நீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி!



பயிற்சி

தொழில்முறை படிப்புகளுக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றில் ஒரு சில பயிற்சி மையங்கள்தான் சிறப்பாக செயல்படுவதோடு முறையான பயிற்சிகளை வழங்கி முன்னணியில் இருக்கின்றன. அந்தவகையில் சிறப்பாக செயல்பட்டுவரும் எக்சல் நீட் அகாடமியின் இயக்குநர் தேவதாஸ் தங்கள் பயிற்சி நிறுவனத்தின் தொடக்கம், செயல்பாடுகள் பற்றி கூறும் கருத்துகளைப் பார்ப்போம்…

‘‘தமிழ்நாடு தொழில்முறை படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக 1985ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது எக்சல் சம்மர் இன்ஸ்டிடியூட். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர், கடலூர், நெய்வேலி, திருநெல்வேலி என தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இயங்கி தொழில்முறை படிப்புகளுக்கான சிறப்பான பயிற்சிகளை வழங்கிவருகிறது.

துறைசார்ந்த வல்லுநர்களால் கோர்ஸை டிசைன் செய்தல், அனைத்து பாடங்களையும் உள்ளடக்கும் விரிவான ஸ்டடி மெட்டீரியல்கள், அர்பணிப்புடன் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் என சரியான திட்டமிடலுடன் தொடர்ந்து கல்விச் சேவையை செய்துவருகிறது இந்நிறுவனம்.’’ என்று கூறும் தேவதாஸ் தேசிய பயிற்சிகளுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டதையும் சிறப்பம்சங்களையும் பட்டியலிட்டார்.

‘‘மாநில நுழைவுத்தேர்வுகளுக்கான சிறப்பான பயிற்சி மையமாக விளங்கிய எக்சல் சம்மர் இன்ஸ்டிடியூட்டானது தேசிய தேர்வு
களுக்கு பயிற்சி வழங்கும் பொருட்டு எக்சல் நீட் அகாடமி எனும் நீட் தேர்வுகளுக்கென பிரத்யேகமாக இயங்கும் பயிற்சி மையம் ஒன்றை தற்போது நிறுவியுள்ளது. திறன் மிக்க மாணவர்களுக்கு தரமான பயிற்சி அளித்து உயர்கல்வித் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது எக்சல் சம்மர் இன்ஸ்டிடியூட். இந்நிறுவனம் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் பல்துறை அனுபவம் வாய்ந்த வல்லுநர்களால் நீட் தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  

நிறுவனத்தின் சிறப்புகள்

*அனைத்து மாணவர்களும் சிரமம் ஏதுமின்றி தேர்வை எளிதாக அணுகும் வகையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி திட்டமிடப்படுதல்.

*துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கிய விரிவான ஸ்டடி மெட்டீரியல் மூலம் பயிற்சி அளித்தும் மறுபடி மறுபடி
ரிவிஷன் கொடுத்தும் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளச் செய்தல்.

*தேசிய நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராகும் பொருட்டு சுமார் 4050 மல்டிபில் சாய்ஸ் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மாணவர்களின் திறன்களை மேம்பாடடையச் செய்தல்.

இப்படி பல பயிற்சித் திட்டங்களை வகுத்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முறையாக பயிற்சி அளிக்கிறோம்” என்று எக்சல் பயிற்சி மையத்தின் செயல்பாடுகளை விவரித்தார்.

 - வெங்கட்