ஜோக்ஸ்



‘‘பொண்ணைப் பார்க்காமலே ஏன் பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்துட்டே?’’‘‘பொண்ணுக்கு மோகினி ஆட்டம்
தெரியுமாம்!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘என்னய்யா இது, என் பேச்சைக் கேட்க இன்னைக்கு இவ்வளவு கூட்டம் வந்துருக்கு?’’
‘‘தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கைதட்டலுக்கும் குலுக்கல் முறையில் பரிசு உண்டுன்னு அறிவிச்சிட்டோம் தலைவரே!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘கோர்ட்ல தலைவர் ‘நான் சொல்வதெல்லாம் டேஷ்... டேஷைத் தவிர வேறில்லை’ங்கறாரே, ஏன்?’’
‘‘அவரு வாயிலதான் உண்மையே வராதே!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘நம்ம டாக்டர் இந்த பத்தாம் நம்பர் பேஷன்ட்டை மட்டும் ரொம்ப வருஷமா டிஸ்சார்ஜ் பண்ணாம பெட்லயே வச்சிருக்காரே... ஏன்?’’
‘‘அவர் வந்த பின்னாடிதான் டாக்டருக்குத் தொழில்ல ஏறுமுகமாம்... அதான்!’’
- மு.மதிவாணன், அரூர்.

‘‘தலைவர் ஏன் ரொம்ப கடுப்பா இருக்கார்?’’‘‘அவரைப் பாராட்ட வந்த 90 வயது முதியவரும், ‘வாழ்த்த வயதில்லை’ன்னுட்டாராம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

ரீடர்ஸ்பேட்டை

‘மிஸ்டு கால்’ மூலம் கட்சிக்கு புது உறுப்பினர்களைச் சேர்க்கலாம். ஆனா ‘ஃபெவிகால்’ மூலம் கட்சிக்கு புது உறுப்பினர்களைச் சேர்க்க முடியுமா?
- பல கட்சிகளில் உறுப்பினராகும் பலே வாக்காளர்கள் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

ரஜினியை ரசிச்சா, அவர் ரஜினி ஃபேன்; கமலை ரசிச்சா, அவரு கமல் ஃபேன்; விஜய்யை ரசிச்சா, அவரு விஜய் ஃபேன். ஆனா ஒருத்தர் டேபிளை ரசிச்சா அவரை ‘டேபிள் ஃபேன்’னு சொல்ல முடியுமா?
- ஜி.தாரணி, மதுரை.