வலைப்பேச்சு - ஃபேஸ்புக்



மழை பெய்யும் மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது என்பதை சோஷலிசத்திற்கு எதிரானதாகவே பார்க்கிறார்கள் பிள்ளைகள்.
- சுந்தரம் சின்னுசாமி

இந்த ஆஷா சரத் எப்ப பாரு பையன தொலைச்சிட்டு கமல்கிட்ட கேக்குறதயே வேலையா வெச்சிருக்கு! - பாபநாசம் / தூங்காவனம்
- ஜெயச்சந்திர ஹஷ்மி

சில ‘இருந்திருந்தால்’களில் இன்றைய ‘‘ஐயோ, மழையா’’ பதறல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். # ஏரி, குளங்களைத் தூர் வாரி இருந்திருந்தால்... நீர்வழித் தடங்களை அழிக்காமல் இருந்திருந்தால்... விளைநிலங்களை அழிக்காமல் இருந்திருந்தால்... வீட்டுக்கு வீடு கால்வாய்களை வெட்டி இருந்தால்...
- மலர்விழி ரமேஷ்

ஏம்பா! ஏப்ரல் மாசம் மழை பெய்யலைனு, கழுதைகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்களே... அதுகளை தேடிப் பிடிச்சி, டைவர்ஸ் பண்ணி வச்சிடுங்கப்பா!

அடையாறு ஊரு இல்ல ஆறுன்னு இப்பதான் தெரியுது. அத ‘அடையார்’னு மாத்தி விட்டீங்களேடா...
- அனந்த பிரகாஷ்

‘‘ஹலோ, இப்போ நல்லா டவர் எடுக்குதே! எங்க இருக்கீங்க?’’‘‘டவர் மேலதான் இருக்கேன். வீடு தண்ணிக்குள்ள இருக்கு!’’

மழை பெய்வதை யார் யார் எப்படிச் சொல்வார்கள்?
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது
சலவைக்காரர் - வெளுத்துக் கட்டுதுங்க
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது
ஜூஸ் கடைக்காரர் - புழிஞ்சி எடுக்குது
டீக்கடைக்காரர் - ஆத்து ஆத்துனு ஆத்துது
செருப்பு கடைக்காரர் - செம அடி அடிக்குது
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது

@Nunmathiyon 
மாடில காயப் போட்டிருந்த துணியை எடுக்க மறந்து மழையில் நனைய விட்டதுக்காக குடும்பத் துரோக குற்றத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.

@Lekhasri_g 
‘‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’’ என்று சொல்ல முடியாதது வாழ்க்கை!

@rajaa_official 
நமக்குத்தான் வாழ்க்கை இப்டி சாவடிக்கிதுன்னு அந்தாண்ட எட்டிப் பாத்தா... ஒருத்தன் சங்குல கால வச்சிட்டு செல்ஃபி எடுத்துட்டு இருக்கு!

@Lekhasri_g 
மழையைப் போல் நீ கொட்டித் தீர்க்கும் அன்பில், சென்னை மாநகரைப் போல் திண்டாடித்தான் போகிறேன் அன்பே!

@Im_angel19 
இந்த உலகம் நம்மை வெறுக்காமல் இருக்க வேண்டும் என்றால், பல முகமூடிகள் அணிந்தால்தான் முடியும்!

@ManuMechstar 
இந்தக் காலத்துல செவ்வாய் கிரகத்துக்குக் கூட சேஃப்டியா போய் வந்துடலாம் போல, இந்தா இருக்குற சென்னைக்குப் போய் வர முடியல...

ஆறுகள் ஓடிக்கொண்டிருந்த இடத்தில் லாரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; லாரிகள் ஓடிக்கொண்டிருந்த இடத்தில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன!
- ரதி பாலா

வெங்காயம் விலை ஜாஸ்தின்னு திட்டாம இருந்துருக்கணும்.. இப்போ அது எல்லார்கிட்டேயும் சொல்லி, எல்லா காயும் 60 ரூபாய்க்கு மேல!
- ஷர்மிளா ராஜசேகர்

இதே நிலை நீடித்தால், மீனவர்கள் வழி தவறி சேலம் செல்ல வாய்ப்புள்ளது.
- ஷான் கருப்பசாமி

எரிச்சலுடன் ஒரு பள்ளி/ கல்லூரி மாணவனின் புலம்பல்... ‘‘தீபாவளிக்கு திங்கக்கிழமை ஒருநாள் சேர்த்து லீவு உடுங்கடானு கேட்டதுக்கு என்ன அலும்பல் பண்ணீங்க, அடிச்சாம் பாரு வருண பகவான் ஆர்டரு! இந்த வாரம் முழுசும் லீவுன்னு...’’

நான்கு மாத மழை தாங்கிய பூமியை, நான்கு நாள் மழையைக் கூட தாங்காத பூமியாக மாற்றியதுதான் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த சாதனை!
- அம்புஜா சிமி

அந்த போரூர் ஏரில மண்ணு ரொப்புனவன் எங்கியாச்சும் நீந்திக்கிட்டு இருக்கானா பாத்தீங்களா..?
- திப்புசுல்தான் கே

மக்கள் அவதிப்படுகின்றனர் என்றவுடன் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன -
முதல்வர் ஜெ.மின்சாரம் இல்லாததால்தான் அந்த ‪‘இயந்திரங்கள்‬’ பல இடங்களில் வேலை செய்யலை போல...

- இளையராஜா டென்டிஸ்ட்

தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல்களை சமாளிக்க ஐடியாக்கள்:

* புயலுக்கு ‘மோடி’னு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்குப் போயிரும்!
* மன்மோகன்னு வச்சா சைலன்ட் ஆயிடும்...
* ராகுல்னு பேர் வச்சோம்னா பாவம், அதுவே கன்ஃபியூஸ் ஆயிடும்...
* ஆனா, விஜய்காந்த்னு மட்டும் வச்சோம், அவ்ளோதான்... தூக்கி அடிச்சுரும்!

@raatworaa 
‘‘இந்த அட்ரஸ் எங்க இருக்கு’’னு ஒரு  சீட்டைக் கொடுத்து மெடிக்கல்ல கேட்டேன். நாலு கலர்ல மாத்திரைய எடுத்துட்டு வந்து நாப்பது ரூவா கேக்கறான்... அடேய்!

@sudhanks 
முதல் 25 நிமிஷம் செய்தியும் கடைசி 5 நிமிஷம் வானிலை அறிக்கையுமா இருந்துது, இப்ப மொத 25 நிமிஷம் வானிலை அறிக்கையும் கடைசி 5 நிமிஷம் செய்தியும்!

@itisprashanth 
‘குளங்களில் இருக்க வேண்டியது நீர், கட்டிடங்கள் அல்ல’ என  மக்களின் தலையில் கொட்டி தாண்டவமாடுகிறது சென்னை மழை...

@isr_selva 
நிவாரண நிதியில பாதி, அம்மா படத்தை பிரின்ட் பண்றதுக்கே செலவானதாகத்தான் இருக்கும்.

@Manjall 
ஏரியா இருந்ததெல்லாம் ஏரியாவாக மாறி மீண்டும் ஏரியாக மாறியது...
சென்னையில் மழை!

நிவாரண நிதியா? ஜெயலலிதா படத்தை பிரின்ட் பண்ணும் நிதியா? மக்கள் தவிக்கும்போது இத்தனை அவசரத்திலும், இடரிலும் ஜெயலலிதா படத்தை அச்சிட்ட பின்தான் நிவாரணப் பொருட்கள் வருகின்றன.
- செல்வகுமார்

 ‘‘உங்களால பத்திரமா தண்ணிய சேமிக்க முடியாதுன்னுதான் மேகதாதுல டேம் கட்டி நாங்களாவது வச்சுக்கிறோம்னு சொன்னோம்... இப்ப எங்களுக்கும் இல்லாம, உங்களுக்கும் இல்லாம போவுதே’’ன்னு கன்னடக்கார நண்பர் கேட்கிறார்.பிரச்னையை புரிய வைக்கிறதா? புரிஞ்சிக்கிறதா?
- கிர்த்திகா தரன்

 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், சென்னை சாலைகளில் வந்து பிடித்துக்கொள்ளலாம் எனவும் தமிழக வானிலை மையம் அறிவிப்பு!

ஜெ.வின் உலகம் மிகச் சிறிது! போயஸ் தோட்டம், சிறுதாவூர், கொடநாடு, ரங்கம், ஆர்.கே நகர், பெங்களூரு, சட்டசபை/கோட்டை...
# கடந்த 5 ஆண்டுகளில் அவர் பயணித்த இடங்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பறந்து சென்று இறங்கிய சில இடங்களைத் தவிர...
- எழிலன் எம்

மழை, வெள்ளம் எல்லாத்தையும் தாங்கிக்கலாம். ஆனால் அவசரத்திற்கு 24 மணி நேரமும் உதவிக்கு அழைக்கவேண்டிய எண் என்று ஒரு நம்பர் தர்றீங்களே... அதைத்தான்யா தாங்க முடியலை!
- மனுஷ்ய புத்திரன்

@writernaayon 
வெள்ளத்துக்கு அரசை ரொம்ப குறை சொல்லாதீங்கய்யா... ‘தாமாக முன்வந்து மழை நீரை வீட்டிற்குள் விட்டனர்’னு ஆரம்பிச்சுடுவாங்க!

@nizamdheen10 
‘‘காசு வாங்கிட்டுதானடா ஓட்டு போட்டீங்க?’’ என்ற ஒரு கேள்வி, பல கேள்விகளைக் கேட்க விடாமல் வாயடைக்கச் செய்து விடுகிறது.

 ஒரு பால் வியாபாரி தினமும் பாதிக்குப் பாதி தண்ணீர் சேர்த்து விற்றுவந்தான். நிறைய பணமும் சம்பாதித்தான். மேலும் ஒரு மாடு வாங்க எண்ணி பால் விற்ற காசை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். வெகுதூரம் நடந்ததில் களைப்பாகி விட்டான். ஒரு ஆற்றோரமாக மரத்தடியில் அமர்ந்தவன், களைப்பில் நன்கு தூங்கிவிட்டான்.

அருகே மரத்திலிருந்த குரங்கொன்று, அவர் வைத்திருந்த காசு மூட்டையைத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டது. விழித்துப் பார்த்த பால் வியாபாரி அதிர்ச்சியானான். அந்தக் குரங்கிடம் கெஞ்சினான், கதறினான், அழுதான். இறுதியில் குரங்கு அந்தப் பணமுடிச்சை அவிழ்த்து ஒரு காசைப் போட்டது.
இவன் மகிழ்ச்சியானான்.

பின் அடுத்த காசை அருகிலிருந்த ஆற்றில் போட்டது. மீண்டும் கதறினான். பின் தரையில் ஒரு காசு போட்டது. இப்படியே தரையிலும் தண்ணீரிலும் ஒவ்வொரு காசாகப் போட்டது. பால்காரனுக்கு அப்போதுதான் புரிந்தது, தண்ணீர் ஊற்றி சம்பாதித்த காசு தண்ணீரிலே போச்சு என்று!
பின் அவன் தண்ணீர் சேர்த்தே பால் விற்கவில்லை.

அதே போலத்தான் தமிழக அரசுக்கு தீபாவளி தண்ணீர் (மது) விற்பனையில் கிடைத்தது 372 கோடி. இப்ப அதையும் தாண்டி 500 கோடி (வெள்ள நிவாரணத்துக்காக) தண்ணிலயே செலவாகுது. இது நீதிக் கதையே; யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல!

@Aathithamilan 
‘‘ஆப்பிள் ஒரு கிலோ கொடுப்பா...‘‘சார், அது தக்காளி சார்!’’‘‘தக்காளியா? கிலோ ரூ.80 போட்டிருக்கு... அதான் ஆப்பிள்னு கேட்டுட்டேன்!’’

@psrajarajan 
முப்பது நாட்கள் பெய்ய வேண்டிய மழை மூணே நாளில் பெய்துவிட்டது - ஜெ.# வானலோக 110 விதியில் வருண பகவான் வாசித்து விட்டார் தாயே!

@naveenarendran 
500 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதற்கு, 100-200 கோடி செலவில் சென்னை சுற்று வட்டார ஏரிகளை தூர் வாரியிருந்தால் ஏன் இந்த நிலைமை?