சாப்பிடாமல் தூங்கும் சிங்கம்!



வட அமெரிக்காவிலுள்ள பசிபிக் கடற்கரையோரம் வாழ்கிறது, வாழைப் பழ நத்தை. இதனைக் வற்றைக் கையில் எடுத்தால் வழுக்கி கீழே விழுந்துவிடும். காரணம் என்ன தெரியுமா? இதன் உடலின்மீது கொழகொழப்பான பசை போன்ற திரவம் சுரக்கிறது.

மால்டீஸ் இனத்தைச் சேர்ந்த ‘ஸ்கூட்டர்’ என்னும் நாய்க்குட்டிதான் உலகிலேயே குள்ளமான நாய்க்குட்டி. இதன் உயரம் 3.2 அங்குலம்தான்.

மத்திய மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளின் பாலைவனங்களில் பாலைவனப் பூனை காணப்படுகிறது. உறுதியான பாதங்களைக் கொண்ட இந்த பாலைவனப் பூனைக்கு சிறுத்தையின் குணாதிசயங்கள் அப்படியே இருக்கும்.

‘கில்லர் வேல்’ என்ற திமிங்கலம் நீரின் மேல்பரப்புக்கு வரும்போது, இதன் இதயம் நிமிடத்துக்கு 60 முறையும்’ நீரின் கீழ்ப்பாகத்தில் இருக்கும்போது 30 முறையும் துடிக்கின்றது.

சிங்கங்கள் ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் வரை தூங்கும். இதனால் சில சமயம் ஓரிரு நாட்கள் சாப்பிடாமலே கூட இருந்துவிடும்.

‘காமன் ஸ்விஃபட்’ வகை பறவைகள் வாழ்க்கையின் பெரும் பகுதியை காற்றிலேயே கழிக்கும். உயரமான இடங்களில்தான் கூடுகள் கட்டும். பெரும்பாலும் தரையைத் தொட வரவே வராது.

வெள்ளையும் சிவப்பும் கலந்த மிக அழகான பறவை ஃப்ளமிங்கோ. இதன் கால்கள் உடலை விடப் பெரியவையாக இருக்கின்றன. ஃப்ளமிங்கோ தான் சாப்பிடும் உணவுகளில் இருந்து கிடைக்கும் கரோட்டினால் இந்த வண்ணங்களைப் பெறுகிறது.

முள்ளம்பன்றிக்கு உப்பு என்றால் மிகவும் பிடிக்கும். உப்புள்ள எந்தப் பாத்திரத்தையும் துளையிட்டு, உள்ளே இருக்கும் உப்பு முழுவதையும் அபகரித்து விடும். கனமுள்ள கண்ணாடி பாட்டில்களின் அடிப்பாகத்தைக் கூட உப்புக்காகத் தின்றுவிடும்.

 ஏ.ஃபைஹா, கீழக்கரை.