ஜோக்ஸ்





“ரெண்டே
 நாள் எங்க
ஹாஸ்பிட்டலில் நீங்க
தங்கினாப் போதும்...’’
‘‘என்
உடல்நிலை
தேறிடுமா
டாக்டர்?’’
‘‘ஹி... ஹி...
என்
பேங்க்
பேலன்ஸ்
ஓரளவு
தேறிடும்!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘எம்.ஏ.
கிரிமினாலஜி
பயிலும்
மாணவர்
களுக்கு,
தலைவருக்கு
வந்த
குற்றப்
பத்திரிகை
களைக் கொடுத்து
படிக்கச்
சொல்வதை
வன்மையாகக்
கண்டிக்கிறோம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘என்னய்யா இது... நிம்மதியா ஒரு வாய் சாப்பிடக்கூட விடாம இங்கேயும் குற்றப்
பத்திரிகை தர்றீங்களே!’’
‘‘தலைவரே, இது
மெனு கார்டு!’’
- யுவகிருஷ்ணா,
தூத்துக்குடி.

தத்துவம்
மச்சி
தத்துவம்

என்னதான் காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சுன்னு சொன்னாலும், அவசரத்துக்கு அதை அடகு வைக்கவோ, பாதி விலைக்கு விக்கவோ முடியுமா?
- ஜி.தாரணி, மதுரை.

‘‘யாரு ஏட்டய்யா அது?’’
‘‘யாரோ புதுத்
திருடனாம்.
‘திருடறதுக்கு
வாய்ப்பிருந்தா
சொல்லுங்க’ன்னு விசிட்டிங் கார்டு
கொடுத்துட்டுப்
போறான்!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘உங்க நர்ஸாலதான் டாக்டர்
 நான் இப்ப உயிரோட
இருக்கறேன்...’’
‘‘நான் இல்லாதபோது மருந்து,
மாத்திரை ஏதாவது குடுத்தாங்களா?’’
‘‘இல்லை... என்னை வேற டாக்டர்
கிட்ட போகச் சொல்லி அட்ரசும்
குடுத்தாங்க!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘கோர்ட்ல என்ன பிரச்னை?’’
‘‘குற்றவாளிக் கூண்டுல வச்சு தலைவருக்கு
யாரோ ஆரத்தி
எடுத்துருக்காங்க!’’
- அம்பை தேவா, சென்னை-116.