுங்கறது தெரியாது.  பாவம் அவங்க...’’``அப்ப அவங்கதான் உங்ககிட்ட பல கோடிக்கு விலை பேசினவங்களா?’’
என்கிட்ட பேசினாங்க... அவ்வளவு ஏன்? என் வீட்டையே சல்லடை போட்டாங்க. இந்தப் பெட்டியைக் கூட பார்த்தாங்க! ஆனா, இதுதான் பலகணிக்கு வழிகாட்டற குறிப்பு  கொண்டதுங்கறது அவங்களுக்குத் தெரியல. இந்தத் தகரப் பெட்டியை அவங்க குப்பையாத்தான் பார்த்தாங்க. நான் ரகசியக் குறிப்பை செப்புப் பட்டயமா வச்சிருப்பேன்னு  நினைச்சு வந்துட்டாங்க. ஏமாற்றத்தோட திரும்பிப் போனாங்க. `திரும்ப வருவோம்’னும் சொன்னாங்க. நான் அப்ப சொன்னேன், `நீங்க வரமாட்டீங்க’ன்னு...’’- வள்ளுவர்  கொஞ்சம் இடைவெளி விட, ப்ரியா இம்முறை கேட்டாள்.

எதை வச்சு அங்கிள் `வரமாட்டீங்க’ன்னு சொன்னீங்க?’’ப்ரியா தன்னையுமறியாமல் அவரை அங்கிள் என்றதில் அவரிடம் ஒரு நெகிழ்வு.``ஒரு உள்ளுணர்வுல சொன்னேம்மா...  அதே மாதிரி போனவங்க ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அதனால என் வரைல சதுர்வேதிக்கு பயமும் கொஞ்சம் பக்தியும் கூட வந்துடுச்சி!’’
அவர்கிட்ட நீங்க நல்ல விலைக்கு வித்துருக்கலாமே... பணத்தை உங்க குடும்பத்துக்குக் கொடுத்தா அவங்க நல்லா இருப்பாங்க இல்லையா?’’
- வர்ஷன் இப்படிக் கேட்கவும், வள்ளுவர் அவனை ஒரு மாதிரி புன்னகையோடு பார்த்தார். அந்தப் புன்னகையை மொழிபெயர்க்க நிறையவே திராணி வேண்டும்.

தங்கத் துளிகள்

ஹால்மார்க் முத்திரையுள்ள நகைகளும் அதை விற்கும் கடைகளுமே உண்மையா பொய்யா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில் விளம்பரமே இல்லாமல்  தெருக்கோடியில் சைலன்ட்டாய் இயங்கும் நகைக்கடைகளின் தரம் எப்படி இருக்கும்? சென்னையைச் சேர்ந்த தர நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வின்படி, அப்படிப்பட்ட பல  கடைகளில் வாங்கிய தங்கத்தில் 40 சதவீதம் கலப்படம் உள்ளது. அதாவது, 1 லட்சம் ரூபாய்க்கு நுகர்வோர் நகை வாங்கினால் அவருக்கு 60 ரூபாய் மதிப்புள்ள தங்கம்தான்
கிடைக்கும்!

தங்கம் காரட் என்ற அலகால் மதிக்கப்படுகிறது. 24 காரட் உடைய தங்கம்தான் சொக்கத் தங்கம் என்று சொல்லப்படுகிறது. அடர்த்தி மிகக் குறைந்த இந்த சுத்தத் தங்கத்தில் நகை  செய்ய முடியாது என்பதால்தான் செம்பு, வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கத்தின் சதவீதத்தைப் பொறுத்து காரட் அளவீடு 22, 20, 18 என்று எட்டு  வரைக்கும் கூட செல்லும்!

இந்தியாவில்தான் தங்க நகைகள் 22 காரட்டில் இருக்க வேண்டும் என்று மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். வெளிநாடுகளில் 9, 10 காரட்டுகளில் எல்லாம் நகைகள் உண்டு.  குறைந்த காரட்டில் நகை செய்தால் விலை குறைவு என்பதோடு, உறுதியாகவும் இருக்கும் என்பதால் உலக மக்கள் அதை விரும்புகிறார்கள். ஆனால், நமக்கெல்லாம் நகைகள்  மேலுள்ள ஈர்ப்பை விட தங்கத்தின் மேலுள்ள ஈர்ப்புதானே அதிகம்.

 22 காரட் நகைகளில் சுத்த தங்கத்தின் அளவு 91.6 சதவீதமாக இருக்கும். மீதமுள்ளது செம்பு, வெள்ளி அல்லது வேறு ஆபரண உலோகங்களாக இருக்கலாம். ஆனால்,  லாபத்துக்காக சில வியாபாரிகள் செம்பு,  வெள்ளிக்கு பதில் பல்லேடியம், ருதேனியம், காட்மியம், சிலிகா, நிக்கல் போன்ற உலோகங்களைக் கலப்பதாக நுகர்வோர்  அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இவை சருமத்துக்கு ஒவ்வாமை தரலாம்.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்