facebook



facebook

சீனாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் பாகிஸ்தான்-செய்தி
# சீனா தயாரிப்பில் நல்ல கப்பல் வாங்குனாலே ஒரு வாரத்தில் மூழ்கிட்டுதான் போகும்!
- பூபதி முருகேஷ்

இங்கிதம் தெரியாத ஆண்கள்தான் குடிச்சிட்டு மனைவியை அடிக்கிறார்கள். இங்கிதம் தெரிந்த ஆண்கள்? அவங்ககிட்ட அடி வாங்கிட்டு அத மறக்க போய் குடிக்கிறார்கள்.
- செல்லி சீனிவாசன்



வாழ்க மறதி... மறதி மட்டும் இல்லையென்றால் இந்த உலகம் மனநோயாளிகளின் மகா இல்லமாகியிருக்கும்.
- பெ. கருணாகரன்

சோறு எவ்ளோ தின்னாலும் மைலேஜ் குடுக்க மாட்டேங்குது. சாயந்தரம்லாம் பசிக்க ஆரம்பிச்சிருது... எஞ்சின் ரிப்பேரான்னு தெரியல!
- ரிட்டயர்டு ரவுடி

தெரியாத்தனமா ‘மாரி’ படத்துக்கு என் பையனைக் கூட்டிட்டுப் போய்ட்டேன். வீட்டுக்கு வந்ததும் ‘‘ஹோம் வொர்க் செஞ்சியா’’ன்னு கேட்டேன். ‘‘செஞ்சுருவேன்’’ங்கறான்.
- அல்டாப்பு

அகிம்சையைக் கையில் எடுத்த காந்திக்குக் கூட எதிரி இருந்தது உண்டு... அணுகுண்டு வெடித்தும் கலாமுக்கு எதிரி இல்லை.
- அர்ஜுன் ராஜ்

வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பவனின் நிழல் வாசற்படியில் காத்திருக்கிறது கடைசியாய் அவன் விட்டுப் போன நாளிலிருந்து
- கலாப்ரியா

சிவராசன் கிடைக்கலைன்னா பேரறிவாளன்; டைகர் மேமன் கிடைக்கலைன்னா யாகூப் மேமன்... தூக்கில் தொங்க யாரோ ஒருத்தர் தேவை.
# இந்திய நீதி போல வினோத நீதி வேறெங்கும் இல்லை.
- மனுஷ்ய புத்திரன்

‘வாலு’ சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகுதாம்.
ஸ்ஸப்பா... சுதந்திரத்துக்குக் கூட நாட்டுல இவ்ளோ பிரச்னை இல்ல!
- பூபதி முருகேஷ்

முடிவே இல்லாத ஓர் இம்சையை விவரிக்க, ‘கிச்சன் சிங்க்கில் பாத்திரம் விழுவது போல’ என்று எழுதலாம்.
- விக்னேஸ்வரி சுரேஷ்

வேளாங்கண்ணி பீச்ல ஒருத்தன் இருவது ரூவா வாங்கிட்டு அரிசில பேர் எழுதிட்டு இருக்கான்... கடவுளா இருப்பானோ!
- விகே கமல்ராஜ்

எனக்கு இதுவரை விபத்தே நடந்ததில்லை என்கிறார்கள் பலர், திருமணமானதை மறந்து!
- வெங்கடேஷ் ஆறுமுகம்

மாமியார் - மருமகள் சண்டையில், அம்மா எதிரில் மனைவிக்கு குன்ஹா மாதிரி தீர்ப்பு சொல்லிவிட்டு, பெட்ரூமில் மனைவியிடம் குமாரசாமி மாதிரி கணக்கு சொல்பவர்கள் ‪பிழைக்கத் தெரிந்தவர்கள்‬.
- இளையராஜா டென்டிஸ்ட்

 அத்தனை தொலைத்தொடர்பு சாதனங்களையும் இணைப்பது மனங்களே!
- ஸ்மிதா ரமேஷ்

twitter

@urs_priya 
பார்க்காதபோது பார்ப்பதில் தொடங்கி... பார்க்கும்போதே பார்த்துக்கொண்டு... பார்க்கும்போதுகூட பார்க்காமல் கடப்பதில் முடிகிறது சில காதல்கள்!

@c*assic_k7 
பிரபலங்களே! எப்பொழுது மரணமடைவீர்கள்? அப்பொழுதுதான் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் இங்கே பகிரப்படுகின்றன!

@mymindvoice 
தோற்பதில் பிரச்னையில்லை... பிறகான கேலிகள்தான்
பயமுறுத்துகின்றன!

@iindran 
சிரித்தால் சில பெண்களுக்கு விழும் கன்னக் குழியையும் கவர்ச்சிப் பிரதேசமாக அறிவித்து விடலாம்!

@naIIavan
நேர்மையா இருக்கறவனைவிட, காசு இருக்கறவன் சொல்றதுதான் உண்மைன்னு நம்புது உலகம்.

@im_bahavathar19 
இங்கிலீஷ் தெரியாதவன ஏளனமா பாக்காதீங்கடா. தமிழ்நாட்டுல தமிழ் தெரியாதவனே கெத்தா சுத்துறான். அவன நாக்க புடுங்குற மாதிரி கேளுங்க...

@sundartsp 
மீனாகக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுத் தாருங்கள் என்பதே  கலாமின் மக்கள் அஞ்சலி அரசியல்வாதிகளுக்கு சொல்லும் செய்தி!

@Prabinraj1
எருமை மாடு சைஸ்ல நாயை வாக்கிங் கூட்டிட்டுப் போனா அது ஒரு சமூக அந்தஸ்தாம்... இருங்கடா, நான் எருமை மாட்டையே வாக்கிங் கூட்டிட்டு வர்றேன் :)

@ka*pana_job
துன்பம் வரும் வேளையில் சிரிங்கன்னு சொல்றாங்களே! வாழ்க்கையில துன்பம் மட்டுமே வந்துட்டே இருக்கே, சிரிச்சிட்டே இருந்தா நம்மள லூசுன்னு நினைக்க மாட்டாங்க?!

@chevazhagan1 
உலகிலேயே அடுத்தவரின் கனவு களைப் பற்றிக்கூட கவலைப்பட்டவர் கலாமாகத்தான் இருப்பார்...

@vettyve*an 
புகைப்பவர்கள் புகைக்கும் சிகரெட், பீடியினால் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் புற்றுநோயினால் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.

@paviparu31
பத்துமுறை சுற்றினாலே குயவனின் சக்கரத்தில் களிமண் பானையாகும்போது, நூற்றாண்டு களாய் பூமி சுற்றியும் மனித இனம் இன்னும் களிமண்ணாகவே இருக்கிறதே!

@YAADHuMAAGE 
உன் எண்ணம் போல் வாழ்க்கை அமையும் என்று படித்திருக்கிறோம். ஒரு உன்னத மனிதனின் மரணம் கூட அவர் எண்ணம் போல் மாணவர்களோடு உரையாடலின்போதே...

@r_vichu 
அன்பும் ஒரு பிச்சைதான். போட்டுட்டு போயிடணும். திருப்பி ஏன் கொடுக்கலன்னு வாக்குவாதம் செஞ்சுட்டு இருந்தா நமக்குதான் அசிங்கம்.

@Evanno_oruvan
அடேய், இதுக்கு மேல உள்ள போகணும்னா உன்னைக் கொன்னுட்டுதான் உள்ள போகணும்...
# தனியார் பஸ் கண்டக்டர் டார்ச்சர்கள்!