வேலை ரெடி!



வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

விமானப்படையில் பயிற்சி + வேலை!

நிறுவனம்: இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் வேலை
வேலை: ஏர்மேன். குரூப் எக்ஸ், குரூப் ஒய் என இதில் இரு பிரிவுகள் உள்ளன. இதில் குரூப் எக்ஸ் என்பது டெக்னிக்கல். குரூப் ஒய் என்பது நான் - டெக்னிக்கல் வேலை. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி: குரூப் எக்ஸ் வேலைக்கு +2 படிப்புடன் (கணிதம், இயற்பியல், ஆங்கிலப் பாடங்களில் 50 சதவீதத்துக்கும் குறையாத மதிப்பெண்கள்), மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்பர்மேஷன் டென்காலஜி படிப்புகளில் டிப்ளமா எஞ்சினியரிங் படிப்பு படித்திருக்க வேண்டும். குரூப் ஒய்யில் +2 படிப்புடன் 2 வருட ஐ.டி.ஐ தொழிற்படிப்பு படித்திருக்க வேண்டும்.
உடற் தகுதி: 152.3 செ.மீ உயரமும், மார்பளவு விரிவடைதல் 5 செ.மீட்டரும் இருத்தல் அவசியம்.
தேர்வு முறை: எழுத்து, உடற்திறன் தேர்வு, நேர்காணல், மருத்துவத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.indianairforce.nic.in

சிவில் நீதிபதி பதவி

நிறுவனம்: தமிழக அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு. வேலை: தமிழக நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி
காலியிடங்கள்: மொத்தம் 162. கல்வித் தகுதி: சட்டப் படிப்பு முடித்து, ஐகோர்ட் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமோ, உதவி அரசு வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமோ உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: பொதுப்பிரிவினர் 25 முதல் 35 வயதினராக இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். வக்கீல் படிப்பை முடித்த புதியவர்கள் எனில், 22 முதல் 27 வயதுள்ளோரும் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 21.9.14
மேலதிக தகவல்களுக்கு: www.tnpsc.gov.in

எஞ்சினியர்களுக்கு ராணுவத்தில் வேலை!

நிறுவனம்: இந்திய ராணுவம்
வேலை: பெர்மனன்ட் கமிஷன் அடிப்படையிலான அதிகாரி வேலை. (திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்)
காலியிடங்கள்: மொத்தம் 60. சிவில் துறையில் 30, மெக்கானிக்கல் 12, எலட்ரிக்கல் மற்றும் எலட்ரானிக்ஸ் 6, டெலிகம்யூனிகேஷன் மற்றும் சேட்டிலைட் கம்யூனிகேஷன் 6, ஆக்கிடெக்சர் மற்றும் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷன் சயின்ஸ் 4.
கல்வித் தகுதி: வேலைப் பிரிவு தொடர்பான படிப்புகளில் பி.இ முடித்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 25.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

கல்பாக்கம் அணுசக்தி மையத்தில் வேலை!

நிறுவனம்: கல்பாக்கத்தில் செயல்படும் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையம்
வேலை: சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் மற்றும்
ஸ்டைஃபண்ட்ரி டிரெயினி
காலியிடங்கள்: 104
கல்வித் தகுதி: சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் வேலைக்கு சிவில், மெக்கானிக்கல், இண்டஸ்ட்ரியல் சேஃப்டி, ஆர்க்கிடெக்சர் போன்றவற்றில் டிப்ளமோ எஞ்சினியரிங் படிப்பும், ஸ்டைஃபண்ட்ரி டிரெயினி பணிக்கு கார்ப்பென்ட்ரி, ப்ளம்பிங், எலெட்ரீஷியன், வெல்டர், மில்ரைட், மேசன் போன்ற துறைகளில் ஐ.டி.ஐ சான்றிதழ் படிப்பும் படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 30க்குள் (சமூக வாரியாக இட ஒதுக்கீடும் உண்டு)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 30.9.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.igcar.ernet.in

10வது படித்தவர்களுக்கு சுரங்கத் துறையில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசின் ‘சென்ட்ரல் மைன் ப்ளானிங் அண்ட் டிசைன் இன்ஸ்டிடியூட்’ எனும், சுரங்க வடிவமைப்பு ஆய்வுத் துறை
வேலை: அசிஸ்டென்ட் ட்ரில்லர், ரிக்மேன், அசிஸ்டென்ட் ஃபோர்மேன் எனும் 3 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 64. கல்வித் தகுதி: ரிக்மேன் வேலைக்கு அந்தப் படிப்பில் ஐ.டி.ஐ சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். மற்ற இரண்டு வேலைகளுக்கும் பத்தாவது படிப்புடன் மெக்கானிக்கல் ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் துறையில் டிப்ளமா படிப்பு தேவை. வயது வரம்பு: எல்லா வேலைகளுக்கும் குறைந்தபட்ச வயது 18. அதிகபட்ச வயது, பொதுப்பிரிவினருக்கு 30, ஓ.பி.சிக்கு 33, எஸ்.சி மற்றும் எஸ்.டியினருக்கு 35. விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 23.9.14 விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: cmpdi.co.in

டிப்ளமா எஞ்சினியர்களுக்கு வேலை

நிறுவனம்: மத்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) தென்னகக் கிளைகள். வேலை: டெக்னிக்கல் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் டெக்னீஷியன், ஜூனியர் அசிஸ்டென்ட். காலியிடங்கள்: மொத்தம் 318 இடங்கள்.
கல்வித் தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெக்கானிக்கல், கெமிக்கல் பாடங்களில் டிப்ளமா எஞ்சினியரிங் படித்தவர்களுக்கு கணிசமான இடங்களும், சில குறிப்பிட்ட பாடங்களில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு சில பணியிடங்களும் உள்ளன. வயது வரம்பு: பெரும்பாலான வேலைகளுக்கு 18 வயது முதல் 30க்குள் இருக்க வேண்டும். சில வேலைகளுக்கு அதிகபட்ச வயது 40. கடைசித் தேதி: 27.9.14. மேலதிக தகவல்களுக்கு: www.ongcindia.com

பாதுகாப்புப் படையில் பல்வேறு பணிகள்!

நிறுவனம்: பி.எஸ்.எஃப் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை
வேலை: ப்ளம்பர், வெல்டர், டெக்னிக்கல், கார்பென்ட்ரி போன்ற 10 பிரிவுகளில் கான்ஸ்டபிள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் பதவிகளில் வேலை
காலியிடங்கள்: 80
கல்வித் தகுதி: பத்தாவது படிப்புடன் வேலைப் பிரிவு தொடர்பாக ஐ.டி.ஐ சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 முதல் 25க்குள். (பழங்குடி, தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட வகுப்புகளுக்கு வயது தளர்ச்சி உண்டு) விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 20.9.14 விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.bsf.nic.in

அணுசக்தி ஆராய்ச்சிப் பணி

நிறுவனம்: மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்.
வேலை: டெக்னீஷியன் (பாய்லர் அட்டெண்டன்ட்)
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: பத்தாவது படிப்புடன் பாய்லர்
அட்டெண்டன்ட் துறையில் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 முதல் 30க்குள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 19.9.14
மேலதிக தகவல்களுக்கு: www.barc.gov.in

அரசு அச்சகத்துறையில் வேலை!

நிறுவனம்: தமிழக அரசின் அச்சகத் துறையில் வேலை. இதற்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்துகிறது
வேலை: அசிஸ்டென்ட் ஒர்க்ஸ் மேனேஜர் எனும் உதவி மேலாளர் பணி
காலியிடங்கள்: மொத்தம் 9
கல்வித்தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் பி.இ முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 முதல் 30க்குள்
தேர்வு நாள்: 1.11.14
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.9.14
மேலதிக தகவல்களுக்கு: www.tnpsc.gov.in