வேலை ரெடி* வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

பொறியியல் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை!

நிறுவனம்: இந்திய ராணுவம்

வேலை: ஷார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படை யில் 53வது பயிற்சியுடன்கூடிய தேர்வு மூலம் டெக்னிக்கல் ஆஃபிசர் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 191. இதில் ஆண்கள் 175 மற்றும் பெண்கள் 16 இடங்கள் இருபாலினரும் திருமணமாகாமல் இருத்தல்  வேண்டும்

கல்வித் தகுதி: எஞ்சினியரிங் டிகிரி

வயது வரம்பு: 20 முதல் 27 வரை

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.2.19

தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

நீராதார வளர்ச்சித் துறையில் வேலை!

நிறுவனம்: நேஷனல் வாட்டர் டெவலப்மென்ட் ஏஜென்சி எனும் தேசிய நீராதார வளர்ச்சித் துறையில் வேலை

வேலை: ஜூனியர் எஞ்சினியர், ஜூனியர் அக்கவுன்டன்ட், ஸ்டெனோ மற்றும் லோயர் டிவிஷன் கிளர்க் எனும் 4 பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 73. இதில் எஞ்சினியர் 25, அக்கவுன்டன்ட் 7, ஸ்டெனோ 8 மற்றும் கிளர்க் 33 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி: 10வது, +2, எஞ்சினியரிங் துறையில் டிப்ளமோ, எஞ்சினியரிங் டிகிரி மற்றும் ஏதாவது ஒரு படிப்பில் டிகிரி  இருப்பவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 18 முதல் 27 வரை

தேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.2.19

தகவல்களுக்கு: www.nwda.gov.in

CISF-ல் ஹெட் கான்ஸ்டபிள் பணி!

நிறுவனம்: சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ். இது மத்திய அரசின்கீழ் இயங்கும் இந்திய  ராணுவத்தின் துணைப்பிரிவுகளில் தொழிற்சாலைப் பாதுகாப்புப் படைப் பிரிவு

வேலை: ஹெட் கான்ஸ்டபிள் பதவியிலான வேலை

காலியிடங்கள்: மொத்தம் 429. இதில் ஆண்கள் 328, பெண்கள் 37 மற்றும் எல்.டி.சி.இ 64 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 25 வரை

தேர்வு முறை: எழுத்து மற்றும் உடல் தகுதி சோதனை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.19

தகவல்களுக்கு: www.cisf.gov.in

இரும்பு உருக்கு ஆலையில் டெக்னீசியன் வேலை!

நிறுவனம்: செயில் எனப்படும் ஸ்டீல் அதாரிடி ஆஃப் இந்தியா இரும்பு உருக்கு ஆலையின் பொகாரோ கிளை

வேலை: ஆபரேட்டர் கம் டெக்னீசியன், அட்டென்டண்ட் கம் டெக்னீசியன் பிரிவுகளில் காலியாக இருக்கும் 275 இடங்களை  நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னியில் 95, பாய்லர் பிரிவில் 10, அட்டென்டண்ட் கம் டெக்னீசியன் பிரிவில்  டிரெய்னியில் 121, இதே பிரிவில் எஸ்.டி., பிரிவினருக்கு பிரத்யேகமாக 49 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி: ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பிரிவுக்கு எஞ்சினியரிங் டிப்ளமோ, அட்டென்டண்ட் கம் டெக்னீசியன் பதவிக்கு பத்தாம்  வகுப்பை முடித்து என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை உரிய டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

பயிற்சிக் காலம்: முதல் பிரிவுக்கு இரண்டு ஆண்டுகளும், இரண்டாவது பிரிவுக்கு ஒரு ஆண்டும் புரோபேஷன் முறையில் பணிபுரிய  வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.2.2019

முன்னாள் படைவீரர்களுக்கு யூனியன்  வங்கியில் வேலை!

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கி

வேலை: முன்னாள் படைவீரர்களுக்கான ஆர்ம்டு கார்ட் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 100

கல்வித் தகுதி: 10வது படிப்புத் தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 25க்குள்

தேர்வு முறை: எழுத்து மற்றும் உடல் திறன் சோதனை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.2.19

மேலதிக தகவல்களுக்கு: www.unionbankofindia.co.in

மத்திய அரசுத் துறைகளில்  ஜூனியர் எஞ்சினியர் பணி!


நிறுவனம்: எஸ்.எஸ்.சி. எனப்படும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான பணியாளர்களை தேர்வுகளின்  அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறது. இந்த முறை ஜூனியர் எஞ்சினியர் பதவியிலான வேலைக்காக அறிவிப்பு செய்துள்ளது

வேலை: பல்வேறு அரசுத் துறைகளில் ஜூனியர் எஞ்சினியர் வேலை. சிவில், மெக்கானிக்கல், குவாண்டிட்டி சர்வேயிங் மற்றும்  காண்ட்ராக்ட் துறைகளில் படித்தவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைக்கும்

காலியிடங்கள்: காலியிடங்கள் குறிப்பிடப்படவில்லை எனினும் 500 முதல் 1000 இடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

கல்வித் தகுதி: சிவில் மற்றும் மெக்கானிக்கல் வேலைக்கு அந்தத் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பும் மற்ற இரு  வேலைகளுக்கும் சிவில் துறையிலோ அல்லது அந்தந்த துறைகளிலோ டிப்ளமோ படிப்பு படித்திருக்கவேண்டும்

வயது வரம்பு: வேலைகளைப் பொறுத்து 27, 30 மற்றும் 32 வரை இருக்கலாம்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.2.19

தகவல்களுக்கு: https://ssc.nic.in

தொகுப்பு : டி ரஞ்சித்