ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்!

* பொது அறிவு
* அறிவியல் உலகம்

கடலின் மேல் பகுதியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழ்வதாக ஒரு காலத்தில் நம்பப்பட்டது. ஆனால், நீர்மட்டத்திற்குக் கீழே பல நூறு அடி ஆழத்திலும் ஏராளமான உயிரினங்கள் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினங்களுள் பெரும்பான்மையானவை பலவகை மீன்கள். இவற்றை ஆழ்கடல் மீன்கள் என்கிறோம். ஆழ்கடல் மீன்கள் தாம் வாழும் ஆழத்திற்கு ஏற்ப பல்வேறு நிறங்களைக் கொண்டிருக்கின்றன. ஒளி எட்டும் ஆழத்தில் வாழும் மீன்கள் பெரும்பாலும் நீலம் அல்லது பச்சை நிறத்தில் உள்ளன. 600 அடிக்குக் கீழ் வாழும் மீன்களில் பல வெண்ணிறமும், சிவப்பு நிறமும் கொண்டவை. 1000 அடிக்குக் கீழ் வசிக்கும் மீன்கள் பெரும்பாலும் கறுப்பாக இருக்கும்.

ஆழ்கடல் மீன்களில் பெரும்பாலானவை தன்னைவிட சிறிய மீன்களையோ வேறு பிராணிகளையோ பிடித்துத் தின்று வாழும் புலாலுண்ணிகள். ஆகவே, இவை கவ்விப் பிடிப்பதற்கு ஏற்றவாறு இவற்றின் வாய் பெரியதாக இருக்கிறது. சில மீன்களுக்கு நீண்ட வால் உண்டு. இவை இரையைத் தம் வாலினால் வளைத்துப் பிடித்துத் தின்னும். சில மீன்களுக்கு பெரிய தாடைகளும், பற்களும் உண்டு. விரியன் என்னும் மீனுக்கு நீண்ட பற்கள் உள்ளன. இந்தக் காரணத்தால் இந்த மீன் வாயை மூடாமல் எப்போதும் திறந்தவாறே வைத்திருக்கும்.

இதன் பல்லும், கண்களும் இருட்டில் பளிச்சிடும். இந்த ஒளியின் உதவியால் ஆழ்கடல் இருளில் இது உலவிவருகிறது. விரியன் மீனைக் (viper fish) கொலைகார மீன் என்றும் சொல்வார்கள். அந்த அளவுக்கு மிகவும் மூர்க்கமாக இருக்கும் இந்த மீன். ஆனால், இந்த மீன் இரண்டு அடி நீளம் வரைதான் வளரும். பெரிய கண்களும் ஊசி போன்ற கூர்மையான பற்களும் உண்டு. பிறந்தது முதல் இறக்கும் வரை வாயைத் திறந்தபடியே வைத்திருக்கும். வாயை மூட முடியாத அளவுக்கு இதன் பற்கள் மிக நீளமானவை. சாப்பிடாமல் நீண்ட நாட்கள் உயிர் வாழக்கூடிய ஆற்றல் இந்த மீனுக்கு உண்டு.

ஆழ்கடல் மீன்களுக்குப் போதிய அளவு உணவு கிடைப்பதில்லை. மேலும் இம்மீன்கள் கடல் ஆழத்தில் தண்ணீரின் பெரும் அழுத்தத்தைத் தாங்க வேண்டியுள்ளது. ஆகவே, ஆழ்கடல் மீன்களில் பல சிறியவையாகக் காணப்படுகின்றன.

பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்!

பருவநிலை மாற்றத்தால் மனிதர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதுபோலவே  பறவைகளும், விலங்குகளும் சந்திக்கும் பாதிப்புகளும் மிக அபாயகரமானவை. சமீபத்தில் அலாஸ்காவில் கொத்துக் கொத்தாக இறந்துகிடந்த பஃபின் பறவைகள் இறப்பிற்குப் பருவநிலை மாற்றமே நேரடி காரணமாக விளங்குவதாக எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. 2016ம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இடைப்பட்ட புனித பவுல் தீவில் உள்ள கடற்கரையில் பஃபின் பறவைகள் செத்துக் கிடந்தன. இதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சியில் இறங்கிய அமெரிக்க ஆய்வாளர்கள், கடந்த சில மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 9,000 பஃபின் மற்றும் சிலவகை கடல் பறவைகள் இறந்துள்ளன இவை அனைத்திற்கும் பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் எனக் கண்டறிந்துள்ளனர்.

கடலின் வெப்பநிலை உயர்ந்ததால் இந்த பஃபின் பறவைகள் உண்ணும் மீன்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்திருக்கின்றன. இதன் காரணமாக இந்த பஃபின் பறவைகள் பசியில் வாடி இறந்திருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மீனும், முதுகெலும்பற்ற கடல் உயிரிகளும்தான் இந்த பஃபின் பறவைகளின் உணவு. கடல் வெப்பநிலை உயர்வு இந்த உணவுச் சங்கிலியில் தாக்கம் செலுத்தி யிருக்கிறது. இதன் காரணமாக பஃபின் பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் டிமோதி ஜோன்ஸ், “இப்படி கொத்துக் கொத்தாக இறப்பது அதிகளவிலும், அடிக்கடியும் நடக்கிறது. இதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது” என்று ப்ளோஸ் ஒன் எனும் இதழில் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயரும் வெப்பமானது பறவைகள், வெளவால் மற்றும் காட்டில் வாழும் பிற விலங்குகள் மீதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.