கேம்பஸ் நியூஸ்



முன்னாள் படைவீரர்  வாரிசுகளுக்கு உதவித்தொகை!

2014-15ம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி (பி.இ, எம்.பி.பி.எஸ், பி.பி.ஏ, எம்.பி.ஏ, எம்.சி.ஏ, பி.எட்) முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படை வீரர்களின்  வாரிசுகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இந்த உதவித்தொகை பெற அவர்கள் 12ம் வகுப்பு, இளங்கலை பட்டப்படிப்பு ஆகியவற்றில் 60 சதவீதத்துக்கும் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  

இதற்கான விண்ணப்பப் படிவம்
 
 www.desw.gov.in   என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில்  நவம்பர் 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதிலிருந்து தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் பெண்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.27  ஆயிரமும்,
ஆண்களுக்கு தலா ரூ.24 ஆயிரமும் வழங்கப்படும்.

ஐ.ஐ.டி பாட்னாவில் பிஎச்.டி பொறியியல், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் எனப் பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி ஆய்வை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஐ.ஐ.டி  பாட்னா வரவேற்கிறது. நிகிஜிணி அல்லது ழிணிஜி ஆகிய தேர்வுகளில், ஒருவருடைய செயல்பாட்டின் அடிப்படையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, எழுத்துத்தேர்வு  மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31. ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். மேலும்  விபரங்களுக்கு: www.iitp.ac.in

ஜிப்மரில் முதுநிலை மருத்துவப் படிப்புகள்  பல்வேறு முதுநிலை மருத்துவப் பிரிவுகளில், எம்.டி. மற்றும் எம்.எஸ். படிப்புகளுக்கு, 2015-ம்  கல்வியாண்டில் சேர்வதற்கான விண்ணப்பங்களை ஜிப்மர் வரவேற்கிறது. இப்படிப்புகளில் மொத்தம் 118 இடங்கள் உள்ளன. ஜிப்மர் கல்வி நிறுவனத்தால், நவம்பர்  23ம் தேதி நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. SC / ST / OPH பிரிவினருக்கு ரூ.800. ஆன்லைனில் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம். உத்தேச  தேர்வுப் பட்டியல் வெளியாகும் தேதி, நவம்பர் 28. வகுப்புகள் துவங்கும் நாள், ஜனவரி 1.விவரங்களுக்கு: www.jipmer.edu.in

அரசு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் தொழில்நுட்பம், மற்றும் மேலாண்மை படிக்கும் மாணவர்கள் குறுகிய கால பணி அனுபவம் பெறுவது அவர்களின் பாடத்திட்டத்திலேயே முக்கியமான அம்சம்.  இன்டர்ன்ஷிப் எனப்படும் இந்தப் பயிற்சி அனுபவத்தை வழங்க, தற்போது மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையே முன்வந்திருக்கிறது.  TIFAC எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் துறை Technology Information Forecasting and Assessment Council என விரிகிறது. இவர்களால்  முக்கியமானதாக கருதப்படும் அம்சங்களி லிருந்து, இன்டர்ன்ஷிப் மேற்கொள்வோருக்கான அசைன்மென்ட்டுகள் கொடுக்கப்படும். இன்டர்ன்ஷிப்பின் கால அளவு அதிகபட்சம்
6 மாதங்கள். B.Tech/ M.Sc/ M.Tech/MBA  ஆகிய படிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கும் நபர்கள், இந்த இன்டர்ன்ஷிப்பை மேற்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள்.  இந்தப் பயிற்சி பணிக் காலத்தின்போதே B.Tech / M.Sc. ஆகிய படிப்பு களை மேற்கொள்வோருக்கு, மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும்.  M.Tech / M.B.A படிப்போருக்கு, மாதம் ரூ.12,000 வழங்கப்படும்.

இன்டர்ன்ஷிப் மேற்கொள்வோருக்கு, எந்த தங்குமிட வசதியும் வழங்கப்பட மாட்டாது. இன்டர்ன்ஷிப் மேற்கொள்வோர், அந்த இன்டர்ன்ஷிப் காலகட்டத்தில்,  முழுநேரம் பணியாற்ற வேண்டியது அவசியம். மேலும் விபரங்களுக்கு: tifac.org.in

டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ!

டெல்லி பல்கலைக்கழகத்தில் 2015ம்  கல்வியாண்டில் 2 வருட எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ., ஹெல்த்கேர் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் (மாலைநேர படிப்பு) வழங்கப்படுகின்றன. இதற்கு  விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் 3 வருட இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வணிகத் தொழில் நிறுவனங்களில்  5 வருடப் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம், ரூ.1000/-
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நவம்பர் 10ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள். மேலும்  விவரங்களுக்கு, www.du.ac.in
ஆராய்ச்சிப் படிப்புக்கு உதவித்தொகை

டாக்டோரல் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்வோருக்கு, ழிசிணிஸிஜி மூலமாக வழங்கப்படும் உதவித் தொகையைப் பெற விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. கல்வி மற்றும் அதுதொடர்பான துறைகளில், ஆராய்ச்சியை மேற்கொள்ள இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கீழ்க்கண்ட தலைப்புகளில் செய்யப்படும் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA)
Sarva Shiksha Abhiyan (SSA)
Concerns related to Teacher Education Schemes
Role of teacher education Teacher Educators Education
NCERTஆல் நடத்தப்படும் நேர் முகத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களில் ழிணிஜி தகுதியில்லாத நபர்களுக்கு மாதம் ரூ.12,000மும், NET  தகுதியுள்ள நபர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரமும் வழங்கப்படும். மொத்தம் 3 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப் படவுள்ளது. உதவித்தொகைக்கு  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், அக்டோபர் 20. மேலும் விவரங்களுக்கு: www.ncert.nic.in

ஐ.ஐ.டி புவனேஸ்வரில் ஆராய்ச்சிப் படிப்பு!

புவனேஸ்வரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில், பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க எம்.டெக்., எம்.இ., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அக்டோபர் 15ம் தேதி முதல்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம், ரூ.500 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். மகளிருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.  ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 20. மேலும் விவரங்களுக்கு:  www.iitbbs.ac.in

பி.ஜி.பி மேனேஜ்மென்ட்  படிக்கலாம்!


ஐதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தில் பி.ஜி.பி மேனேஜ்மென்ட் படிப்புக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. 2015-16 கல்வியாண்டில் முதுகலையில் மேலாண்மைப் படிப்பு வழங்கப்பட உள்ளது. இப்படிப்புக்கு இளங்கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட  முழுநேரப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். GMate நுழைவுத்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வும் உண்டு.  விண்ணப்பிக்க கடைசி தேதி, நவம்பர் 30. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க, pgpapp.isb.edu/user/default.aspx

கேட்-2014 தேர்வுக்கு  ஆன்லைன் பதிவு குறைவு!

gate 2014 ஐ.ஐ.எம்., மற்றும் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ படிப்புகளில் சேர காமன் அட்மிஷன் டெஸ்ட் எனப்படும் கேட் நுழைவுத்தேர்வு  ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு கேட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வெகுவாகக்  குறைந்துள்ளது.
2013ம் ஆண்டில் 3,220 சேர்க்கை இடத்துக்கு 1.94 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு 3,335 சேர்க்கை இடத்துக்கு 1.89 லட்சம் பேர்  மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளில் இது போல கேட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் குறைந்ததில்லை என்கிறார்கள்.

பிர்லா இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி.டி.எம் படிக்கலாம்!

நொய்டாவில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜியில், பி.ஜி.டி.எம்(Post Graduate Diploma in Management PGDM)படிப்புக்குத்  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் சேர விரும்புகிறவர்கள் இளங்கலை படிப்புடன்
CAT / XAT / MAT / GMAT / CMAT ஆகிய நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை ஆன்லைனில்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1500/-க்கு வரைவோலை எடுத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு:  www.bimtech.ac.in