முதுநிலைத் தொழிற்படிப்புகளில் சேர TANCET 2018 நுழைவுத் தேர்வு!



நுழைவுத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

தமிழ்நாட்டில் முதுநிலை வணிக மேலாண்மை (Master of Business Administration-M.B.A), முதுநிலைக் கணினி பயன்பாட்டியல் (Master of Computer Applications-M.C.A), முதுநிலைப் பொறியியல் (Master of Engineering - M.E.), முதுநிலைத் தொழில்நுட்பம் (Master of Technology - M.Tech.), முதுநிலைக் கட்டடக்கலை (Master of Architecture - M.Arch.) மற்றும் முதுநிலை அமைப்பியல் (Master of Planning -  M.Plan.) போன்ற முதுநிலைத் தொழில் படிப்புகளின் 2018-19 கல்வியாண்டு மாணவச் சேர்க்கைக்கான ‘‘தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு ’’(Tamilnadu Common Entrance Test - TANCET 2018) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி: எம்.பி.ஏ. படிப்பிற்கு 10+2+3 என்ற முறையிலோ அல்லது 10+3 (பட்டயம்) + 3 என்ற முறையிலோ அல்லது பி.இ/பி.டெக்/பி.ஆர்க்/பி.பார்ம் அல்லது 10+2+AMIE அல்லது 10+3 (பட்டயம்) + AMIE என ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்.சி.ஏ. படிப்பிற்கு  10+2+3/4 என்ற முறையிலோ அல்லது 10+3 (பட்டயம்) + 3 என்ற முறையிலோ அல்லது 10+2+AMIE அல்லது 10+3 (பட்டயம்) + AMIE  என ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பிலும், எம்.சி.ஏ. (நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை) படிப்பிற்கு பி.சி.ஏ., பி.எஸ்சி., (கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம்) பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்.இ./எம்.டெக்./எம்.பிளான் படிப்பு

களுக்கு பி.இ./பி.டெக்./பி.ஆர்க். அல்லது பி.பார்ம் அல்லது குறிப்பிட்ட படிப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் அல்லது 10+2+AMIE அல்லது 10+3 (பட்டயம்) + AMIE படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்காணும் கல்வித் தகுதிக்கான படிப்புகளில் 50 சதவீதத்திற்கு குறையாமலும், இட ஒதுக்கீட்டு மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருத்தல் அவசியம். மேலும் தற்போது கடைசி செமஸ்டர் எழுதிக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தேர்வு: மேற்காணும் படிப்புகளில் எம்.பி.ஏ. படிப்பிற்குத் தனியாகவும் மற்றும் எம்.சி.ஏ. மற்றும் எம்.இ./.எம்.டெக்./எம்.ஆர்க்./எம்.பிளான் என ஒவ்வொரு படிப்புகளுக்கும்  தனித் தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படவிருக்கின்றன.

இந்த நுழைவுத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இந்நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://www.annauniv.edu/tancet 2018 என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் பொதுப் பிரிவினர் ரூ.500ம் மற்றும் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் ரூ.250ம் விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.4. 2018.

தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வுக்கு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் என 15 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வுக்கான  கால்ஷீட்டை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்து தேர்வு நாளுக்கு சில நாட்களுக்கு முன்பாகத் தரவிறக்கம் செயதுகொள்ளமுடியும்.

தேர்வு நாட்கள்: எம்.சி.ஏ. படிப்பிற்கான நுழைவுத் தேர்வு 19.5.18 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், எம்.பி.ஏ. படிப்பிற்கான நுழைவுத் தேர்வு 19.5.18 அன்று மதியம் 2.30 முதல் 4.30 மணிவரையிலும், எம்.இ./எம்.டெக்./எம்.ஆர்க்./எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 20.5.18 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் நடைபெறும்.

நுழைவுத் தேர்வுக்குப் பின்னர் மார்க் ஷீட்டுகள் மேற்காணும் இணையதளத்தில் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் மதிப்பெண் தாளை தரவிறக்கம் செய்து, அச்சிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.நகல் பெற்றிட: இந்த நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, மதிப்பெண் தாள் போன்றவை மாணவர் சேர்க்கையின்போது, சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுடன் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என்பதால் அவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தவறவிட்டவர்கள் ‘‘The Secretary, TANCET, Anna university, Chennai- 600025” எனும் பெயரில் ரூ.100க்கான வங்கி வரைவோலை பெற்று தங்களின் விண்ணப்ப எண் / பதிவு எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி நகலை பெற்றுக்கொள்ள முடியும். இரண்டையும் தவற விட்டவர்கள் இரண்டுக்கும் தனித்தனியாக வங்கி வரைவோலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

மாணவர் சேர்கை: இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுடன் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் மேற்காணும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ./எம்.டெக்./எம்.ஆர்க்./எம்.பிளான். ஆகிய முதுநிலைத் தொழில் படிப்புகளுக்குச் சேர்க்கைக்கான நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பித்து சேர்க்கை உறுதி செய்ய முடியும்.

நுழைவுத் தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை அறிய மேற்காணும் இணைய தளத்தைப் பார்க்கலாம் அல்லது ‘‘The Secretary, Tamil Nadu Common Entrance Test (TANCET), Centre for Entrance Examinations, Anna University, chennai  600 025” எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது tancetenq@annauniv.edu என்னும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-2235 8314 எனும் அலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

-வெங்கட்