மத்திய ரயில்வேயில் அப்ரண்டீஸ் பணி! 2,196 பேருக்கு வாய்ப்பு



வாய்ப்பு

இந்தியாவின் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ரயில்வேயும் ஒன்று. ரயில்வே துறை பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இவற்றில் மத்திய ரயில்வே மண்டலமும் ஒன்று.

தரைவழிப் போக்குவரத்தில் கணிசமான பங்களிப்பை ஆற்றிவரும் ரயில்வே துறையின் மத்திய ரயில்வேயின் மும்பை, பூஷ்வால், புனே, நாக்பூர், சோலாபூர் ஆகிய மையங்களில் மொத்தம் 2,196 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விவரம்: மத்திய ரயில்வேயின் மும்பை கிளஸ்டரில் 1,503 இடங்கள் உள்ளன. இவற்றில் கேரேஜ் அண்ட் வேகன் வாடி பண்டர் பிரிவில் 252ம், கல்யாண் டீசல் ஷெட்டில் 50ம், குர்லா டீசல் ஷெட்டில் 56ம், கல்யாணில் சீனியர் டீ - டி.ஆர்.எஸ்.-சில் 179ம், இதே பிரிவில் குர்லாவில் 192ம், பாரெல் ஒர்க்‌ஷாப்பில் 274ம், மாதுங்கா ஒர்க்‌ஷாப்பில் 446ம், எஸ் அண்ட் டி ஒர்க் ஷாப்பில் 54ம் உள்ளன.
 
* பூஷ்வால் கிளஸ்டரில் மொத்தம் 341 இடங்கள் உள்ளன. இவற்றில் கேரேஜ் அண்ட் வேகன் டிபார்ட்மென்ட்டில் 81ம், எலக்ட்ரிக் லோகோ ஷெட்டில் 68ம், எலக்ட்ரிக் லோகோமோடிவ் ஒர்க் ஷாப்பில் 96ம், மன்மாட் ஒர்க் ஷாப்பில் 48ம், டி.எம். அண்ட் டபிள்யூ., நாசிக் ரோடில் 48ம் உள்ளன.

* புனே கிளஸ்டரில் 151 இடங்கள் முறையே 30 கேரேஜ் அண்ட் வேகனிலும், 121 டீசல் லோகோ ஷெட்டிலும் உள்ளன.

* நாக்பூர் கிளஸ்டரில் உள்ள 107ல் எலக்ட்ரிக் லோகோ ஷெட்டில் 48ம், கேரேஜ் அண்ட் வேகனில் 59ம் உள்ளன.

* சோலாபூரில் உள்ள 94 இடங்களில் கேரேஜ் அண்ட் வேகனில் 73ம், குர்துவாடி ஒர்க் ஷாப்பில் 21ம் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு பின் என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற என்.டி.சி., சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.11. 2017 தேதியின்  அடிப்படையில் 14 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஐ.டி.ஐ., மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2017
மேலும் விவரங்களுக்கு : www.rrccr.com/Modules/home/home.aspx என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.