கேம்பஸ் நியூஸ்



ஐ.ஐ.டி. ரூர்கியில் எம்.டெக்., எம்.ஆர்க்.,

ரூர்கியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் எம்.டெக்., எம்.ஆர்க் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்.டெக். படிப்புக்கு பொறியியல் துறையில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.ஆர்க். படிப்புக்கு பி.ஆர்க் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் ரூ.400ம், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் சிறப்புப் பிரிவினர் ரூ.200ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். நிகிஜிணி  நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலும், நேர்முகத்தேர்வு  மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்ரல் 9 கடைசி நாள். கூடுதல் தகவல்களுக்கு காண்க: www.iitr.ac.in

தொலைதூரக் கல்வியில் பொறியியல் கிடையாது

தொலைதூர கல்வி மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளை நடத்துவதற்கு யு.ஜி.சி. தடை விதித்துள்ளது. ‘‘தொலைதூரக் கவுன்சில்(டெக்) அமைப்பின் பணிகள் யு.ஜி.சி. கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே தொலைதூரக் கல்வி திட்டத்தில் வழங்கப்படும் படிப்புகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளைத் தவிர, தொலைதூரக் கல்வி திட்டத்தில் பிற தொழில்நுட்ப பாடங்கள் மற்றும் பட்டய படிப்புகளை நடத்தக்கூடாது’’ என யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.


குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு


2014ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் இதற்கான ஆளுமைத் தேர்வு நடத்த உள்ளது. சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் இரண்டு அலுவலக வேலை நாட்களில் இப்பயிற்சி மைய அலுவலகத்தில் வழங்கப்படும்.

முதன்மைத் தேர்வில் வெல்லும் தமிழ்நாட்டைச் சார்ந்த அனைவரும் இப்பயிற்சிக்கு சேர தகுதியுடையவர்கள். இப்பயிற்சி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மூன்று புகைப்படம், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் இப்பயிற்சி மையத்தில், மூத்த இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி அலுவலர்களையும், கல்லூரிகளின் பேராசிரியர்களையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ஆளுமைத் தேர்வுக்கு, புது டெல்லி செல்லும் மாணவ/மாணவியர்களுக்கு பயணப்படியாக ரூ. 2000 வழங்கப்படுகிறது. மேலும் பத்து நாட்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்ள ஏற்பாடுகளும் இப்பயிற்சி மையத்தால் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:

முதல்வர், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், 163/1, காஞ்சி வளாகம்,
 பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
சென்னை-28. தொலைபேசி எண். 044-24621475.