வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்!



ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்

வெளிநாட்டுக் கல்வி என்பது கடந்த தலைமுறைக்குப் பெரும் கனவு. பணம் இருப்பவர்களுக்கும், செல்வாக்கு மிக்கவர்களுக்கும் மட்டுமே சாத்தியமான வெளிநாட்டுக் கல்வி, இன்று எல்லாத் தரப்புக்கும் எட்டும் அளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது. நன்றாக படிக்கக்கூடிய, தட்பவெப்ப மாறுதல்களை தாங்கிக்கொள்ளக் கூடிய, குறிப்பிட்ட காலத்துக்கு குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கக்கூடிய மனோபாவம் மிக்க மாணவர்கள் இன்று சாதாரணமாக வெளிநாடு போய் படிக்க முடியும்.

ஒரு காலத்தில் இந்தியாவை எட்டிக்கூடப் பார்க்காமல் புறக்கணித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இன்று இந்திய மாணவர்களைக் குறிவைத்து வந்து கொண்டிருக்கின்றன. இன்று ஆண்டுக்கு 2 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக்கு கல்விக்காக செல்லும் அளவுக்கு நிலைமை மேம்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. ஏன் வெளிநாட்டில் போய் படிக்க வேண்டும்? வெளிநாட்டில் போய்ப் படித்தால் இந்தியாவில் வேலை கிடைக்குமா? நிறைய செலவாகும் போலிருக்கிறதே? வெளிநாட்டில் படிக்க என்னவெல்லாம் தகுதிகள்? இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள் நமக்கு உண்டு. எல்லா சந்தேகங்களுக்கும் நாம் விடை தேடலாம்...

1980-90களில் வெளிநாடு போய் படிப்பதென்றால் அமெரிக்கா அல்லது இங்கிலாந்துக்கு மட்டுமே செல்வார்கள். அதுவும் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் சிறப்புக்கல்வி படிக்க மட்டுமே வெளிநாடு செல்வார்கள். 2002ம் ஆண்டிலிருந்து நிலை மாறிவிட்டது. கல்வியில் ஏற்பட்ட போட்டி, மறுமலர்ச்சி காரணமாக வெளிநாட்டுக் கல்வி நடுத்தர மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பங்கள் மத்தியிலும் கூட முக்கியத்துவம் பெறத் தொடங்கி விட்டது. இணையம் உலகத்தையே ஒரு கூகுளுக்குள் சுருக்கிவிட்டதால் எல்லாம் எளிதாகிப் போனது. தஞ்சாவூரின் ஒரு குக்கிராமத்தில் அமர்ந்துகொண்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளமுடிகிறது.

இந்தச் சூழலில் கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகள் இந்திய மாணவர்களை ஈர்க்கத் தொடங்கின. முதுகலை மற்றும் உயர்படிப்புகளுக்கு மட்டுமே வெளிநாடு சென்ற இந்திய மாணவர்கள் இளங்கலை படிக்கவே வெளிநாடுகளை நாடும் சூழல் வந்தது. இது இந்தியக் கல்வித்துறையில் நிகழ்ந்த மாபெரும் மறுமலர்ச்சி.

சுதந்திர இந்தியாவில் கொண்டு வரப்பட்ட அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மாற்றிய திட்டங்களில் முக்கியமானது, கல்விக்கடன் திட்டம். வெளிநாட்டுக் கல்வி எளிமையாகிவிட, இந்தக் கல்விக்கடனும் முக்கிய காரணம். ஒரு மாணவன் வெளிநாட்டில் போய்ப் படிக்க, 20 லட்சத்துக்கு மேல் வங்கிக்கடன் கிடைக்கிறது. எனவே வெளிநாட்டுக் கல்விக்கு பணம் ஒரு தடையே இல்லை. இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. பிறகு ஏன் வெளிநாட்டில் போய் படிக்க வேண்டும்?

நியாயம் தான். இந்தியாவில் புகழ்பெற்ற தரமான கல்வி நிறுவனங்கள் ஏராளம் உண்டு. ஆனால் இங்கு நிலவும் போட்டிகள், செலவுகள் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது வெளிநாட்டில் போய் படிப்பதில் பல பலன்கள் உண்டு. இங்கு பிரபலமான ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெறும் செலவில், உலக அளவில் டாப்-100 இடத்துக்குள் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு வந்து விட முடியும். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் உலக அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஒன்றிரண்டு தவிர வேறெதுவும் இடம்கேம்பஸ் நியூஸ்.

ஐ.ஐ.டி. ரூர்கியில் எம்.டெக்., எம்.ஆர்க்.,

ரூர்கியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் எம்.டெக்., எம்.ஆர்க் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்.டெக். படிப்புக்கு பொறியியல் துறையில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.ஆர்க். படிப்புக்கு பி.ஆர்க் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் ரூ.400ம், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் சிறப்புப் பிரிவினர் ரூ.200ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.GATE  நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலும், நேர்முகத்தேர்வு  மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்ரல் 9 கடைசி நாள். கூடுதல் தகவல்களுக்கு காண்க: www.iitr.ac.in

தொலைதூரக் கல்வியில் பொறியியல் கிடையாது

தொலைதூர கல்வி மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளை நடத்துவதற்கு யு.ஜி.சி. தடை விதித்துள்ளது. ‘‘தொலைதூரக் கவுன்சில்(டெக்) அமைப்பின் பணிகள் யு.ஜி.சி. கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே தொலைதூரக் கல்வி திட்டத்தில் வழங்கப்படும் படிப்புகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளைத் தவிர, தொலைதூரக் கல்வி திட்டத்தில் பிற தொழில்நுட்ப பாடங்கள் மற்றும் பட்டய படிப்புகளை நடத்தக்கூடாது’’ என யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.


குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு

2014ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் இதற்கான ஆளுமைத் தேர்வு நடத்த உள்ளது. சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் இரண்டு அலுவலக வேலை நாட்களில் இப்பயிற்சி மைய அலுவலகத்தில் வழங்கப்படும்.

முதன்மைத் தேர்வில் வெல்லும் தமிழ்நாட்டைச் சார்ந்த அனைவரும் இப்பயிற்சிக்கு சேர தகுதியுடையவர்கள். இப்பயிற்சி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மூன்று புகைப்படம், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் இப்பயிற்சி மையத்தில், மூத்த இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி அலுவலர்களையும், கல்லூரிகளின் பேராசிரியர்களையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ஆளுமைத் தேர்வுக்கு, புது டெல்லி செல்லும் மாணவ/மாணவியர்களுக்கு பயணப்படியாக ரூ. 2000 வழங்கப்படுகிறது. மேலும் பத்து நாட்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்ள ஏற்பாடுகளும் இப்பயிற்சி மையத்தால் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:
முதல்வர், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், 163/1, காஞ்சி வளாகம்,
 பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
சென்னை-28. தொலைபேசி எண். 044-24621475. பெறவில்லை.

அடுத்து இங்கிருக்கும் கல்விமுறை. உயர்கல்வியைப் பொறுத்தவரை யதார்த்தத்துக்கும் பாடத்திட்டத்துக்கும் தொலைதூர இடைவெளி இருக்கிறது. படிப்புக்கும் அதுசார்ந்த தொழிற்சாலைக்கும் தொடர்பு குறைவாக இருக்கிறது. செயலறிவை விட நூலறிவுக்கே நம் பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் இருக்கிறது. அதனால் வேலைவாய்ப்பில் வெகுவாக பின்தங்கியிருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியப் பொறியாளர்களையும், மருத்துவர்களையும் ‘வருக’ என வரவேற்ற பெரு நிறுவனங்கள், நாடுகள் எல்லாம் இன்று கதவுகளை மூடுகின்றன. காரணம், வேலைவாய்ப்புத்திறன் குறைவு. வெளிநாட்டு உயர்கல்வி படிப்பென்பது முற்றிலும் தொழில்திறன் சார்ந்த, களம் சார்ந்த படிப்புகளாக இருக்கிறது. பல கல்வி நிறுவனங்கள் வேலையை உறுதி செய்தே மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.

படித்துக்கொண்டே பகுதி நேரமாக வேலை செய்யவும், படிப்பு முடிந்தபிறகு குறிப்பிட்ட ஆண்டுகள் அங்கேயே தங்கி வேலை செய்யவும் பல நாடுகளில் வசதி இருக்கிறது. சில கல்வி நிறுவனங்கள் 2 வருடம் படிப்பு, அடுத்த 2 ஆண்டுகள் வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பு போன்ற திட்டங்களைக்கூட வைத்துள்ளன. பல பல்கலைக்கழகங்கள் கற்றல் திறன் அடிப்படையில் 100 சதவீத உதவித்தொகைகளையும் வழங்குகின்றன. எனவே இங்கு கிடைக்காத பல வசதிகள், இங்கு செய்யும் செலவுக்குள்ளாகவே வெளிநாடுகளில் கிடைக்கின்றன. ஆனால், கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்வதிலும், படிப்பைத் தேர்வு செய்வதிலும் மிகுந்த கவனம் தேவை.

+2 தேர்வு முடிந்து விட்டது. வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் இப்போதிருந்தே அடிப்படை வேலைகளைக் கவனிக்க வேண்டும். விசா நடைமுறைகள், முன்தயாரிப்பு வேலைகள் நிறைய இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம். அதற்குள் நீங்கள் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்...