வேலை ரெடி!வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

விவசாய ஆய்வு நிறுவனத்தில் இயக்குநர் பணி!

நிறுவனம் : புது டெல்லியில் உள்ள அக்ரிகல்ச்சுரல் சயின்டிஸ்ட் ரெக்ருட்மென்ட் போர்டு எனும் விவசாய ஆய்வு நிறுவனம்.
வேலை : டைரக்டர், அசிஸ்டென்ட் டைரக்டர் ஜெனரல் போன்ற சில பிரிவுகளில் வேலை
காலியிடங்கள் : மொத்தம் 40.
கல்வித் தகுதி : ஃபிஷரி, ஜுவாலஜி, மெரைன், அக்ரிகல்சர், அனிமல் சயின்ஸ், எகானமிக்ஸ், ப்ளான்ட் பிரீடிங் போன்ற இன்னும் சில படிப்புகளில் டாக்டரேட் படித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 60க்குள் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை : நேர்முகம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 23.3.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.asrb.org.inஅரசு ஏற்றுமதி நிறுவனத்தில் பல்வேறு பணிகள்!

நிறுவனம் : கேரளா மாநிலத்தில் உள்ள மெரைன் ப்ராடக்ட்ஸ் எக்ஸ்போர்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி எனும் கடற்சார் உணவுப் பொருள் நிறுவனம்.
வேலை : லேப் அனாலிஸ்ட், க்ளர்க், அசிஸ்டென்ட் உட்பட பல்வேறு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள் : மொத்தம் 71. இதில் ஜூனியர் லேப் அனாலிஸ்ட் 10, ஃபீல்டு ஆபீஸர் 9, ஜூனியர் க்ளர்க் 10, எலக்ட்ரிக்கல் ஆபரேட்டர் 1, மல்டி டாஸ்கிங் அசிஸ்டென்ட் 15, ஜூனியர் டெக்னிக்கல் ஆபீஸர் 8, டேட்டா ப்ராசஸிங் அசிஸ்டென்ட் 3, ஜூனியர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் 2, சீனியர் க்ளர்க் 8, ஜூனியர் ஸ்டெனோ 4 மற்றும் ஹிந்தி ஸ்டேனோ 1 ஆகிய இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. கெமிஸ்ட்ரி, அக்கவா கல்ச்சர், ஃபிஷரி, ஜுவாலஜி, ஓஷன் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவற்றில் டிகிரியோ அல்லது ஃபிஷரி, கம்ப்யூட்டர், ஹிந்தி போன்றவற்றில் முதுகலைப் படிப்போ அல்லது பத்தாவது படிப்போ படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப 28 அல்லது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை : எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : 31.3.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.mpeda.com

தாது ஆய்வு நிறுவனத்தில் மேனேஜர் வேலை

நிறுவனம் : நாக்பூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மினரல் எக்ஸ்ப்ளொரேஷன் கார்பரேஷன் லிமிடெட் எனும் தாதுக்கள் ஆய்வு நிறுவனத்தில் வேலை
வேலை : அசிஸ்டென்ட் மேனேஜர், ஃபோர்மேன், மெக்கானிக் கம் ஆபரேட்டர் உட்பட 16 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள் : மொத்தம் 185. இதில் அதிகபட்ச வேலையைத் தரும் பிரிவுகள்: ஃபோர்மேன் 35, மெக்கானிக் கம் ஆபரேட்டர் 35, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் 30, எச்.ஆர் அசிஸ்டென்ட் மற்றும் சர்வே டிராஃப்ட்ஸ்மென் அசிஸ்டென்ட் 10
கல்வித் தகுதி : வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப சி.ஏ, ஐ.சி.டபிள்.யூ, ஜியாலஜி முதுகலை, மெக்கானிக்கல் எஞ்சினியரிங், பெர்சனல் மேனேஜ்மென்ட், எஞ்சினியரிங் டிப்ளமா, டிகிரி, பத்தாவது படிப்பு, ஐ.டி.ஐ, பி.சி.ஏ, பி.சி.எஸ் மற்றும் பி.எஸ்சி படித்தவர்களுக்கு வாய்ப்புண்டு
வயது வரம்பு : அதிகபட்ச வயது 30 முதல் 50 வரை வேலைப்பிரிவுகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : 31.3.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.mecl.gov.in

பிளஸ் 2 படிப்புக்கு ஏர் இந்தியா வேலை!

நிறுவனம் : கேரளாவில், ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் லிமிடெட் எனும் விமான சேவை நிறுவனம்.
வேலை : ஏர்லைன் அட்டண்டன்ட்
காலியிடங்கள் : மொத்தம் 100 (இதில் எஸ்.சி - 15, எஸ்.டி - 8, ஓ.பி.சி - 27 மற்றும் பொதுப் பிரிவுக்கு 50 இடங்கள்)
கல்வித் தகுதி : பிளஸ் 2 படிப்பு
வயது வரம்பு : 18-24
தேர்வு முறை : குரூப் டைனமிக் டெஸ்ட், பர்சனாலிட்டி டெஸ்ட், மருத்துவ சோதனை மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : 21.3.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.airindiaexpress.in

ஆய்வு நிறுவனத்தில் அலுவலர் பணி!

நிறுவனம் : நியூடெல்லியில் உள்ள சென்ட்ரல் கவுன்சில் ஃபார் ரிசர்ச் இன் ஆயுர்வேதிக் சயின்ஸஸ் எனும் ஆயுர்வேத மருத்துவ ஆய்வு நிறுவனம்.
வேலை : ரிசர்ச் ஆபீஸர் மற்றும் ஸ்டாடிஸ்டிக்கல் ஆபீஸர்
காலியிடங்கள் : மொத்தம் 155. இதில் ரிசர்ச் ஆபீஸர் வேலையின் கீழ் ஆயுர்வேதம், ஹோமியோபதி, மெடிசின், கெமிஸ்ட்ரி எனப் பல்வேறு துறைகளில் உள்ள வேலைகளில் மட்டும் 154 காலியிடங்கள் உள்ளன. புள்ளியியல் வேலையில் 1 இடம் காலியாக உள்ளது
கல்வித் தகுதி : ரிசர்ச் ஆபீஸர் வேலையின் கீழ் வரும் பல்வேறு வேலைப் பிரிவு களுக்கு ஏற்ப முதுகலைப் படிப்பு  படித்திருக்க வேண்டும். புள்ளியியல் துறைக்கும் முதுகலைப் படிப்பு அவசியம்.
வயது வரம்பு : 40 வயதுக்குள்
தேர்வு முறை : எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : 25.3.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு : www.ccras.nic.in

புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் வேலை

நிறுவனம் : மத்திய அரசுக்குச் சொந்தமான சென்ட்ரல் டொபேக்கோ ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஆந்திரா
வேலை : டெக்னீஷியன் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள்
காலியிடங்கள் : மொத்தம் 34. இதில் முதல் வேலையில் 16, இரண்டாம் வேலையில் 18 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித் தகுதி : முதல் வேலைக்கு 10வது படிப்பும் இரண்டாம் வேலைக்கு விவசாயம் மற்றும் அது தொடர்பான படிப்புகளில் டிகிரியும் தேவை.
வயது வரம்பு : 18-30
தேர்வு முறை : எழுத்து
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : 19.3.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு : www.ctri.org.in

தொகுப்பு : டி.ரஞ்சித்