அஜாக்கிரதை



‘‘இப்படியா கதவைத் திறந்து வச்சிட்டு தூங்கறது ? எவனாவது உள்ளே நுழைஞ்சி எதையாவது தூக்கிட்டுப் போனா தெரியும்!’’ ‘‘கொஞ்சம் கூட அறிவு இல்லை உனக்கு?  பீரோவை பூட்டிட்டு சாவியை அதிலேயே விட்டுட்டே.. உன் அஜாக்கிரதை எங்கே போய் முடியுமோ தெரியலை!’’

‘‘என்ன இது ... ஜன்னல் திறந்திருக்கு? பக்கத்தில் இருக்கற டேபிளில் செல்போனை வச்சிருக்கே.. ஜன்னல் வழியா எவன் வேணும்னாலும் ஈசியா எடுக்கலாம் . கொஞ்சம் கூட  பொறுப்புஇல்லை! என்ன ஜென்மமோ தெரியலை...’’

  ‘‘பின்பக்கக் கதவை சாத்தி இருக்கே... ஆனா தாழ்ப்பாள் போடலை!’’ ‘‘என்னடி?  நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கேன், நீ பேசாமே உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம் ?  வாயைத் திறந்து பேசேன் !’’  கபாலியின் கூச்சலுக்கு நிதானமாக பதில் சொன்னாள் கௌரி...

 ‘‘இதெல்லாம், மத்தவங்க நீ இப்போ சொன்னியே அதுமாதிரி ஜாக்கிரதையா  இல்லாததால, நீ தூக்கிட்டு வந்ததுங்க. என் அஜாக்கிரதையால் எல்லாம் போனால் எனக்கு சந்தோஷம்தான் . முதலில் உன் தொழிலை மாத்து. வெளியில சொல்லிக்கற மாதிரி  கௌரவமா ஏதாவது தொழிலைச் செய். அப்புறம் நான் ஜாக்கிரதையா இருக்கேன்!’’

சிவாஜி