அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?



மொழி

ஸ்போக்கன் இங்கிலிஷ் பேச்சு 2 (இலக்கணம் தேவையா?)

“நாம் பேசுவதற்காக இலக்கணத்தைப் பற்றி என்றுமே கற்றுக்கொண்டதில்லை அல்லவா…? ஒருவேளை ‘இல்லைங்க சார்…. நான் இலக்கணத்தை மொழிப்பற்றுடன் பேசுவதற்காகத்தான் கற்றுக்கொண்டேன்’ என்று நீங்கள் சொன்னால், இப்போ ‘தொழிலாகு பெயர்’ அல்லது ‘வினையாலணையும் பெயர்’ அல்லது ‘இடக்கரடக்கல்’ என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். பதில் சொல்ல முடியுமா உங்களால்?” என்று கேட்ட ரகுவை சற்றே பயத்துடன் பார்க்க ஆரம்பித்தனர் மூவரும்.

“அப்ப… இலக்கணமே தேவையில்லை அப்டீங்கிறீங்களா சார்?” என்ற ப்ரவீணாவை பார்த்த ரகு,”Here comes your absurdity. I never said that Grammar is not essential . I said, Grammar is not at all necessary to speak. That’s all. பேசுவதற்கு இலக்கணம் தேவையில்லை என்றுதான் சொன்னேனே தவிர, மொழிக்கு இலக்கணம் அவசியமில்லை என்று நான் சொல்லவில்லை. உதாரணமாக, ஏதாவது வரலாற்றுச்சிறப்பு மிக்க இடத்துக்கு நாம் சென்றால் நமக்கு அந்த புராதான இடங்களின் சிறப்பை விளக்க வரும் கைட் என்று சொல்கிறோமே, அந்த கைட் குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறு மொழிகள் பேசுவார்.  

எந்த பல்கலைக்கழகத்தில் அவர் இலக்கணம் கற்றுக்கொண்டார். இவ்வளவு ஏன்? சென்ட்ரல் ஸ்டேஷன்ல இருக்கிற போர்ட்டர்ஸ் இங்கிலிஷ் பேசறாங்களா? இல்லயா?”“நான் ஆக்ரா சென்றிருந்த போது எனக்கு சுற்றிக் காட்ட வந்திருந்த கைடுக்கு அதிகபட்சம் 16 வயதுதான் இருக்கும். ஆக்ராவை சேர்ந்தவன். நான் அவனிடம், “I just not only wonder at the beauty of the Taj mahal but also your English bro. Which school you studied in?” I asked him. He said, “I didn’t go to any school sir. My teachers are only the tourists like you sir. Initially I struggled but did not be afraid of speaking sir.

All I started translating from Hindi to English. Later, when I got accustomed to speaking, I stopped  translating and straight away started speaking English fluently sir. All the credit goes to the visitors like you sir.” அதனாலதான் சொல்றேன், பேசுவதற்கு இலக்கணம் தேவையில்லை. ஏனெனில் Language is a vehicle of communication to express our thoughts. That’s all. Express. Express. Express. My ultimatum is இலக்கணம் தெரியலயேன்னு வருத்தப் படறது தவறு. நல்லா பேச ஆரம்பிச்ச பின்ன… உங்களுக்கே புரிஞ்சிடும். சரி. So I strongly state that, to speak not only English, but any language, GRAMMAR IS NOT A DIRE NECESSITY.” என்றார் ரகு.

(விவாதம் தொடரும்)

- சேலம் ப.சுந்தர்ராஜ்