+1 ஆங்கிலம் IIம் தாள்! முழு மதிப்பெண் பெறுவது எப்படி?



+1 பொதுத் தேர்வு டிப்ஸ்

பள்ளிக்கல்வி

அளவில் இதுவரை 10ம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும் மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டுவந்தது. ஆனால் 2017-2018 கல்வி ஆண்டு முதல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனைக் கருத்தில்கொண்டு +1 மாணவர்களுக்கும் ஆலோசனைகள் அவசியமாகி விட்டன.

இதனை கருத்தில்கொண்டு கடந்த இதழில் +1 ஆங்கிலம் முதல் தாள் தேர்வுக்கான டிப்ஸ் வழங்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாகத் “திட்டமிட்டு படித்து கவனமாக எழுதினால் ஆங்கிலம் 2ம் தாளில் முழு மதிப்பெண்ணைப் பெறலாம்” என்று சொல்லும் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஏ.இளங்கோவன் தரும் ஆலோசனைகளை இனி பார்ப்போம்.

மொத்தம் 90 மதிப்பெண்களைக் கொண்ட 11ஆம் வகுப்பு ஆங்கிலம் IIம் தாள் 47 வினாக்களை உள்ளடக் கியது. இவற்றில் 1 மதிப்பெண் வினாக்கள் 1 முதல் 20 வரை, 2 மதிப்பெண் வினாக்கள் 21 முதல் 30 வரை, மூன்று மதிப்பெண் வினாக்கள் 31 முதல் 40 வரை, 5 மதிப்பெண் வினாக்கள் 41 முதல் 47 வரை என இடம்பெற்றிருக்கும்.கேள்வி எண் 1 முதல் 20 வரையிலான 1 மதிப்பெண் வினாக்களில், 1 முதல் 10 வரையிலான வினாக்கள் choose the convect answer கோடிட்ட இடங்களை நிரப்புதல், 11 முதல் 15 வரை 15 வினாக்கள் (who said to whom) யார் யாரிடம் உரைத்தது என்ற வகையில் கேட்கப்படும்.

இந்த முதல் பகுதியில் 1இல் இருந்து 15 வரையிலான வினாக்கள் (simple mentary reader) துணைப் பாடக் கதைகளில் இருந்து கேட்கப்படும். மொத்தமுள்ள கதைகளையும் எழுதுவதாக உள்வாங்கிக் கொண்டால் இக்கேள்விகளுக்கு எளிமையாக விடையளித்துவிடலாம்.

(கதை, கதைமாந்தர், அவர்களின் உரையாடல் உள்ளிட்டவைகள்) 1 மதிப்பெண் வினாக்களில் அடுத்து 15 முதல் 20 வரையுள்ள 5 ஒரு மதிப்பெண் வினாக்கள் completions proverb இதுவும் கொள்குறி வினாவாகக் கேட்கப்படும். பழமொழியை நிறைவு செய்யக் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் சரியான ஒன்று தேர்வு செய்து எழுத வேண்டும்.(Ex. fortune favours the Ans. virtuous) அடிக்கடி நாம் உபயோகிக்கக்கூடிய ஆங்கில பழமொழிகள் நன்கு படித்தாலே போதும் இவ்
வினாக்களுக்கு எளிதாக விடை அளித்துவிடலாம்.

அடுத்து 21 முதல் 30 வரையிலான இரண்டு மதிப்பெண் வினாக்களில் கொடுக்கப்பட்டுள்ள 10 வினாக்களில் ஏதேனும் 7ஐ தேர்வுசெய்து எழுத வேண்டும். மேலும் பத்து வினாக்களில் ஒன்று Compulsary Question (Q.25) ஆகும். மொழி வடிவங்கள், report writers, reading skills, small meanings for terms like, conession coherence, codings, decodings, editings, draftings classification of books. system of classification of books, library, based general questions like different section in a modern library, online catalogue, spellings shategces, selections a book in a library. little indence, author index போன்றவை பற்றிய பொதுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வினாக்கள் கேட்கப்படும். பாடப் புத்தகத்தில் 15, 20, 29, 30, 55, 104, 105 ஆகிய பக்கங்களில் உள்ள பொதுத் தகவல்களை (General Learnings) படித்தாலே போதும். இவ்வினாக்களுக்கு விடையளித்துவிடலாம்.

அடுத்து 31 முதல் 40 வரையிலான 10 மூன்று மதிப்பெண் வினாக்கள். இவற்றுள் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். அதில் ஒன்று Compulsary Question (Q No.38). இப்பகுதியில் 31) road map 32) prescribe the process. 33) writing slogans. 34) writing sentecnce about the given data. 35) answer the question about the bie chart. 36) completions the given diolouge. 37) composings short poems. 38) expandings headlines. 39. Jumbled sentences. 40. Explaining proverbs உள்ளிட்ட வினாக்கள் கேட்கப்படும்.

31வது கேள்வி: Road map. அதாவது வரைபடம் பார்த்து வழி சொல்ல வேண்டும். வினாவில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை 3 அல்லது 4 வாக்கியங்களில் குறிப்பிட வேண்டும். அதாவது, go straight / walk past / turn right / turn left / you will find the place போன்ற  வாக்கியங்களைப் பயன்படுத்தி விடை எழுதலாம்.

32வது கேள்வி: Describe the process : இவ்வினாவில் ஒரு செயல்பாடு குறிப்பிடப்பட்டிருக்கும். அச்செயல்பாட்டைச் சுருக்கமாக விவரிக்க வேண்டும். (Example: how will you remove grease stain on a dress (Describe the process briefly). இவ்வினாவிற்கு விடை எழுதுவதற்கு நீங்கள் தயார் செய்து சில செயல்பாடுகளுக்கான விவரங்களைப் படித்துக்கொள்ளுங்கள் (ex. how will you prepare coffee/tea/etc.) அப்படித் தயார் செய்துகொண்டால் இவ்வினாவிற்கு விடையளிப்பது எளிதானதாக இருக்கும்.

33வது கேள்வி: writing slogans for two products or things: கொடுக்கப்பட்டுள்ள பொருளை highlight செய்யும் பொருட்டு (அ) விளம்பரம் செய்யும் பொருட்டு slogan எழுத வேண்டும்.34வது கேள்வி : write 3 sentences about the given deta : கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை (Table) அல்லது வரைபடம் (Pic-chart) தெரிவிக்கும் தகவல்களை (குறைந்தது 3) வாக்கியங்களாக எழுத வேண்டும்.

35வது கேள்வி: study the pic-chart and answer the question that follow கொடுக்கப்பட்ட படத்தை நன்கு கவனித்த பின் கேட்கப் பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.இவ்வினாவிற்கு விடையளிக்கும்முன் கீழ்க்கண்ட குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.I) கொடுக்கப்பட்டுள்ள pic-chartல் உள்ள தலைப்புகள் மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை உன்னிப்பாகக் கவனிக்கவும். அதன்பின் வினாக்களை நன்கு படித்து
புரிந்துகொள்ள வேண்டும்.

பின் வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிரிவிற்கு எத்தனைச் சதவிதம் (%)கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கூர்ந்து கவனித்து விடை எழுத வேண்டும். Greater than / less than highest / lowyest, less / more, minimum, maximum, same / different, first / lost போன்ற குறிகள் புள்ளிவிவரங்களைக் குறிப்பிடப் பெரிதும் உதவும்.

36வது கேள்வி : complete the dialougeவிடுபட்ட dialougeஐ முழுமையடையக்கூடிய வாக்கியத்தை கொண்டு நிரப்ப வேண்டும். dialougeஐ பொருத்தவரையில் கேள்வி - பதில் typeல்தான் இருக்கும். கேள்விக்குப் பிறகு ______ கொடுத்திருந்தால் பதிலும் பதிலுக்குப் பிறகு ______ கொடுத்திருந்தால் அதற்குரிய கேள்வியும் எழுத வேண்டும்.

37 வது கேள்வி: (composing short poems of 4 lines) கொடுக்கப்பட்டுள்ள Topicஐ கொண்டு நான்கு வரிகளில் கவிதை எழுத வேண்டும். சிறு கவிதை (short poems) எழுது என்பது கேள்வி. இலக்கணம், வாக்கிய அமைப்பு மற்றும் நிறுத்தற்குறி (grammar, sentence, proverbs) போன்றவைகள் அவசிய மில்லை. ஏனெனில் கவிதைக்குத் தேவை ஆழமான கற்பனை.

38வது கேள்வி: Example the head lines கொடுக்கப்பட்டுள்ள தலைப்புச் செய்திகளை விரித்து (Example) எழுதவும். இதற்கான விடையை இரண்டு வாக்கியங்களில் எழுதவும். தலைப்புச் செய்திகளை (Example) விரித்து எழுதும்போது இடம் மற்றும் தேதியைக் குறிப்பிடவும். (Example) : (Chennai September 27) என்ன நடந்தது எங்கே? எப்போது? ஏன்? எப்படி? என்ற கேள்வி களைக் கேட்கும்போது செய்தியை விரித்து எழுதுவதற்கான விடை நமக்கு எளிதாகக் கிடைக்கும்.

39வது கேள்வி: Reshuttle the jwwibled posts and forme meaning for sentences. இடம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ள சொற்பொருட்களைச் சரிசெய்து அர்த்தமுள்ள வாக்கியங்களாக மாற்ற வேண்டும்.
40வது கேள்வி: explain the meanings of the proverb in 30 words : கொடுக்கப்பட்டுள்ளபடி மொழிகளை விளக்க 30 வார்த்தைகளில் ஒரு பத்தி அளவில் எழுத வேண்டும். இறுதியாக 5 மதிப்பெண் வினாக்கள் பற்றிப் பார்ப்போம். இதில் 41 முதல் 42 வரை
 41வது கேள்வி: (comprehension or jumbled sentenses (supplimentary reader). இதில் இரண்டு வினாக்கள் கேட்கப்படும். ஏதேனும் ஒன்றிற்கு விடை எழுத வேண்டும். முதல் கேள்வியில் துணைப்பாடத்திலிருந்து ஒரு பத்தி கொடுத்து 5 வினாக்களைக் கொடுத்திருப்பார்கள். அவற்றிற்குச் சரியான விடைகளை எழுத வேண்டும். இரண்டாவது வினாவில் 5 வாக்கியங்கள் இடம் மாற்றிக் கொடுத்திருப்பார்கள். அவற்றுக்குச் சரியான விடைகள் எழுத வேண்டும். அதாவது story sequence தொடர்ச்சியாக உள்ளவாறு எழுத வேண்டும்.

42வது கேள்வி: paragraph question. கொடுக்கப்பட்டுள்ள paragraph question-ல் ஒன்றுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும். இவ்விரண்டு paragraph கேள்விகளும் supplimentary readerல் உள்ள கதைப் பகுதியில் இருந்து கேட்கப்படும். அனைத்துக் கதைகளையும் தெரிந்துகொண்டாலே போதும். இவ்வினாவிற்கு எளிதில் விடை எழுதிவிடலாம்.

43வது கேள்வி: poem paraphrasingஇப்பகுதியில் இரண்டு பத்திகளில் poem கொடுக்கப்பட்டிருக்கும். முதல் பாடலுக்கு அதன் பொருளின் பா நயம், கற்பனை போன்றவற்றை ஒரு பத்தியாக எழுத வேண்டும். இரண்டாவது பாடலுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 5 வினாக்களுக்கு விடை எழுத வேண்டும்.

கவிதை விதிகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதன்பின் விடை எழுதவும்.
44வது கேள்வி: letter writing மாணவர்களின் கடிதம் எழுதும் ஆற்றலைத் தூண்டும் வகையில் இவ்வினா வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு கடிதம் எழுத வேண்டும். (Example Asking permission from your father to join swimming class, requestations headmaster to issue transfer certificate, letter to friend about your things to his house etc.)

45வது கேள்வி: Note makings or summary writings. கொடுக்கப்பட்டுள்ள வினாவை (paragraph) நன்கு படித்து பின் அதன் குறிப்புகளை எழுத வேண்டும். அல்லது அதனை மூன்றில் ஒரு பகுதியாகச் சுருக்கி எழுத வேண்டும்.

Note - making வினாவிற்கு விடை  எழுதும்போது பின்பற்ற வேண்டியவை.

1) கொடுக்கப்பட்டுள்ள paragraphஐ நன்கு படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.
2) பொருத்தமான தலைப்பு (suitable title) எழுதவும்.
3) Auxillary verbs, articles, linkers prepositions போன்றவற்றைத் தவிர்த்து வாக்கியத்தின் முக்கிய கருத்தை மட்டும் எழுதவும். இடையிடையே hypen (-) போட்டு எழுதவும்.
4) அனைத்து முற்றுப்புள்ளியை நீக்கி எழுதவும். (Remove all full stops)
5) விடை வாக்கியமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
Summary writing எழுதும்போது பின் பற்றப்பட வேண்டியவை

1) கொடுக்கப்பட்டுள்ள பத்தியை நன்கு படித்து புரிந்துகொள்ள வேண்டும். பின் rough copy , fair copy மற்றும் (suitable title) பொருத்தமான தலைப்பு இட்டு எழுத வேண்டும்.
46வது கேள்வி : General paragraphகொடுக்கப்பட்டுள்ள இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குக் கருத்துகளை ஒரு பத்தி அளவிற்கு விடை எழுத வேண்டும்.

Thrilling experience, man and machine, a morning walk independence day, the dowry system போன்ற பொதுவான தலைப்புகளில் விடைகளை தயார் செய்து படித்தால் விடை எழுதுவதற்கு எளிமையாக இருக்கும்.

47வது கேள்வி: Frame a dialogue கொடுக்கப்பட்ட இரண்டு சூழ்நிலைக்கேற்ற தலைப்பு களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உரையாடல் (dialogue) அமைக்க வேண்டும்.

1. உரையாடல் யார் / யாருக்கு என்பதை அறிந்து dialogue frame செய்யவும்.
2. Good morning / Good morning, may I come in, thank you, welcome போன்ற சொல்லில் அடங்கா உரையாடலை தொடங்குவதற்கும், முடிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றித் தேர்வை எதிர்கொண்டால் +1 ஆங்கிலம் IIம் தாளில் முழு மதிப்பெண்களைப் பதற்றமின்றிப் பெறலாம்.