ஜோக்ஸ்



‘‘என்ன கபாலி? நிறைய பீரோக்கள்கூட செல்ஃபி எடுத்திருக்கறியே... என்ன இது?’’
‘‘இதெல்லாம் நான் உடைச்ச பீரோக்கள் ஏட்டய்யா!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘கட்சிக் கூட்டத்துக்கு வேண்டியவங்க எல்லாம் வந்தாச்சா..?’’
‘‘வேண்டியவங்க 50 பேரும், வேண்டாதவங்க 100 பேரும்
வந்திருக்காங்க தலைவரே!’’
- சி.சாமிநாதன், கோயமுத்தூர்.

‘‘டாக்டர்! நீங்க எனக்குத்தானே ஊசி போட்டீங்க! ஏன் பக்கத்து பெட்ல இருக்கிறவரு கத்துறாரு?”
‘‘அதான் சொன்னேனே, இந்த ஊசிக்கு ‘பக்க விளைவுகள்’
 ஜாஸ்தின்னு!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘என் கணவருக்கு தலை சுத்துறதை நிறுத்த ஒரு மருந்து
குடுத்தீங்களே...’’
‘‘ஆமாம்... அதுக்கென்ன இப்போ?’’
‘‘அதேமாதிரி அவர் நர்ஸை சுத்துறத நிறுத்தவும் ஒரு மருந்து குடுங்க டாக்டர்!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

என்னதான் பாம்பு சட்டை போடும்னாலும், ரெடிமேடா எல்லாம் அதுக்கு சட்டை வாங்கிப் போட்டு அழகு பார்க்க முடியாது!
- மனைவி சொல்லை சட்டை செய்யாமல் சாட்டையடி வாங்குவோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘ஆபரேஷன்ல செத்துப் போன பேஷன்ட்டுக்காக டாக்டர் ஏன் அழறார்?’’
‘‘பீஸை யார் தருவாங்கன்னு சொல்லாம போயிட்டாராம்!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

அரிசி மூட்டையை எடை போடலாம். பருப்பு மூட்டையை எடை போடலாம். ‘புளுகு மூட்டையை’ எடை போட முடியுமா?
- உண்மையை எடை போடும்
உத்தமர்கள் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.