வேலை ரெடி!




பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை


நிறுவனம்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
வேலை: மேனேஜர், எஞ்சினியர் என்ற இரண்டு துறைகளின் கீழ் 18 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: 53
கல்வித் தகுதி: பிரிவுகளில் உள்ள பல்வேறு துறைகள் சார்ந்து முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: வேலைப் பிரிவுகளின் தன்மைக்கேற்ப 32 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.8.14
மேலதிக தகவல்களுக்கு: www.bcplonline.co.in

சட்டக் கல்லூரியில் ஆசிரியர் பணி

நிறுவனம்: ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்புத் தேர்வு
வேலை: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் எல்.டி.சி எனப்படும் லோயர் டிவிஷன் க்ளார்க்
காலியிடங்கள்: 1997. இதில், டேட்டா என்ட்ரி வேலைக்கு 1006 இடங்களும், கிளார்க் வேலைக்கு 991 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: +2
வயது வரம்பு: 18 முதல் 27க்குள்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஸ்கில் டெஸ்ட் எனப்படும் திறன் அறிவுத் தேர்வும், தட்டச்சுத் தேர்வும் உண்டு.
தேர்வு நாள்: முதல் வேலைக்கு நவம்பர் 2ம் தேதி; இரண்டாம் வேலைக்கு நவம்பர் 9ம் தேதி
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.8.14. தகவல்களுக்கு: ssc.nic.in

முப்படையில் அதிகாரி பணிகள்

நிறுவனம்: இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வேலை. இந்த வேலைகளுக்கான தேர்வுகளை நடத்துவது யு.பி.எஸ்.சி. இந்தியன் மிலிட்டரி அகாடமி, இந்தியன் நேவல் அகாடமி, இந்தியன் ஏர்ஃபோர்ஸ் அகாடமி, ஆபீசர்ஸ் ட்ரெயினிங் அகாடமி (ஆண்கள்), ஆபீசர்ஸ் ட்ரெயினிங் அகாடமி (பெண்கள்) போன்ற துறைகளுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு இது.
வேலை: அதிகாரிகள்
காலியிடங்கள: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி: ஆபீசர் ட்ரெயினிங் அகாடமி, இந்தியன் மிலிட்டரி அகாடமி வேலைகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரியும், நேவல் அகாடமி பிரிவுக்கு எஞ்சினியரிங் பட்டமும், ஏர்ஃபோர்ஸ் அகாடமி பிரிவுக்கு +2வில் கணிதம், இயற்பியல் பாடங்களை படித்திருப்பதுடன் வேலை தொடர்பான எஞ்சினியரிங் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஒவ்வொரு அகாடமியும் தனித்தனியான வயது வரம்பைக் கோருவதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் வேலைப் பிரிவுக்கு ஏற்ப வயது உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்வது அவசியம்.
உடற்தகுதி: அந்தந்த அகாடமியின் வயது வரம்புக்கேற்ப உயரம், எடை இருத்தல் அவசியம். மார்பளவும், பார்வைத் திறனும் முக்கியம்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.8.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.upsconline.nic.in

அரசு விமானத் துறையில் பணி

நிறுவனம்: ‘ஹால்’ என்று சுருக்கமாக சொல்லப்படும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட். இது அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. அரசு விமானத்துறைக்கான டெக்னிக்கல் சேவைகளுக்கு உதவும் நிறுவனம் இது.
வேலை: விமானத்துறை சார்பான எலக்ட்ரிகல், எஞ்சின், ரேடியோ போன்ற 8 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: 56. (ஏர்ஃபிரேம் - 15, எலக்ட்ரிக்கல் - 12, இன்ஸ்ட்ரூமென்ட் - 9, ரேடியோ - 5, ராடார் - 3, எஞ்சின் - 6, ஆர்மமென்ட் - 4, மீட்ராலஜி - 2)
கல்வித் தகுதி:
முதல் 7 பிரிவுகளுக்கும் ஐ.ஏ.எஃப் டிப்ளமா படிப்பு அல்லது எஞ்சினியரிங் டிப்ளமா படிப்புடன் 5 வருட பணி அனுபவம் அவசியம். கடைசி பணிக்கு பத்தாவது படிப்புடன் கம்ப்யூட்டர் தேர்ச்சியும் அதில் அனுபவமும்
அவசியம்.
வயது வரம்பு:
28க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.8.14
தகவல்களுக்கு: www.halindia.com

அரசு எண்ணெய்த் துறையில் வேலை

நிறுவனம்: அரசு பொதுத்துறையான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி)
வேலை: எண்ணெய்த்துறை சார்ந்த எஞ்சினியரிங் பணிகள் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த 3 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: 138. இதில் ஏ1 லெவலின் கீழ் பல்வேறு எஞ்சினியரிங் வேலைகளில் 97,  ஏ2 லெவலின் கீழ் பல்வேறு எஞ்சினியரிங் வேலைகளில் 40, ஹெல்த் கேர் எனும் மருத்துவம் சார்ந்த வேலையில் 1 இடமும் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி: ஏ2 லெவலில் வரும் பல்வேறு அசிஸ்டென்ட் டெக்னீஷியன் வேலைகளுக்கு அந்தந்த துறையில் எஞ்சினியரிங் டிப்ளமோவும், ஏ1 லெவலில் உள்ள பல்வேறு ஜூனியர் அசிஸ்டென்ட் டெக்னீஷியன் வேலைகளுக்கு பத்தாவது படிப்புடன் அந்தந்தத் துறையில் சான்றிதழ் படிப்பும் அவசியம்.
வயது வரம்பு: ஏ2, ஏ1 வேலைகளுக்கு 30, மருத்துவ வேலைக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம். (தேர்வுகள் செப்டம்பர் மாதத்தில் இருக்கலாம்)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.8.14
தகவல்களுக்கு: www.ongcindia.com