தரமான பதிவுகள்!



வாசகர் கடிதம்

முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகளை IIT கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான JAM-2020 தகுதித் தேர்வு பற்றிய கட்டுரை விண்ணப்பித்தலுக்கு ஏதுவாக வழிகாட்டும் விதமாக அமைந்தது. மேலும் JEE MAIN நுழைவுத்தேர்வு பற்றிய கட்டுரையும் முழுமையாகவும் தெளிவாகவும் இருந்தது. உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தன.
  -ஆர்.மேரி, திருச்சிராப்பள்ளி.
 
விடாமுயற்சியும் சீரான பயிற்சியும்தான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. அன்று பள்ளிக் கட்டணம் கட்டமுடியாத நிலையில் இருந்து இன்று இன்டர்நேஷனல் பள்ளிகளின் தலைவராக உயர்ந்திருக்கும் கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கைப் பயணம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.
  -எஸ்.சோலைராஜ், சிவகாசி.
 
உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள், பலவித பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், பணி வாய்ப்புகள் என பல தகவல்களைத் தாங்கி வருவதுதான் கல்வி-வேலை வழிகாட்டியின் சிறப்பு. இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் புதிதாய் பிறப்போம் சரித்திரம் படைப்போம் மற்றும் உடல்மொழி பற்றி விவரிக்கும் நடை, உடை, பாவனை ஆகிய தொடர்கள் தரமான பதிவுகள்!
-இரா.செந்தில், வாணியம்பாடி.
 
குழந்தைகளின் திறனைக் கண்டறிந்து அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் பெற்றோர்களால்தான் பல்வேறு சாதனைகளையும் பிள்ளைகள் சாதிக்க முடியும். இதற்கு உதாரணமாக விளங்குகிறது வில்வித்தையில் சாதனை படைக்கும் சஞ்சனா மற்றும் ஓடுவதில் உலக சாதனை படைக்கும் சிறுவன் சர்வேஷ் குறித்த கட்டுரைகள்.
  -வி.முத்துமணி, ராஜபாளையம்.