செயற்கை காது !



லண்டனில் இருக்கும் ‘ராயல் ஃப்ரீ ஹாஸ்பிடல்’ உருவாக்கிய செயற்கைக் காது இது. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இருக்கும் பல தனியார் மருத்துவமனைகள் மனித உறுப்புகளை செயற்கையாக உருவாக்கி வருகின்றன.

 மனிதர்களின் ஸ்டெம் செல்லிலிருந்து இப்படி காது, மூக்கு, ரத்தக் குழாய்கள் என லேபாரட்டரியில் வளர்க்கப்படுகின்றன. இப்படி உருவான ரத்தக் குழாய்கள் சிலருக்கு பொருத்தப்பட்டுள்ளன என்றாலும், மூக்கு, காதுகள் இன்னும் பொருத்தப்படவில்லை. உலகின் முதல் செயற்கை மூக்கு இன்னும் சில தினங்களில் லண்டனில் ஒருவருக்கு பொருத்தப்பட இருக்கிறது.