எதுவுமே ஈஸி இல்லை!



அனுஷ்கா சொல்லும் எடை சீக்ரெட்

சென்னையோட எல்லா க்ளைமேட்டும் எனக்கு பழக்கமானதுதான். சாரலும் தூறலுமான சென்னை மழை கொள்ளை அழகு. ஆனா, இந்த தடவை வித்தியாசமான சென்னை. ஏர்போர்ட்ல இருந்து கார்ல வந்தது, போட்ல வந்த மாதிரி இருந்தது!’’ - அழகாக ஆச்சரியப்படுகிறார் அனுஷ்கா. ‘இஞ்சி இடுப்பழகி’ பட ப்ரமோஷனுக்காக சென்னை வந்திருந்த அனுஷ்கா, சற்று நேரம் ஹாயாக ஹயாத் ஹோட்டலில்.

‘‘ஹாட் வெஜ் பப்ஸ்... எடுத்துக்குங்க. டீ ஆர் காபி?’’ - வரவேற்பில் நூறு மார்க் அள்ளுது பொண்ணு.  ‘ருத்ரமாதேவி’ சமயத்தில் பார்த்த அனுஷ்காவில் பாதிதான் இருக்கிறார் இப்போது. ‘‘இந்த தீபாவளியைக் கூட செலிபரெட் பண்ண முடியல. ஒன்லி வொர்க் அவுட்.  எனி டைம் ஜிம்தான்.

இந்தப் படத்துக்காக கூடின பதினேழு கிலோ எடையில, இதுவரை ஒன்பது கிலோ குறைச்சிட்டேன். ‘இன்னும் எட்டு கிலோ குறைக்கணும்’னு இயக்குநர் ராஜமௌலி சொல்லியிருக்கார். ‘பாகுபலி 2’ டிசம்பர்லயே தொடங்குது!’’ - பேச்சுக்கிடையில் ஹோட்டல் லாபியில் ஆட்டோகிராப் கேட்டு வந்த ரசிகருக்கு, ‘ஸ்மைல் ஆல்வேஸ்... லவ் ஆல்வேஸ்... அனுஷ்கா’ என கையெழுத்திட்டு புன்னகைக்கிறார் அனுஷ். 

‘‘உடம்பு குறைக்கிற வொர்க் அவுட்கள் தெரியும். ‘இஞ்சி இடுப்பழகி’க்காக குண்டாக என்ன பண்ணீங்க?’’‘‘உடம்பு கொஞ்சம் குண்டா இருந்தாலே ‘நான் அசிங்கமா இருக்கேன். என்னை இனிமே யாரும்  பார்க்க மாட்டாங்க. எனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்காது’னு ஒரு பொண்ணு ஃபீல்  பண்ற அளவுக்கு நம்ம சொசைட்டி இருக்கு. அதைப் பத்தி பேசுற இந்த ஒன்லைன் எனக்குப் பிடிச்சது.

 ‘பாகுபலி 2’ ஷூட்டிங் உடனடியாக இருந்திருந்தா, இப்படி ஒரு படம் பண்ணியிருக்க வாய்ப்பில்ல. அதுக்கு டிசம்பர் வரை டைம் இருக்கு... அதுக்குள்ள உடம்பை ஏத்தி இறக்கிடலாம்னு இதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டேன். மூணு வேளைக்கு ஆறு வேளை சாப்பிட்டாலே ஈஸியா குண்டாகிடலாம்னு நினைச்சேன். ஆனா, அது தப்புனு வொர்க் அவுட் பண்ணும்போதுதான் தெரிஞ்சது.

நார்மலான சாப்பாடுதான் எடுத்துக்கிட்டேன். எண்ணெய், ஃப்ரைடு அயிட்டம்ஸ் எல்லாம் உடலுக்கு ஆரோக்கியம் இல்லைங்கறதால, அவாய்ட் பண்ணிட்டேன். நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கினேன். கார்போஹைட்ரேட்ஸ் நிறைய சேர்த்துக்கிட்டேன். தூக்கத்தைத் தவிர வேற எந்த டெக்னாலஜியையும் பயன்படுத்தல. முகம் கொஞ்சம் உப்பலா தெரியறதுக்காக எக்ஸ்ட்ரா மேக்கப் பண்ணினாங்க. இதுல சந்தோஷமான ஒரு விஷயம். ‘நீங்க குண்டு பெண் கேரக்டர்ல நடிச்சிருக்கறதால, அந்த கேரக்டருக்கு பெரிய மதிப்பு வந்துடுச்சு. இப்போ எல்லாரும் எங்களை மதிக்கறாங்க. தேங்க்யூ ஸ்வீட்டி’னு பெண்கள் பலபேர் என்கிட்ட சொன்னாங்க.  சந்தோஷமா இருக்கு!’’

‘‘பிரமாண்ட படங்கள்ல மட்டும்தான் நடிக்க சம்மதிக்கிறீங்கனு உங்க மேல ஒரு குற்றச்சாட்டு..?’’‘‘அப்படியெல்லாம் இல்லை. ‘அருந்ததி’க்கு அப்புறம் ‘அந்த மாதிரி ரோல்கள் எனக்கு செட் ஆகும்’னு நினைச்சு கதை சொல்ல வர்றாங்க. எனக்குப் பிடிச்ச கதைகளை பண்றேன். லெஜண்ட்ஸ், கிரேட் டைரக்டர்ஸ், பிரமாதமான ஸ்கிரிப்ட்னு இதுல எதாவது ஒண்ணு பொருத்தமா இருந்தா கூட அந்தப் படம் பண்ணிடுவேன். ஆக்‌சுவலா பெரிய பட்ஜெட்ல நடிக்கும்போது எனக்கு பயம் கொஞ்சம் ஜாஸ்தி இருக்கும். ‘இவ்வளவு பணம் போடும் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கணும்’னு கடவுள் கிட்ட வேண்டிப்பேன்!’’
‘‘ ‘பாகுபலி 2’ பத்தி பேசவே மாட்டேங்கறீங்களே..?’’

‘‘டிசம்பர்ல ஷூட்டிங் கிளம்பறோம். அனேகமா நியூ இயர் அன்னிக்கு கூட ஷூட்டிங் இருக்கும்னு ராஜமௌலி காரு சொல்லியிருக்கார். ‘பாகுபலி’ ஷூட்டிங்ல எனக்கு மறக்க முடியாத விஷயங்கள் நிறைய. ரம்யா கிருஷ்ணன் காரு, சத்யராஜ் காரு கேரக்டர்கள் எனக்கு ரொம்பப் பிடிச்சது. என்னோட டயலாக்குகளைக் கூட பேச மறந்துட்டு, ரம்யா கிருஷ்ணன் பர்ஃபார்மென்ஸை பார்த்துட்டு இருந்தேன். இந்த பார்ட்ல நான் ஸ்கோர் பண்ண நிறைய சான்ஸ் இருக்கு. பாடல்கள், டான்ஸ் இருக்குனு சொல்லியிருக்காங்க. ஆனா, ‘ருத்ரமாதேவி’ அளவுக்கு இதுல வாள் சண்டை எல்லாம் போட வேண்டியிருக்காது!’’
‘‘பிரபாஸுடன் லவ்... பிரேக் அப்...’’

‘‘சினிமா இண்டஸ்ட்ரியில வதந்திகள் புதுசில்லை. ஆர்யா, பிரபாஸ், ஏதோ ஒரு பிஸினஸ் மேன்னு வதந்திகள் கிளம்பிச்சு. ஒரு ஹீரோ கூட மறுபடியும் சேர்ந்து படம் பண்ணும்போது, காதல் கிசுகிசு கிளம்புறது சகஜம்தான்.

இதையும் அப்படித்தான் எடுத்துக்கணும்!’’‘‘சிங்கம் 3’க்கு ரெடியாகிட்டீங்களா?’’‘‘கலர்ஃபுல்லா மாடர்ன்  காஸ்ட்யூம்ஸ்ல நான் டூயட் பாடுறது எல்லாம் ‘சிங்கம் 2’வுக்கு அப்புறம் அமையலை. அதனால ‘சிங்கம் 3’க்காக  வெயிட்டிங். ‘சிங்கம் 3’லயாவது எனக்குக் கல்யாணம் நடக்குமானு எல்லாருமே  கேட்குறாங்க. அதை சொல்லிட்டா அப்புறம் என்ன சஸ்பென்ஸ்? ஆனா, டான்ஸ், டூயட் எல்லாம் இதுலயும் எனக்கு இருக்கும்னு நம்புறேன்!’’ 

‘‘மறுபடியும் ஸ்லிம் ஆக முடியாம கஷ்டப்படுறீங்க... ட்ரீட்மென்ட்டுக்காக தாய்லாந்து போகப் போறீங்கனு எல்லாம் சொல்றாங்க..?’’‘‘அப்படியெல்லாம்  இல்லீங்க. நோ பெயின்... நோ கெயின். எதுவுமே ஈஸி இல்லை. சடசடனு குண்டாகிட்டேன். பெண்கள் உடம்பை ஏத்திட்டு, உடனே அதைக்  குறைக்கணும்னா, சருமம், முகம் எல்லாமே பாதிக்கும். அதனால கொஞ்சம்  கவனம் எடுத்து வெயிட் லாஸ் பண்ண வேண்டியிருக்கு.

 அதைத்தான் வெளியே பெரிசுபடுத்தி சொல்றாங்க. கடந்த பதினைஞ்சு வருஷமா நான் யோகா, ஜிம்னு தினமும் வொர்க் அவுட்  பண்ணிட்டிருக்கேன். அதனால, தினமும் ரெண்டு தடவை ஜிம் போய் வொர்க் அவுட் பண்றது கஷ்டமா இல்ல. ஒன்பது கிலோ குறைச்சிட்டேன். இன்னும் எட்டு  கிலோதானே. குறைச்சிடுவேன். வாழ்க்கையில இப்படி சவால்கள் இருக்குறது இன்ட்ரஸ்ட்டிங்தானே!’’

- மை.பாரதிராஜா