வேலை ரெடி!



வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...எஞ்சினியர்களுக்கான அரசு நிறுவனத்தில் வேலை

நிறுவனம்:

எஞ்சினியர்ஸ் இந்தியா லிமிடெட் (இ.ஐ.எல்)

வேலை:

எஞ்சினியரிங் மற்றும் ஹெச்.ஆர் துறையில் மேனேஜ்மென்ட் டிரெயினி வேலை (எஞ்சினியரிங் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல் மற்றும் சிவில் துறைகள் அடங்கும்)

காலியிடங்கள்: 13.

கல்வித் தகுதி:

எஞ்சினியரிங் துறைக்கு பி.இ., பி.டெக் மற்றும் பி.எஸ்சியில் எஞ்சினியரிங் படிப்பு. ஹெச்.ஆர் பிரிவுக்கு எம்.எஸ்.டபுள்யூ, எம்.பி.ஏ, பி.ஜி.டி.எம் படிப்பு அவசியம்

வயது வரம்பு:

25க்குள் (சில பிரிவினருக்கு வயது தளர்ச்சி உண்டு)

தேர்வு முறை
: எழுத்து

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 4.11.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.engineersindia.com

இந்திய கடற்படையில் வேலை

நிறுவனம்    :    கடலோரக் காவல்படை தலைமையகம், கல்கத்தா

வேலை        :    ஸ்டோர் கீப்பர், ஃபிட்டர், டிரைவர் போன்ற 6 பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்: 25

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரையிலான படிப்பும் சில பிரிவுகளுக்கு சான்றிதழ் படிப்பு, அனுபவமும் தேவை

வயது வரம்பு: 18 முதல் 27 வரை

தேர்வு முறை:
எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10.11.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.indiancoastguard.nic.in

ரெயில்வேயில் அப்ரண்டிஸ்

நிறுவனம்: மத்திய பணியாளர் தேர்வாணையக் குழுவான யு.பி.எஸ்.சி நடத்தும் ரயில்வேயிலுள்ள மெக்கானிக்கல் துறையில் பணிபுரிவதற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரெயில்வே அப்ரண்டிஸ் தேர்வு (எஸ்.சி.ஆர்.ஏ)
வேலை: மெக்கானிக்கல் துறையில் அப்ரண்டிஸ்

காலியிடங்கள்: 42

கல்வித் தகுதி: +2 படிப்பில் கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலில் தேர்ச்சி
வயது வரம்பு: 17 முதல் 21க்குள் (சில பிரிவினருக்கு வயது தளர்ச்சி உண்டு)

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்  தேதி: 7.11.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.upsconline.nic.in

காந்தி கிராமத்தில் பேராசிரியர் பணி


நிறுவனம்: காந்தி கிராம கிராமப்புற கல்வி நிறுவனம், திண்டுக்கல்

வேலை: 19 துறைகளில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிகள்

காலியிடங்கள்
: மொத்தம் 22

கல்வித் தகுதி: தொடர்புடைய துறைகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பு

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 14.11.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக
தகவல்களுக்கு: www.ruraluniv.ac.in

நாடாளுமன்றத்தில் வேலை


நிறுவனம்: இந்திய நாடாளுமன்ற பணியாளர்களைத் தேர்வு செய்யும் நாடாளுமன்றத்தின் ஜாயின்ட் ரெக்ரூட்மென்ட் செல் என்ற அமைப்பு பணியிடங்களையும் தேர்வையும் அறிவித்திருக்கிறது.

வேலை: ஆங்கில, இந்தி மொழிக்கான ஸ்டெனோ மற்றும் கார் டிரைவர்
காலியிடங்கள்: 45. இதில் ஸ்டெனோ துறையில் மட்டும் ஆங்கிலத்துக்கு 33, இந்திக்கு 8, டிரைவர் 4 என காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: ஸ்டெனோவுக்கு ஏதேனும் டிகிரியுடன் தட்டச்சில் ஒரு நிமிடத்துக்கு 80 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கார் டிரைவர் பணிக்கு பத்தாவது படிப்புடன் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

வயது தகுதி: 27க்குள்

தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் தொழில் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10.11.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு:   loksabha.nic.in


சினிமா இன்ஸ்டிடியூட்டில் வேலை

நிறுவனம்: பூனாவிலுள்ள மத்திய அரசின் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா

வேலை:
ஆசிரியர் மற்றும் ஆசிரியர்
அல்லாத மற்ற துறைகள்

காலியிடங்கள்: மொத்தம் 58 (29 பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன)
கல்வித் தகுதி: குறிப்பிட்ட துறைகளில் டிகிரியோ அல்லது டிப்ளமா படிப்போ
அவசியம்

வயது வரம்பு:
துறைகளைப் பொறுத்து 50, 45, 40, 30, 25 என வயது வரம்பு குறிக்கப்பட்டுள்ளது. சில பிரிவினருக்கு வயது தளர்ச்சி உண்டு

தேர்வு முறை: எழுத்து, கம்ப்யூட்டர் திறன் மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 17.11.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.ftiindia.com

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை!

நிறுவனம்:
ராஜஸ்தானிலுள்ள சென்ட்ரல் ஷீப் அண்ட் வூல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சி.எஸ்.டபிள்யூ.ஆர்.ஐ)

வேலை: ஸ்கில்டு சப்போர்ட் ஸ்டாஃப் மற்றும் லேப் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

காலியிடங்கள்: 8. இதில் முதல் பணியில் 7 இடங்களும் இரண்டாம் பணியில் 1 இடமும் காலியாக உள்ளன. சில பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உண்டு

கல்வித் தகுதி: முதல் வேலைக்கு பத்தாவது படிப்போ அல்லது ஐ.டி.ஐ படிப்போ போதுமானது. இரண்டாம் வேலைக்கு விவசாயம் தொடர்பான துறையில் படிப்பு அவசியம்

வயது வரம்பு:
முதல் வேலைக்கு 18 முதல் 25 வரை. இரண்டாம் வேலைக்கு 18 முதல் 30 வரை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 17.11.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.cswri.res.in

ஸ்டீல் தொழிற்சாலையில் மேனேஜர் பணி

நிறுவனம்: செயில் எனப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் மேற்கு வங்காள தொழிற்சாலையான இஸ்கோ

வேலை:
ஜூனியர், அசிஸ்டென்ட் மற்றும் டெபுடி மேனேஜர் பணிகள்

காலியிடங்கள்: 89. இதில் முதல் பணிக்கு 13, இரண்டாம் பணிக்கு 3, மூன்றாம் பணிக்கு 73 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பணி 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

கல்வித் தகுதி:
முதல் வேலைக்கும் மூன்றாம் வேலைக்கும் ஏதாவது துறையில் எஞ்சினியரிங் பட்டமும், இரண்டாம் பணிக்கு மெட்டலர்ஜி எஞ்சினியரிங் துறையில் பட்டமும் அவசியம்.

வயது வரம்பு:
முதல் வேலைக்கு 30 வயதுக்குள்ளும், இரண்டாம் வேலைக்கு 34 வயதுக்குள்ளும், மூன்றாம் வேலைக்கு 37 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 3.11.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.sail.co.in