டியர் டாக்டர்



இயற்கையின் பரிசு தலைப்பில் குடிதண்ணீரின் அருமை பெருமைகளைப் பொருள்பட எடுத்துரைத்திருந்தது, ‘நீர் எனும் அற்புதம்’ கட்டுரை. பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தளித்திருந்த விதம், கவனத்தினை ஈர்ப்பதாக இருந்தது.- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘மருத்துவ மகிமை’களை மிகச் சிறப்பாகவும் தெளிவாகவும் புரிய வைக்கும் அருமையான பகுதி அகராதி! - வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

குங்குமம் டாக்டரை எங்களின் குடும்ப டாக்டர் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் மருத்துவம் சம்பந்தமான கி tஷீ ஞீ தகவல்கள் இதுவரை அறிந்திடாதவை. பாராட்டுகள்!
- ஜி.கோகுல கிருஷ்ணன், திருவாரூர்.

‘அவருக்கு ஆண்மைப் பரிசோதனை நடந்தது, இவருக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது’ என நாளிதழ்களில் படித்திருக்கிறேன். ஆனால், அது எப்படி நடக்கிறது எனத் தெரியாமல் இருந்தேன். அதை என் குடும்ப டாக்டர் விரிவாக சொல்லிட்டாரு... சபாஷ்! சிறு குழந்தைக்கும் கூட சிறுநீரகக்கல் தாக்கும் என படிக்கும்போது மனமே பகீர் என்கிறது.
- எஸ்.துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம்.

மெல்ல மெல்ல மனிதனின் உயிர் குடிக்கிற புகையிலையின் உற்பத்தியை முடக்கினால்தான் உயிர்கள் பிழைக்கும் என்பதை கனமாக வலியுறுத்தி எழுதப்பட்ட கட்டுரை பாராட்டத்தக்கது!
மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்க செய்ய வேண்டிய மருத்துவ ரீதியான முயற்சிகளை விவரித்த கட்டுரை, இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சந்தோஷமூட்டும் என்பதில் ஐயமில்லை. - த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சிக்ஸ்பேக் - பெண்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற அபா(ய)ரச் செய்தி வியப்பூட்டுகிறது. சில ‘ப்ரிஸ்க்ரிப்ஷன்’களை நாம் தொலைத்துவிடக் கூடாது.  பத்திரப்படுத்திட வேண்டும். அத்தகைய ஒன்றுதான் ‘வலி நிவாரணிகள்’ பற்றியது. ‘என்ன கொடுமை சார் இது’ என அதிர்ந்தாலும் மார்பகப் புற்று நோய் பற்றிய உண்மையைக் கொண்டு ஆண்களையும் உஷார்படுத்தியது சூப்பர்! ‘டாட்டூ’வுக்கு ‘டூ’ விடுங்கள் என எச்சரித்துள்ளது தேவைதான்.
-  மஞ்சுளா பாய், வியாசர்பாடி.

‘சூரிய ஒளி’யின் அவசியத்தையும், அதை இழப்பதால் எலும்பு வலுவிழந்து போவது பற்றியும் கட்டுரை படித்தோம். காலையில் சிறிது நேரம் சூரிய ஒளி படும்படி நிற்பதன் அவசியத்தை எங்கள் குடும்பத்தில் அனைவரும் அறிந்து கொண்டோம்.
- கோமதி பழனிச்சாமி, ஆரல்வாய்மொழி.