யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பு!



அட்மிஷன்

சென்னையிலுள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி (Government Yoga and Naturopathy Medical College) செயல்பட்டு வருகிறது. இதில் இருக்கும் 15 யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திலான முதுநிலைப் பட்டப்படிப்பு (M.D - Yoga and Naturopathy) இடங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

கல்வித்தகுதி: இப்படிப்புச் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்குத் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு (BNYS) அல்லது அதற்கு இணையான வேறு பல்கலைக்கழகம் வழங்கும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் (N.D (OSM)) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் சென்னையிலுள்ள இந்திய மருத்துவக் கழகத்தில் தங்கள் பெயரை மருத்துவராகப் பதிவு செய்திருக்க வேண்டும். பிற பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தகுதிச் சான்றிதழினை (Eligibility Certificate) பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் குறிப்பேடு (Prospectus) போன்றவற்றை http://www.tnhealth.org/ எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.3000-க்கு ”Director of Indian Medicine and Homeopathy, Chennai  600106” எனும் பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து வங்கி வரைவோலையினைப்  பெற்று இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்தினைத் தேவையான சான்றிதழ்களின் நகலுடன் ”The Secretary, Selection Committee, Directorate of Indian Medicine and Homeopathy, Aringnar Anna Government Hospital of Indian Medicine Campus, Arumbakkam, Chennai  600106” எனும் முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டியக் கடைசி நாள்: 28.9.2017.

நுழைவுத்தேர்வு: விண்ணப்பித்த அனைவருக்கும் சென்னையில் 21.10.2017 அன்று நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இந்நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, பின்னர் ஒரு நாளில் கலந்தாய்வு நடத்தப்பெற்று, தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

- தேனி மு.சுப்பிரமணி