அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

admitted in Vs admitted to

பணியில் ஆழ்ந்திருந்த ரகுவை நோக்கி வந்த ரவி ‘‘சார், ‘He is admitted in the hospital’, ‘He is admitted to the hospital‘ இந்த இரண்டு வாக்கியங்களில் எதுங்க சார் சரி?” என்றவாறு வந்தமர்ந்தான். தலையை நிமிர்ந்து பார்த்த ரகு, ‘He is admitted to the hospital‘ என்பதுதான் சரி” என்றார்.

சற்றே குழப்பத்துடன் பார்த்தான் ரவி. ”என்ன ரவி? நான் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?” என்றார் ரகு. ”ஆமாம் சார்”என்ற ரவியிடம், “அதாவது ரவி, அட்மிட் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. 1) உண்மையை ஒப்புக்கொள்ளுதல், (விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ) (accepting) He was not entirely honest with me, he admitted. 2) தவறை ஒப்புக்கொள்ளுதல்,(confessing) Sona admitted (that) she had made a mistake.(or) Sona admitted making a mistake.

3. அனுமதித்தல் (let enter into) The old lady was admitted to a hospital. அதிலும் குறிப்பாக ஹாஸ்பிடல் என்று வந்தாலே நிச்சயமா to தான் வரவேண்டும். சில சமயங்களில் into வரலாம்” என்றார் ரகு. “Okey sir! your explanation admitted” சிரித்துக்கொண்டே சொன்னான் ரவி.
“I pray God என்பது சரியா? I pray to God என்பது சரியா சார்?” என்ற கேள்வி வந்தது ப்ரவீணாவிடமிருந்து. “ ‘I pray to God என்பது சரி ப்ரவீணா.

‘சாமி கும்பிடுதல்‘ என்று நம் தாய்மொழியில் சொல்வதற்கு சரியான ஆங்கில பிரயோகம் I pray to God என்பதுதான்.” என்றார் ரகு. இந்த பதிலில் ப்ரவீணாவிற்கு திருப்தி இல்லை. உடனே ரகு, “சரி. ப்ரவீணா! உதாரணத்திற்கு give என்றால்  ‘கொடு’ என்று அர்த்தம். இல்லையா? உன் தியரியின்படி பார்த்தால் give up  என்பதற்கு ‘மேலே கொடு’ give in என்பதற்கு ‘உள்ளே கொடு’ என்றுதானே அர்த்தம். இப்படியெல்லாம் தப்பு தப்பா வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் பண்ணக்கூடாது  ப்ரவீணா.” என்றவர் காபி கோப்பையை கையில் எடுத்தார்.

“அப்படின்னா give up and give in என்பதற்கு என்னதான் அர்த்தம் சார்?” என்றாள். give up என்பதற்கு ‘விட்டுவிடு’ என்றும் give in என்பதற்கு ‘பணிந்து விடு’ என்றும் அர்த்தம். give up  means ‘to stop doing’ (Almost for 33 years I have been smoking. I was trying to give up. For the past three years , I have been applying innumerable methods to quit but of no use. But I don’t like to give up my efforts. Just last year I was able to give up smoking.) give in என்றால் ‘to admit that you have been defeated’ என்று பொருள். The government declared that it would not give in to the terrorists’ threat. இப்போது புரிந்திருக்குமே என்று சொல்லிவிட்டு கணினியில் கண் பதித்தார் ரகு.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்