அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

Hot Cash... Hard Cash...

Laptop Bag-ஐ தோளில் மாட்டிக்கொண்டு வங்கிக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் ரவி. அவனிடம் ”Excuse me Ravi. Can you do me a favour? எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” என்றார் ரகு. “என்ன சார்... இப்படிக் கேட்கறீங்க? என்ன செய்யணும் சொல்லுங்க சார்...?” “ஒண்ணுமில்ல ரவி. என் பையனுக்கு ஒரு ‘ஜியாமெட்ரி பாக்ஸ்’ (Geometry Box) வாங்கணும். பேங்க் போயிட்டு வரும்போது வாங்கிட்டு வரமுடியுமா?” தயக்கத்துடன் கேட்டார் ரகு.



“நிச்சயமா சார். ஆனா… ஒரு சந்தேகம்… ‘ஜியாமெண்ட்ரி பாக்ஸை’,  ‘ஜியாமெட்ரி பாக்ஸ்”ன்னு சொல்றீங்க?” - என்றான் ரவி. சிரித்த ரகு, “ரவி... அது “Geometry Box” தான் “Geomentry”-ன்னு ஒரு வார்த்தை ஆங்கிலத்திலேயே கிடையாது...” என்ற ரகுவை வினோதமாக பார்த்தபடி கிளம்பிய ரவி, அடுத்த அரை மணி நேரத்தில் அலுவலகம் திரும்பினான். ரவி கொடுத்த ‘Geometry Box’-ஐ வாங்கியபடியே “நன்றி ரவி... நான் இதுக்கு எவ்வளவு பணம் தரணும் ?” என்றார் ரகு.

“அதிகமில்லை சார். பத்தாயிரம் ரூபா தான். செக் வேண்டாம். ஹாட் கேஷா (Hot Cash) கொடுங்க..” - சிரித்தான் ரவி. அவனது கிண்டலை புரிந்து கொண்ட ரகு, தனது பர்ஸை கையில் எடுத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். “என்ன சார், பர்சை கையில வச்சுக்கிட்டு அப்படி தேடறீங்க?” புரியாமல் கேட்டான் ரவி.

“இல்ல ரவி. நீதானே ‘ஹாட் கேஷ்’ வேணும்னு கேட்ேட… பக்கத்துல மைக்ரோவேவ் அவன்  இருந்தா பணத்தை அதுல வச்சு கொஞ்சம் சூடா கொடுக்கலாமேன்னு பார்த்தேன்” என்று குறும்பாகப் பார்த்தவரை குழப்பத்துடன் பார்த்தான் ரவி. “நீங்க அடிக்கிற கிண்டலைப் பார்த்தா, ரொக்கப்பணத்தை ஹாட்கேஷ் (Hot Cash)ன்னு சொல்லக்கூடாது போலிருக்கே...”
   
”ஆமா ரவி! அது ‘Hard Cash’. ‘Hot Cash’ இல்ல. Hard Cash -ன்னா ரொக்கப்பணம். ‘Soft Cash’-ன்னா ‘Cheque’, ‘Draft’, ‘Neft’ மாதிரி... புரியுதா?” என்ற ரகுவை சற்று வினோதமாக பார்த்தான் ரவி. “அப்படின்னா ‘hard drinks and soft drinks…’ அதுக்கும் இதேமாதிரிதான் பொருளா சார்?” நிச்சயமா ரவி. ‘hard drinks’-ன்னா ‘strongly alcoholic’-ன்னு பொருள். Soft drinks-ன்னு சொன்னா சாதாரண பானம்... புரியுதா...” “நல்லாப் புரியுது சார்... வாங்க சார்... போய் ஆளுக்கொரு Soft drinks சாப்பிட்டு வருவோம்...”                                      

- ப.சுந்தர்ராஜ்