வேலை ரெடி!



வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

கடற்படையில் எஞ்சினியர்

நிறுவனம்: இந்திய கடற்படைக்கு, ஷார்ட் சர்வீஸ் கமிஷன் தேர்வு மூலம் ஆட்களைத் தேர்வு செய்யும் அறிவிப்பு
வேலை: இரண்டு அடிப்படையான பிரிவுகளின் கீழ் இந்த வேலைகள் வழங்கப்பட உள்ளன. ஒன்று, எக்ஸிகியூட்டிவ் பிராஞ்ச். மற்றது டெக்னிக்கல் பிராஞ்ச். எக்சிகியூட்டிவ் பிராஞ்ச்சில் ஜெனரல் சர்வீஸ், ஹைட்ரோ கேடர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பணிகளும், டெக்னிக்கல் பிரிவில் ஜெனரல் சர்வீஸ், சப்மரைன், நேவல் ஆர்க்கிடெக்சர் வேலைகளும் உள்ளன. ஆண், பெண் இரு சாராரும் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி: வேலை தொடர்பான பி.இ, பி.டெக் எஞ்சினியரிங் படிப்பில் குறைந்தது 65 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சியில்
சி சர்ட்டிஃபிகேட் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை.
வயது வரம்பு: 19.5 முதல் 25 வயது வரை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 16.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.nausenabharati.nic.in

விளையாட்டு வீரர்களுக்கு வங்கி வேலை

நிறுவனம்: கனரா வங்கி
வேலை: கிளார்க் மற்றும் ஆபீசர்ஸ்
காலியிடங்கள்: 22. இதில் கிரிக்கெட்டுக்கு 10 இடம் (ஆண்கள் மட்டும்), அத்லெடிக் 4 இடம் (ஆண்/பெண்), பேட்மின்டன் 4 இடம் (ஆண்/பெண்), டேபிள் டென்னிஸ் 4 (ஆண்/பெண்) இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி. கம்ப்யூட்டர் திறன் அவசியம்
மற்ற தகுதிகள்: கிளார்க் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும், ஆபீஸர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கலந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: கிளார்க் வேலைக்கு 20 முதல் 28 வரை. ஆபீஸர் வேலைக்கு 21 முதல் 30 வரை.
(SC / ST 5 வருடமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 3 வருடமும் வயது தளர்ச்சி உண்டு.)
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.canarabank.com

பெட்ரோலியத் துறையில் வேலை!

நிறுவனம்: எச்.பி.சி.எல் எனப்படும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (மும்பை கிளை)
வேலை: பெட்ரோலிய சுத்திகரிப்பு தொடர்பான 7 அடிப்படைப் பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 97. இதில் ரிஃபைனரி ப்ரொஃபஷனல் எனும் அடிப்படைப் பிரிவில் மட்டும் 60 காலியிடங்கள். மற்ற வேலைகள் டெபுடி மேனேஜர் மெடிக்கல் சர்வீஸ், மெடிக்கல் ஆபீஸர், பப்ளிக் ரிலேஷன்/ மீடியா ஆபீஸர், இண்டஸ்ட்ரியல் எஞ்சினியர், சேஃப்டி ஆபீஸர் மற்றும் சார்ட்டட் அக்கவுன்டன்ட். இதில் சாட்டர்ட் அக்கவுன்டன்ட் வேலைக்கு 25 காலியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித் தகுதி: பல்வேறு வேலைகளுக்கு வேலை அனுபவம்தான் அடிப்படையான தகுதியாகக் கொள்ளப்படுகிறது.
வயது வரம்பு: பணிகளைப் பொறுத்து 25 முதல் 30 வயது வரை கேட்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 16.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.hindustanpetroleum.com

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை

நிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி)www.hindustanpetroleum.com
வேலை: நிலக்கரி சுரங்கத்துறையில் ஜூனியர் எஞ்சினியர் ட்ரெயினி
காலியிடங்கள்: 157

கல்வித் தகுதி: சுரங்கப் பொறியியலில் டிப்ளமோ படிப்பு. பொதுப்பிரிவினர், ஓ.பி.சி பிரிவினர் 60 சதவீதமும், பழங்குடி, தாழ்த்தப்பட்டோர் 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் (பழங்குடி, தாழ்த்தப்பட்டோருக்கு 5 வருடமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 3 வருடமும் வயதுத் தளர்ச்சி உண்டு.)
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 2.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.nlcindia.com

எஞ்சினியரிங் கல்லூரிகளில் பேராசிரியர் பணி

நிறுவனம்: டி.ஆர்.பி எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வேலை: தமிழ்நாடு எஞ்சினியரிங் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி. இந்த வேலைகள் எஞ்சினியரிங் மற்றும் நான்-எஞ்சினியரிங் என்று 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எஞ்சினியரிங் பிரிவில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங், ட்ரிப்பிள் இ, இ.சி.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளும், நான்-எஞ்சினியரிங் பிரிவில் கணிதம், கெமிஸ்ட்ரி, ஆங்கிலம் போன்ற பிரிவுகளும் அடங்கும்.

காலியிடங்கள்: மொத்தம் 139. தமிழில் படித்து தகுதியானவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உண்டு.கல்வித் தகுதி: எஞ்சினியரிங் துறை வேலைகளுக்கு துறை தொடர்பாக பி.இ, பி.டெக் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்-எஞ்சினியரிங் துறைகளுக்கு வேலை தொடர்பான முதுகலைப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பதோடு, நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி பெற்றிருப்பவர்கள் நெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
வயது வரம்பு: 35 வரைத் தேர்வு தேர்வு முறை: எழுத்து தேர்வு நாள்: 26.10.14 விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 5.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: trb.tn.nic.in


இந்தியக் கடற்படையில் வேலை


நிறுவனம்: இந்தியக் கடற்படையின் மும்பை தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் வேலைவேலை: ட்ரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகள்
காலியிடங்கள்: மொத்தம் 550. இதில், லோயர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 177 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வி: +2வுடன் சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றவர்கள் ஸ்டெனோகிராஃபர் பணிக்கும், +2வுடன் தட்டச்சு தெரிந்தவர்கள் லோயர் டிவிஷன் கிளர்க் வேலைக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், ஃபிட்டர், வெல்டர், டெய்லர் போன்றவற்றில் ஐ.ஐ.டி படித்தவர்களுக்கும், 8ம் வகுப்பு படித்தவர்களுக்கும் கூட வாய்ப்புகள் உண்டு.
வயது வரம்பு: 27 வயதுக்குள். (எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு வயது தளர்ச்சி உண்டு)
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வுகள் உண்டு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 15.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: irfcnausena.nic.in

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பாதுகாப்புப் படை வேலை

நிறுவனம்: சி.ஐ.எஸ்.எஃப் (சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ்) எனப்படும் மத்திய அரசின் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்புப் படை.
வேலை: பார்பர், குக், வாஷர்மேன், ஸ்வீப்பர், வாட்டர் கேரியர், பெயின்டர், எலெக்ட்ரீஷியன் போன்ற பல்வேறு வேலைகள் கான்ஸ்டபிள் எனும் பதவியின் கீழ் வருவன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: மொத்தம் 985. (பழங்குடி, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உண்டு)
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு வரை படிப்பு. தொழிற்கல்விகளில் சான்றிதழ் படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 முதல் 23 வரை. பழங்குடி, தாழ்த்தப்பட்டோருக்கு 5 வருடமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 3 வருடமும் வயது தளர்ச்சி உண்டு.
உடற் தகுதி: உயரம் 170 செ.மீட்டரும், மார்பளவு 80-85 செ.மீட்டருக்குள் இருத்தல் வேண்டும். கண் பார்வைத் தகுதியும் தேவை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 16.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.cisf.gov.in

எல்லை பாதுகாப்புப் படையில் பணி

நிறுவனம்: பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (பி.எஸ்.எஃப்) எனும் எல்லைப் பாதுகாப்புப் படை
வேலை: கான்ஸ்டபிள் பதவியில் காப்ளர், டெய்லர், கார்பென்டர், பெயின்டர் போன்ற பல்வேறு துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 1670. (ஆண்களுக்கு மட்டும்)

கல்வித் தகுதி: பத்தாவது படிப்பு. இத்தோடு, துறை தொடர்பான அனுபவமோ அல்லது தொழிற்கல்வி படிப்புச் சான்றிதழோ அல்லது இரண்டு வருட டிப்ளமோ படிப்போ அவசியம்.
வயது வரம்பு: 18 முதல் 23க்குள் (பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு வயது தளர்ச்சி உண்டு)
உடற் தகுதி: உயரம் 167.5 செ.மீட்டரும், மார்பளவு 78 முதல் 83 செ.மீ. வரையும் இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து, உடற் தகுதி சோதனை, தொழிற்திறன் சோதனை. இத்தோடு மருத்துவ பரிசோதனையும் உண்டு.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 2.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.bsf.nic.in

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பொறியியல் பணிகள்

நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்காக கேரளாவில் இயங்கும் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர்.
வேலை: ஆறு பிரிவுகளில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சயின்டிஃபிக் அசிஸ்டென்ட், ப்ரைமரி டீச்சர் போன்ற வேலைகள் இதில் குறிப்பிடத்தக்கன.
காலியிடங்கள்: மொத்தம் 37. இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 26, ப்ரைமரி டீச்சர் 5
இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: டெக்னிக்கல் அசிஸ்டென்டுக்கு துறை தொடர்பான டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 3.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.vssc.gov.in