கேம்பஸ் நியூஸ்



காலணி வடிவமைப்பு படிப்புக்கு அட்மிஷன்!

நொய்டாவில் உள்ள புட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் காலணி வடிவமைப்பு படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: பி.டிசைன் (புட்வேர் டிசைன் அண்ட் ப்ரொடக்ஷன் மேனேஜ்மென்ட், லெதர் கூட்ஸ் அண்ட் அக்சசரிஸ் டிசைன், பேஷன் டிசைன், ரிடைல் அண்ட் பேஷன் மெர்கன்டைல்ஸ், எம்.டிசைன் (கிரியேடிவ் டிசைன், கேட்/கேம்)

கல்வித் தகுதி: B.DES படிப்புக்கு விண்ணப்பிக்க +2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வி.ஞிணிஷி படிப்புக்கு இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
படிவங்களை கல்வி நிறுவன இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கையேடு மற்றும் விண்ணப்பப் படிவம் பெற ரூ.500 செலுத்த வேண்டும்.

கடைசித் தேதி: 15.5.2015

விரிவான தகவல்களுக்கு:  www.fddiindia.com

உதவித்தொகையுடன் எம்.டெக் படிப்பு

தன்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (ஐ.எஸ்.எம்),   GATE   நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எம்.டெக் படிக்க வாய்ப்புடன் மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் உதவித்தொகையையும் வழங்குகிறது.

கல்வித் தகுதி:
இளங்கலையில் பொறியியல் / டெக்னாலஜி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். (எஸ்சி, எஸ்.டி மற்றும் சிறப்புப் பிரிவினருக்கு 35)

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.2000, சிறப்புப் பிரிவினருக்கு ரூ.1000.

கடைசித் தேதி: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் 28 கடைசி நாள்.

விரிவான தகவல்களுக்கு:   www.ismdhanbad.ac.in 

கௌதம் புத்தா பல்கலையில் எம்.பி.ஏ


நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா பல்கலைக்கழகத்தில், முதுகலை மேலாண்மை படிப்புக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எம்.பி.ஏ (எச்.ஆர்.எம், பினான்ஸ், மார்க்கெட்டிங், புள்ளியியல், ஆபரேஷன் மேனேஜ்மென்ட், ஐ.டி, டூரிசம் அண்ட் டிராவல்) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை தேர்ச்சி.

விண்ணப்பிக்க: பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பொதுப் பிரிவினர் ரூ.1200ம், சிறப்புப் பிரிவினர் ரூ.600ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் குழுக் கலந்துரையாடல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 10க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு:   www.gbu.ac.in 

பெட்ரோலியம் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ

நொய்டாவிலுள்ள ராஜீவ்காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோலியம் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் மேலாண்மைத் துறை, 2 ஆண்டு எம்.பி.ஏ படிப்பை 2015-2017ம் கல்வி யாண்டில் வழங்கவுள்ளது.

கல்வித் தகுதி: பி.இ அல்லது பி.டெக் பட்டப் படிப்போடு, செல்லத்தக்க CAT/GMAT 2014   அல்லது XAT 2015 தேர்வு மதிப்பெண்களைக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். முறையான கல்வித் தகுதிகளைக் கொண்டிருந்து, கம்பெனிகளால் ஸ்பான்சர் செய்யப்படும் நபர்கள், படிப்பிற்குப் பிறகான 2 ஆண்டு பணி அனுபவம்  பெற்றிருப்பின், அவர்கள், CAT/GMAT/XAT போன்ற தேர்வுகளில் ஒன்றை கட்டாயம் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.3.2015

கூடுதல் தகவல்களுக்கு :   www.rgipt.ac.in

ராணுவக் கல்லூரியில் 8ம் வகுப்பு சேரலாம்

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் 8ம் வகுப்பில் சேர்வதற்கு (ஆண்கள் மட்டும்) விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 1.1.2016ம் தேதியன்று, பதினொன்றரை முதல் 13 வயதுக்குள் இருக்க வேண்டும். வரும் ஜூன் 1ம் தேதி, காலை 10.00 மணி முதல் பகல் 12.00 வரை ஆங்கிலத் தேர்வு, மாலை 2.00 முதல் 3.30 வரை கணக்குத் தேர்வு, 2ம் தேதி காலை 10.00 மணிக்கு பொது அறிவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அக்டோபர் 6ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது. விண்ணப்பப் படிவத்தை, பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் பெற, அஞ்சல் குறியீட்டு எண் உள்ள முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றுடன் கோரிக்கை மனுவை அனுப்ப வேண்டும்.பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலுக்கான தொகையையும் விண்ணப்பக்கட்டணத்தை சேர்த்து The Commandant, Rashtriya Indian Millitary College, Dehradun, Drawee branch, State Bank of india, Tel Bhavan, Dehradun (bank Code 01576) uttarkhand எனும் பெயரில் டி.டி எடுத்து மனுவுடன் இணைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :
பொதுப்பிரிவினருக்கு ரூ.430/- சமூகப் பிரிவுகளுக்கு ஏற்ப கட்டணச் சலுகை உண்டு. விண்ணப்பிக்க கடைசித் தேதி மார்ச் 31.

விண்ணப்பம் பெற தொடர்புகொள்ளவேண்டிய முகவரி: இந்திய தேசிய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்ராஞ்சல் -248003

விண்ணப்பப் படிவம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குனர், இரண்டாம் தளம், ‘அ’ அடுக்ககம், காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம்,அண்ணா நகர், சென்னை.