facebook



@billumohan83 
டிஜிட்டல் இந்தியா என்பது கட்டியிருக்கும் கோவணத்தை அவுத்துட்டு கையில் ஸ்மார்ட் போன் கொடுப்பதே!!!

இன்னிக்கு தேதியில மோனாலிசாவே வந்து செல்ஃபி எடுத்தாலும், போட்டோவுல பார்க்கும்போது ‘மை டியர் லிசா’ மாதிரிதான்
இருக்கும்.

- தேவி செல்வராஜன்

ஆனா ஒண்ணு! லவ் ஓகே ஆன பிறகுதான் நமக்குப் பொருத்தமான பொண்ணு வெளியில இருக்குங்குற உண்மை
தெரியும்! # டூலேட்!!!
- வேல் குமார்

@darlinretha
குழந்தைகளை வார்த்தைகளால் வளர்ப்பதை நிறுத்திவிட்டு, வாழ்ந்து காட்டி வளர்க்கப் பாருங்கள்..!

பொன் முட்டையிடும் வாத்தின் புருஷன் வாத்தை பார்க்க ஆசை...
- வேணுகோபால் ஃப்ரம் டைடல் பார்க்

@iampadithurai
ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அச்சிடப்பட வேண்டிய முக்கியமான வாசகம், ‘இது நிலையானது அல்ல’ என்பதே!

110 விதியை 181 தடவை அறிவித்து சாதனை... அதுக்கும் பாராட்டு!# செயல்படுத்திட்டு பாராட்டு விழா எடுக்காம, அறிவிச்சுக்கிட்டதுக்கே பாராட்டிக்கிட்ட ஒரே கவர்ன்மென்ட், மம்மி கவர்ன்மென்ட்தான்!
- ஷர்மிளா ராஜசேகர்

@mekalapugazh 
உண்மையான ஆறுதல் நிச்சயம் கண்ணீரை நிறுத்தும்; அல்லது கண்ணீரை வரவழைக்கும்...

மிகச்சரியான இடத்தில் மிகச்சரியாகப் பொருந்த மறுப்பது வார்த்தைகள் மட்டுமல்ல, வாழ்க்கையும் கூட...
- ப்ரியா கங்காதரன்

@vivaji 
செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்குன்னு கண்டுபுடிச்ச மனுஷனுக்கு, இருக்கிற தண்ணியை எப்படிக் காப்பாத்துறதுன்னு தெரியல!

அரவிந்த்சாமியை இன்னிக்கி நேற்றா வில்லனா பாக்கிறோம்! ‘‘மாப்ள அரவிந்த்சாமி மாதிரி இருப்பாரா?’’ன்னு கேட்க ஆரம்பிச்சதுல இருந்தே அவர் வில்லன்தான்
எங்களுக்கு...
- சாய் சுப்ரமணியன்

@VignaSuresh 
கடன் கேட்பதையும்விடக் கடினமானது, தாய்மொழியில் மன்னிப்பு கேட்பது.

@rajakumari90
தண்ணீர் இருக்கும் இடத்தில் பிளாட் போட்டு விக்கிறார்கள்; தண்ணீர் இல்லாத இடத்தில் பயிர் வைத்துத் தவிக்கிறார்கள்.

ஜோதிடர்: உங்க ஜாதகப்படி 10 வருஷத்துக்கு முன்னாடி செய்த வியாபாரத்தை இப்ப தலைகீழா செய்துக்கிட்டு வர்றீங்க, சரியா?
வந்தவர்: ஆமாமா! முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன். இப்போ ரவை வியாபாரம் செய்றேன்.
- அப்துல் சுபுகான்

twitter

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை
- நத்தம் விஸ்வநாதன்

12 மணி நேரம் கரன்ட்டு இல்லைன்னு வேணா சொல்லிக்கங்க...
- திப்பு சுல்தான் கே

மனைவி: வீட்ல கணவன்-மனைவி சண்டைன்னா நாலு சுவத்துக்குள்ளேதான் இருக்கணும்... கணவன்: அப்ப தப்பிச்சு ஓடக் கூட எனக்கு உரிமை
இல்ைலயா?
- அபினேஷ் அருண்

50வது முறையாகக் கண்ணாடி உடைந்தது. விமான நிலையத்தில் பொன் விழா.# விமான நிலையக் கண்ணாடிகளை எல்லாம் எச்சில் தொட்டு ஒட்டி இருப்பாங்களா... ஏன்டா இப்படி?

- இளையராஜா டெண்டிஸ்ட்

@urs_priya
குழந்தைகளைப் பொறுத்தவரையில் அம்மாவின் செல்போன் என்பது மற்றுமொரு விளையாட்டுப் பொருள்!

@cricgenie 
இட்லி, தோசை எல்லாம் பண்டிகை நாள் உணவாக மாறும் நாள் வந்துடும் போல... உருண்டை உளுந்து இன்றைய விலை 146 ரூபாய், துவரம் பருப்பு 150 ரூபாய்.

பாகுபலி லிங்கம் தூக்கி வருவதற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல, வாக்கிங் போய்விட்டுத் திரும்பும்போது முயல்குட்டியின் காதைப் பிடித்துத் தூக்குவது போல, சில்லிட்டிருக்கும் ஆவின் பால் பாக்கெட் முனையை இரண்டு விரல்களால் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நடப்பது.
- ஈரோடு கதிர்

@GKVinoth 
‘‘பொய் சொன்னா கடவுள் கண்ண குத்துவாரு’’ என்றேன் மகளிடம்! ‘‘லூசாப்பா நீ... பொய் சொன்னா
வாய்லதான குத்தணும்; ஏன் கண்ணுல குத்துறாரு’’ என்றாள்!

@urs_priya 
என்ன பிரச்னை என்னும் கேள்விக்கு சொல்லப்படும் பதிலான ‘‘ஒண்ணுமில்லை’’யில் ஒரு ‘லை’ இருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு மாதம் இரண்டு முறை சம்பளம் - அன்புமணி‪#‎ ஒருத்தரை ஏமாத்தணும்னா மொதல்ல அவங்களோட ஆசைகளைத் தூண்டணும்.

- சூர்யா பார்ன் டு வின்

@skpkaruna 
எனது மனக்குழப்பத்தைத் தீர்த்தது இந்தியக் கோவில்கள்தான் - மார்க் ஸுக்கர்பா்க்# இதைச் சொன்னவுடனே, டொனேஷன் புக்கை எடுத்து நீட்டியிருக்கணும். என்ன பிரதமரோ!

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது, ‘‘சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்? என்னுடன் வா, இந்தக் காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்...’’ அதைக் கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கிவிட்டு எலியுடன் நடந்தது.

சிறிது தூரம் சென்றபொழுது அங்கே ஒரு யானை உதட்டின் அடியில் ‘ஹான்ஸ்’ வைத்துக்கொண்டு நின்றது. எலி யானையிடம் கேட்டது, ‘‘சகோதரா! நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்? வா, இந்தக் காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்...’’ இதைக் கேட்ட யானை, ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்துவிட்டு எலியுடன் சென்றது.

அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும்பொழுது வழியில் சிங்க மகாராஜா சாராயம் குடித்துக்கொண்டிருந்தது. இதைக் கண்ட எலி, சிங்கத்திடம் கேட்டது... ‘‘மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக்கொள்கிறீர்கள்? இந்தக் காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா? என்னுடன் வாருங்கள், அடியேன் நான் காட்டுகிறேன்...’’

இதைக் கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதைக் கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன, ‘‘மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதானத் தூதுவனை அடித்தீர்கள்..?’’ அப்பொழுது சிங்கம் சொன்னது, ‘‘இந்தப் பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையேதான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே!’’