+2 ஆங்கிலம் முதல் தாள் சென்டம் வாங்குவது எப்படி?



‘‘தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் முழு மதிப்பெண் பெறுவது சிரமம் என்ற அவநம்பிக்கை மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. சரியான திட்டமிடலும், தொடர்ச்சியான உழைப்பும், கவனச்சிதறல் இல்லாத ஈடுபாடும் இருந்தால் நிச்சயம் சென்டம் எடுக்கலாம்’’ என்று நம்பிக்கையை விதைக்கிறார், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆங்கில ஆசிரியர் ஏ.இளங்கோவன். இதற்கு அவர் தரும் ஆலோசனைகள்...

‘‘கேள்வியின் தன்மையை நன்கு புரிந்து உணர்ந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும். ஆங்கிலம் முதல்தாளைப் பொறுத்தவரை Section A,B,C,D,E என ஐந்து பிரிவுகளில் மொத்தம் 69 கேள்விகள் கேட்கப்படும். Section A (vocabulary Lexical Competencies)  உட்பிரிவு மி  P‘A’ மற்றும் ‘B’ பகுதிகளில் உள்ள 1 முதல் 10 வரையிலான வினாக்கள் Synonyms மற்றும்  Antonyms வகையில் (Multiple choice Question)  கொள்குறி வினாக்களாகக் கேட்கப்படுகிறது.  rose Lesson ä   முடிவில் உள்ள பயிற்சி வினாக்களில் இருந்தே பெரும்பாலும் கேட்கப்படும். இதுவரை நடந்துள்ள பொதுத்தேர்வுகளின் வினா வங்கியைப் படித்தாலே அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து விடலாம்.

அடுத்து உட்பிரிவு மி‘சி’ யில் உள்ள 11 முதல் 23 வரையிலான கேள்விகளில் 10 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

11-வது கேள்வி  Plural form (text book page no. 24). இதில் கொடுக்கப்படும் 2 வார்த்தைகளில் ஒன்றுக்கு விடை எழுதவேண்டும். கொடுக்கப்பட்டுள்ள Singular  சொல்லுக்குச் சரியான ‘Plural word’ எழுதுவதோடு, அதை வைத்து ஒரு ‘Meaningful sentence’ எழுத வேண்டும்.

12-வது கேள்வி    Idiom (Page no. 284) கொடுக்கப்பட்டுள்ள Idiom ஐ வைத்து ஒரு Sentence எழுத வேண்டும். 

13வது கேள்வி  Abbreviation (Page no.124, 125) கொடுக்கப்பட்டுள்ள Abbreviation ஐ  expand  செய்து, அதை வைத்து ஒரு Sentenceம் எழுத வேண்டும்.

14-வது கேள்வி    ‘Homophones’ (Page no. 179, 180) Fill in the blanks type-ல் கேட்கப்படும்.

15-வது கேள்வி    ‘Blending words (Page no. 227) சரியான ‘Blending word’ மற்றும் Sentenceக்கு தலா ஒரு மதிப்பெண் வீதம் இரண்டு மதிப்பெண் வழங்கப்படும்.

16-வது கேள்வி    ‘Syllabification’ (Page no. 176).  கொடுக்கப்படும் 4 வார்த்தைகளில் ஏதேனும் இரண்டு வார்த்தையை ‘Syllabify‘ செய்ய வேண்டும்.

17-வது கேள்வி     ‘Parts  of speech’ (Page no.

78, 79). கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் உள்ள Noun, Adjective, Verb எழுத வேண்டும்.

18-வது கேள்வி     American English (Page no. 25).  

19-வது கேள்வி    Use compound word in a sentence. கொடுக்கப்பட்டுள்ள compound  word ஐ வைத்து  Sentence எழுத வேண்டும்.

20-வது கேள்வி    prefix  அல்லது suffix-ஐ வைத்து Sentence frame  செய்வது.

21-வது கேள்வி    compound words  (Page  no. 125)

22-வது கேள்வி    Phrasal verbs  (Page no. 293)

23-வது கேள்வி    ‘chipped words’ (Page no.  226, 227)

 மேற்கண்ட கேள்விகளுக்கு பாடப்புத்தகத்தில் அடைப்புக்குறியில் குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்தில் உள்ள பயிற்சி வினாக்களை படித்தாலே போதும். அடுத்து Section B,II A. (Grammatical Competencies). 24 முதல் 33 வரையிலும் 10 ஒரு மதிப்பெண் வினாக்கள். இதில் Modal Verb,  Semi, Quasi  modal ல் இருந்து 2 வினாக்கள், Tense, clause  இல் இருந்து 2 வினாக்கள், Relative Pronoun இல் இருந்து 2 வினாக்கள், Phrase or preposition  - Link word ல் இருந்து தலா ஒரு வினா, kind of passive voice, sentence pattern -ல் இருந்து இரண்டு வினாக்கள் இப்பகுதியில் கேட்கப்படும். section II B ஆனது 34 முதல் 38 வரையிலான ஐந்து கேள்விகளை உள்ளடக்கியது.

34-வது கேள்வி ‘Report the dialogue’.  இதை Direct to Indirect method -ல் எழுத வேண்டும். 35-வது கேள்வி ‘Inversion of the sentence’,  அதாவது ‘were’, had, should, would  போன்றவை களைக் கொண்டு வாக்கியத்தை தொடங்குவது. 36, 37, 38 ஆகிய மூன்று கேள்விகளில் இரண்டு கேள்விகள் simple to compound  ஆக, (or) compound to complex  ஆக, (or) complex to simple sentence  ஆக மாற்ற வேண்டும். எஞ்சிய ஒரு கேள்விக்கு ‘in case of’, ‘though’ ‘if’  போன்ற சொற்களை கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தோடு இணைத்து எழுத வேண்டும்.

section ‘C’, உட்பிரிவு III A (Reading Competencies). இதில் 39 முதல் 43 வரை 5 வினாக்கள் கேட்கப்படும். இந்த கேள்விக்கான clues  கீழே அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும். பொருத்தமான clue -வை தேர்வுசெய்து எழுத வேண்டும்.  III B (comprehension) கொடுக்கப்பட்டுள்ள passage ஐ கவனமாகப் படித்து, 44 முதல் 48 வரையிலான 5 கேள்விக்கு விடை எழுத வேண்டும். மிக எளிய முறையில் 10 மதிப்பெண்களை பெறக்கூடிய பகுதி இது.

அடுத்து section ‘D’ (writing competency prose).  இப்பிரிவு மொத்தம் 15 மதிப்பெண்களை உள்ளடக்கியது. இதில் 49 முதல் 51 வரையுள்ள மூன்று paragraph கேள்விகளில் ஒன்றுக்கு மட்டும் விடை எழுதவேண்டும். சரியான விடைக்கு 5 மதிப்பெண்கள். 52 முதல் 54 வரையுள்ள 3 Essay type வினாக்களில் ஏதேனும் ஒரு ணிssணீஹ்ஐ எழுத வேண்டும்.

முதல் மூன்று பாடத்திற்காக Essay  வை படித்தாலே, paragraph மற்றும் Essay வுக்கு விடை எழுதி விடலாம்.அடுத்து Section ‘E’ (Literary competencies  poetry).  இதில் பிரிவு V A-ல் 6 கேள்விகள்(55 முதல் 60 வரை). ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தில பதில் அளிக்கவேண்டும். மொத்தமுள்ள 6 poem ஐ வகுப்பில் கவனித்தாலே போதும். இதற்கு விடையளித்து விடலாம்.

61 முதல் 63 வரை (Section VB) ‘poetic devices’, அதாவது ‘figure of speech’, ‘alliteration’, , ‘allusion’  போன்றவை கேட்கப்படும். மிகவும் எளிமையானது. இதில் ‘allusion’ மொத்தத்தில் இரண்டு மட்டுமே. ஒன்று ‘The Holy Bible’, மற்றொன்று S.T.Coleridge‘s ‘The Time of the Ancient Marines’. (கொடுக்கப்பட்டுள்ள வினாவில் ‘Albatross’ என்ற வார்த்தை இருந்தால் மட்டும் இதை எழுதவும்.

மற்றவைகளுக்கு ‘The Holy Bible’)அடுத்து (Section c). 64 முதல் 66-வது கேள்வி வரை ERC. இதில் உள்ள 3 வினாக்களில் ஏதேனும் இரண்டுக்கு மட்டும் விடை எழுதவேண்டும். Poem மற்றும் poet-ன் பெயருக்கு மட்டும் இரண்டு மதிப்பெண் கிடைத்து விடும். Clue words வைத்தே இது எந்த Poem என்பதை தெளிவாக அறிந்து விடையளித்து விடலாம்.

இறுதியாக (Section V ‘D’) 67 முதல் 69 வரை உள்ள 3 paragraph  கேள்விகளில் ஒன்றிற்கு விடை எழுத வேண்டும். இதற்கு முதல் 3 Poetryparagraph ஐ படித்தாலே போதும். மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் ஆங்கிலம் முதல் தாளிற்கு எளிமையான முறையில் விடையளித்து முழு மதிப்பெண்கள் பெற்று
விடலாம்.

E.இளங்கோவன் தந்திருக்கும் வினாத் தொகுப்பு அடுத்த பக்கத்தில்...