நிலக்கரி நிறுவனத்தில் 465 வேலை!



மினிரத்னா நிறுவனங்களில் ஒன்றான மேற்கு கோல்ஃபீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Mining Sirdar / Shot Firer,  Surveyor (Min) பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 465

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1.Mining Sirdar /Shot Firer, T-S GradeC  438

சம்பளம்: மாதம் ரூ.19,035 + இதர படிகள்

2.Surveyor (Min) T-S Grade B  27

சம்பளம்: மாதம் ரூ.20,552 + இதர சலுகைகள்

கல்வித் தகுதி: மைனிங் சிர்தர் / ஷார்ட் ஃபயரர் டி அண்டு எஸ் கிரேட் ‘சி’ பணியிடங்களுக்கு மைனிங் எஞ்சினியரிங்கில் டிப்ளமாவை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, கேஸ் டெஸ்டிங், ஃபர்ஸ்ட் எய்டு போன்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மைனிங் சர்வேயர் டி அண்டு எஸ் கிரேட் ‘ஙி’ பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முடித்திருப்பதோடு மைனிங் சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது டிப்ளமா இன் மைனிங் மற்றும் மைனிங் சர்வேயிங் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.10.2014 தேதிப்படி 18-30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதி வாய்ந்தவர்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய கையொப்பமிட்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ‘General Manager(P/IR), Western Coalfields  Limited, Coal Estate, Civil Lines, Nagpur  440001’

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- இதனை தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் வங்கியில் ‘Western Coalfields Limited’ என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்கதாக டி.டி.யாக எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர கடைசி தேதி: 05.02.2015
கூடுதல் விவரங்களுக்கு: www.westerncoal.nic.in