வித்தியாச நித்யா!



பாலசந்தருடன் ஆரம்பித்த ரஜினியின் கலைப் பயணம் பா.ரஞ்சித்திடம் வந்து நிற்பது சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமல்ல... அவர் ரசிகர்களுக்கும் செம எனர்ஜிதான்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

அருமருந்தான இளநீரை மறந்துவிட்டு, வெளிநாட்டு பானங்களில் மூழ்கிக் கிடக்கும் நம்மை ‘நாட்டு விதை’ யோகநாதன் போன்றோரின் சேவைதான் மீட்டு நல்வழிப்படுத்த வேண்டும்!
- காந்தி லெனின், திருச்சி.

கவர்ச்சியால் வாய்ப்புகளைக் கவர்ந்து செல்லும் நடிகைகள் எங்கே? ‘கிளாமர் காட்டும் அவசியம் இல்லை’ எனும் வித்தியாச நித்யா மேனன் எங்கே? ஆனாலும் ‘பிழைக்கத் தெரியாத’ நடிகை பாஸ்!
- மு.மதிவாணன், அரூர்.

‘எஞ்சினியரிங் படிப்புக்கு எதிர்காலம் உண்டா?’ என்ற கட்டுரை அனைத்து மாணவர்களுக்கும் பெரிய பூஸ்ட் அப். திறமையும் ஆழ்ந்த படிப்பும் இருந்தால் எப்போதும் எதிர்காலம் உண்டு
என்பதே நிதர்சனம்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘நீங்கள் படிக்கிற அதே படிப்புதான் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளியையும் உருவாக்குகிறது’ என்று கார்த்திக் லட்சுமணன் கூறும் கருத்து சத்தியமான உண்மை. பொறியியல் படிப்பவர்கள் பணியாளர் ஆக ஆசைப்படாதீர்கள்; முதலாளி ஆகுங்கள்.
- அ.குணசேகரன், புவனகிரி. 

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு நம்ம ராய் லட்சுமி சென்று மனமுருக வேண்டி வந்திருக்கிறார்னு போட்டிருந்தீங்க... அப்படி என்ன
வேண்டுனாங்க? பாலிவுட் வாய்ப்பா பாஸ்!?
- எஸ்.பால்பாண்டி, மதுரை.

ஆரோக்கியத்துக்காக அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையில்தான் எத்தனை தீமைகள்! ‘கிச்சன் to கிளினிக்’ இந்த வாரம் முழுக்கவே அதிர்ச்சி ரகம்!
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

இயக்குநர் வெங்கட்பிரபு ஒரே பேட்டியில் எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஐஸ் வைத்து குளிர்வித்து விட்டாரே... பிழைக்கத் தெரிந்த
புத்திசாலிதான்!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

ஸ்மார்ட்போனில் இணைத்து நம் உடலில் மாட்டிக்கொள்ளக் கூடிய பொருட்களுக்கு இத்தனை மவுசா? நீங்க சொன்னபடி, எல்லாருமே மாட்டிக்குவாங்கதான் போல!
- மயிலை.கோபி, சென்னை-83.

அமெரிக்க சாலை விதிகளின் விநோதத்தை ‘டகால்டி டிராபிக்’ என்று இதழ் முழுக்க தூவியிருந்தது நன்று. ‘டகால்டி’ எல்லாம் நம்பாளுங்க வேலை... டிராபிக்கை ஃபாலோ பண்ணுவது அமெரிக்கர்களின் வேலை எனப் புரிந்தது.
- ம.மதுவந்திகா, திருவண்ணாமலை.

அட்டையில்: சமந்தா
படம்: ‘ஆனந்தம் ஆனந்தம்’